Photos



COURTESY – THE HINDU

(http://www.thehindu.com/news/national/day-in-pictures/article4073245.ece?homepage=true&ref=slideshow)

 


அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகளில் சில சமயம் இந்த மாதிரி வரி வரியாக, பட்டை பட்டையாக இருக்குமாம்.

ஐஸ் கட்டியில் உள்ள ஒரு பிளவில் உருகிய தண்ணீர் வேகமாக நிரம்பி நுரை ஏற்படுவதற்குள் உருகினால் நீல நிற பட்டை ஒன்று ஏற்படுமாம். ஐஸ் கட்டி தண்ணீரில் விழும்போது கடல் நீர் கட்டியின் அடியில் கிடுகிடுவென்று உறையும். அப்படி உறையும் தண்ணீரில் பாசி இருந்தால் அது பச்சை நிற பட்டையாக மாறுமாம். பழுப்பு, கருப்பு, மஞ்சள் நிற பட்டைகள் “மண்ணால்” ஏற்படுகின்றனவாம்.

எது எப்படி இருந்தால் என்ன? பார்க்க அழகாக இருக்கின்றன!

தொகுக்கப்பட்ட பக்கம்: புகைப்படங்கள்


ஒரு ஃபோட்டோ கண்ணில் பட்டது. 2009 ஜனவரியில் நியூ யார்க்கிலிருந்து ஒரு ஜெட் விமானம் கிளம்பி இருக்கிறது – யு.எஸ். ஏர்வேஸ் ஏர்பஸ் ஃப்ளைட் 1549. கிளம்பிய சில நிமிஷங்களில் பறவைகள் கூட்டம் ஒன்று அதில் மோதி இருக்கிறது. எஞ்சின்கள் செயலிழந்துவிட்டன. பைலட் சாமர்த்தியமாக நியூ யார்க் நகரத்தில் ஓடும் ஹட்சன் நதியில் விமானத்தை இறக்கி இருக்கிறார். பயணிகள் விமானத்தில் இறக்கைகளிலும் சில பல மிதவைகளிலும் நின்றும்/உட்கார்ந்தும் கொண்டு காப்பாற்ற வருபவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் காட்சி.

உயிர் சேதமில்லாமல் காப்பாற்றிய பைலட்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஃபோட்டோ பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: விக்கி குறிப்பு