Miscஎன் பதிவுகளில் – குறிப்பாக சாமியார்கள், ஆன்மிகம் பற்றி எழுதும் பதிவுகளில் – சாமியார் புரிந்த அற்புதம் என்றால் ஒரு இளக்காரம் தெரியத்தான் செய்கிறது. என்னைப் பொறுத்த வரையில் மனித வாழ்க்கை என்பதே பெரிய அற்புதம். இதற்கு மேலும் அற்புதங்களைப் புரிந்து – செங்கடலைப் பிரித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க மழை பொழிய வைத்து, தீக்குளிக்க வைத்து அதன் பின் பூணூல் போட்டு சிதம்பரம் கோவிலில் நுழைய வைத்து, ஒரே நேரத்தில் பெங்களூரிலும் திருவண்ணாமலையிலும் காட்சி அளித்து கடவுள் தன் இருப்பை நமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் என்ற கருத்தாக்கத்துக்கு என்ன தேவை என்றே என் தர்க்க அறிவுக்கு புலப்படவில்லை. (இருந்தாலும் நான் கோவிலுக்குப் போவதையும் சாமி கும்பிடுவதையும் விடுவதற்குமில்லை. உணர்வு ரீதியாக கடவுள் என்ற ஊன்றுகோலின் அவசியம் எனக்கு இருக்கிறது, அப்படி இருப்பதில், இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்வதில் எல்லாம் எனக்கு எந்த கூச்சநாச்சமும் இல்லவும் இல்லை.) உலகில் நடக்கும் எல்லாவற்றையும் அறிவு, தர்க்கம், இயற்கையின் விதிகள் இவற்றின் மூலம் அறிவதையே விரும்புகிறேன். நம் தொன்மங்கள் யாவும் – ராமாயணம், மகாபாரதம், திருப்பாணாழ்வார், சோகாமேளர், பத்ராசல ராமதாசர் இன்னும் பலப்பல – இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடந்த உண்மை நிகழ்ச்சிகளின் மேல் எழுப்பப்பட்ட புனைவுகளே என்று நான் கருதுகிறேன். பத்ராசல ராமதாசரின் மாமன்மார்கள் கோல்கொண்டா சுல்தானின் அரசவையில் முக்கிய அமைச்சர்கள், அவர்களுக்காகத்தான் – ஒரு வேளை அவர்கள் பாக்கி வரியைக் கட்டி இருக்கலாம் – ராமதாசர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், ராமனும் லக்ஷ்மணனும் சுல்தானுக்கு பாக்கி வரியைக் கட்டி இருக்கமாட்டார்கள்.

ஆனால் நம் அறிவுக்கும் தர்க்க ஞானத்துக்கும் மீறிய சங்கதிகள் உலகில் உண்டு. ஒரு மண் புழுவால் ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொள்ள முடியுமா? நமக்கு அதிசயமாகத் தெரியும் நிகழ்ச்சிகளும் (நம்மால் புரிந்து கொள்ள முடியாத) விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். இதை நான் உணர்ந்தாலும், நம்மிடம் இருக்கும் கருவியைத்தானே பயன்படுத்த முடியும்? ஒரு அதிசய நிகழ்ச்சி என்றால் அங்கே முதலில் Occam’s Razor கோட்பாட்டை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். நித்யானந்தா திருவண்ணாமலையிலும் பெங்களூரிலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்று சாரு நிவேதிதா சொன்னால் சாரு கப்சா விடுகிறார் என்ற விளக்கம் நித்யானந்தா இயற்கை விதிகளை மீறி இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பதை விட ஏற்கக் கூடியதாக இருக்கிறது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்றால் முதலில் அவர் இறந்தாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சும்மா கல்லறை பக்கம் தூங்கிவிட்டு எழுந்து வருபவரைப் பார்த்து உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள் என்ற சாத்தியம் முதலில் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது இயற்கை விதிகளுக்கு முரணாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

அப்புறம் பாருங்கள் இந்த சாமியார் அற்புதம் புரிந்தார் என்று சொல்பவர்கள் அனேகரும் அது தன் நண்பனுக்கு நடந்தது, சித்தப்பாவின் மச்சினிக்கு நடந்தது என்றுதான் சொல்கிறார்கள். தனக்கு நடந்தது என்று சொல்பவர்கள் குறைவு. அப்படி தனக்கு நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கும் தற்செயல் உள்ளிட்ட சாதாரண விளக்கங்கள் இருக்கலாம். அப்படி தனக்கு நடந்ததாக சொல்லி, வேறு எந்த சுலபமான விளக்கமும் தர முடியாவிட்டால் மட்டுமே அற்புதம், அதிசயம் என்று ஒரு நிகழ்ச்சியை விவரிக்கலாம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால் என் வாழ்விலும் என்னால் விளக்க முடியாத ஒரு அதிசய நிகழ்ச்சி உண்டு. இது என் சொந்த அனுபவம், என் அத்தையின் மாப்பிள்ளையின் பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அனுபவம் அல்ல.

இது நடந்து ஒரு இருபது வருஷம் இருக்கலாம். எம்.டெக். முடித்துவிட்டு வேலையில் சேரும் முன் ஆறேழு வாரம் இடைவெளி. என் நண்பன் அரவிந்த கிருஷ்ணனைப் பார்க்க (சேலத்தின் அருகே இருக்கும்) ஆத்தூர் போயிருந்தேன். அவன் அப்போது தியானம், கியானம் என்றெல்லாம் மும்முரமாக இருந்தான். நானோ அப்போதெல்லாம் (இப்போதும் கூட) பிரார்த்தனை என்பது தனிப்பட்ட விஷயம், கூட்டு பஜனை, பிரார்த்தனை இத்யாதியின் ஒரே பயன் ஓசியில் கிடைக்கும் சுண்டல்தான் என்று நினைத்தவன்/நினைப்பவன். இவன் என்னை வலுக்கட்டாயமாக ஒரு தியானக் கூட்டத்துக்கு இழுத்துக் கொண்டு போனான். நான் எத்தனையோ சொல்லிப் பார்த்தேன் – நான் தியானம் கியானம் எல்லாம் பண்ணும் டைப் இல்லை, அங்கே வந்து அடக்க முடியாமல் சிரித்துவிட்டால் உனக்குத்தான் பிரச்சினை என்று பயமுறுத்திக் கூடப் பார்த்தேன். அப்படிப்பட்ட ஆட்களைத்தான் எங்கள் குரு விரும்புகிறார் என்று அவன் என்னை விடாக்கண்டனாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.

அங்கே போனால் ஒரு பதினைந்து இருபது பேர் ஒன்றாக உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறார்கள். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்ததோ என்னவோ நினைவில்லை. நானும் தலையெழுத்தே என்று கோஷ்டி கானம் பாட உட்கார்ந்தேன். இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் புள்ளியில் focus செய், அதை மட்டும் தனியாக உணரப் பார், நீ சரியாக concentrate செய்தால் உனக்கு ஒரு அனுபவம் ஏற்படும் என்று சொன்னார்கள். என்ன அனுபவம் என்று விவரமாக சொன்னார்களா என்று நினைவில்லை, அப்படி சொன்னது அரவிந்த கிருஷ்ணன்தானா என்றும் நினைவில்லை. ஒரு பத்து நிமிஷம் அப்படி செய்து பார் என்று சொன்னார்கள். நானும் முயற்சி செய்தேன். இரண்டு மூன்று நிமிஷங்களில் என் புருவங்களின் மத்தியில் குறுகுறு என்ற ஒரு உணர்ச்சி – யாரோ நகத்தை வைத்து சுரண்டுவது போல, கொஞ்சம் வெப்பமாக உணர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் அது தொடர்ந்து கொண்டே இருந்தது. தியானம் முடிந்த பிறகும் அந்த உணர்ச்சி தொடர்ந்தது.

அரவிந்த கிருஷ்ணன் மிகவும் excite ஆகிவிட்டான். இப்படி முதல் இரண்டு மூன்று நிமிஷங்களிலேயே ஏற்படுவது மிக அபூர்வமாம். குருவிடம் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன், உனக்கு தீட்சை கொடுப்பார் என்று சொன்னான். அவன் குரு பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் (ஏத்தாப்பூர்?) இருந்தார். குடும்பஸ்தர். அரசு கால்நடை மருத்துவராக வேலை பார்த்தார் என்று நினைவு. அவர் பேரையும் மறந்துவிட்டேன். அடுத்த நாளோ என்னவோ பஸ்ஸில் போனோம். மிகவும் அழகான கிராமம். அவர் வீடு கொஞ்சம் பெரியது. பணக்காரரோ இல்லையோ, ஓரளவு வசதியானவர்தான். வீட்டுக்கு எதிரில் கூரை வேய்ந்து தியானம் செய்பவர்களுக்காக பெரிய மண்டபம் மாதிரி இருந்தது. தீட்சை கொடுக்க வேண்டுமென்றால் சாதாரணமாக ஒரு மாதம்(?) தியானம் செய்து பழக வேண்டும், அப்போதுதான் தர முடியும் என்று சொன்னார். அரவிந்த கிருஷ்ணன் இவன் வெளியூர்க்காரன், வேலையில் சேர ஹைதராபாத் வேறு போக வேண்டும், ஒரு மாதம் கழித்து வருவது கஷ்டம், இரண்டு நிமிஷத்திலேயே அந்த உணர்வு வந்துவிட்டது என்றெல்லாம் சொன்னான். எனக்கோ தீட்சை கொடுத்தால் சந்தோஷம், கொடுக்காவிட்டால் அதை விட சந்தோஷம் என்ற மனநிலைதான். அவர் அரவிந்த கிருஷ்ணன் முகத்துக்காக அரை மனதோடு எனக்கு தீட்சை கொடுத்தார். தீட்சை கொடுப்பது என்றால் அவர் ஒன்றும் மந்திரம் மாயம் செய்யவில்லை. உனக்கு தீட்சை கொடுக்கிறேன், நீ தினமும் காலை மாலை இரண்டு முறை பத்து நிமிஷம் உன் புருவத்தின் மத்தியில் இருக்கும் அந்த புள்ளியை உணரப் பார் என்று சொன்னார், அவ்வளவுதான். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பார் என்று சொன்னார்.

எனக்கு அந்த உணர்வு போகவே இல்லை. எப்போதும் கொஞ்சம் சூடாக இருக்கும், யாரோ சுரண்டுவது போலவே இருக்கும். நின்றால், நடந்தால், சாப்பிட்டால், படித்தால், காலைக்கடன் கழித்தால், எப்போதும் இருக்கும். முழிப்பு இருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்த வெப்பத்தையும் குறுகுறு என்பதையும் உணர்ந்தேன். நான் அன்றைக்கு அங்கிருந்து கிளம்பி வேறு நண்பர்களைப் பார்க்கப் போனேன். இரண்டு மூன்று நாளாயிற்று, இந்த உணர்வு நிற்கவே இல்லை. எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன். அப்படியும் அந்த உணர்வு போகவில்லை. எப்படியாவது இதை நிறுத்த வேண்டும் என்று முயற்சித்தேன், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வாரக் கெடுவுக்கு முன்னாலேயே நண்பனுடன் அவர் முன்னால் போய் நின்றேன். எனக்கு இந்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன். அவர் நீ இன்னும் தயாராகவில்லை என்று சொல்லி, என் தீட்சையை வாபஸ் வாங்கினார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த உணர்ச்சி இருந்தது. ஆனால் மெதுமெதுவாக குறைந்துகொண்டே போனது.

இது psychosomatic நிகழ்ச்சி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அவ்வளவுதான் என்று எனக்கே இன்னும் கூட முழு நம்பிக்கை வரவில்லை. இன்றிருக்கும் தெளிவு அன்றிருந்தால் அந்த உணர்வை நிறுத்த எல்லாம் முயற்சித்திருக்க மாட்டேன். மீண்டும் அப்படி என்னால் உணர முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. எனக்கு அது இன்று ஒரு பெரிய regret ஆகத்தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நமக்குத் தெரிந்த அறிவியல், தர்க்கம் ஆகியவற்றை மீறிய விஷயங்கள் உண்டு என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது. ஆனால் அறிவியலையும், தர்க்கத்தையும் விட சிறந்த கருவிகள் என்னிடம்/நம்மிடம் இல்லை, அதனால் அவற்றை வைத்துத்தான் எல்லாவற்றையும் எடை போட வேண்டி இருக்கிறது. யாராவது மந்திரம், மாயம் என்றால் நம்பாதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். எனக்கு நடந்தது என்றால் பேசுங்கள் – என் நண்பனின் நண்பனுக்கு நடந்தது, என் சித்தப்பா கேட்ட கதை என்று வருவதெல்லாம் கட்டுக்கதை இல்லை என்று நினைக்க நமக்கு எந்த முகாந்தரமும் இல்லை.

அரவிந்த கிருஷ்ணனுடன் டச் விட்டுப்போய்விட்டது. அந்த குருவின் பேர் தெரியவில்லை. அந்த கிராமத்தின் பேர் ஏத்தாப்பூர் என்று நினைக்கிறேன், ஆனால் சரியாகத் தெரியவில்லை. உங்கள் யாருக்காவது தெரியுமா?


COURTESY – THE HINDU

(http://www.thehindu.com/news/national/day-in-pictures/article4073245.ece?homepage=true&ref=slideshow)

 


கீழே உள்ள விவரங்கள் நண்பர் ராஜன் மூலமாக.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இந்தியாவில் அவர்கள் விட்டு விட்டு வரும் நெருங்கிய சொந்தங்கள், முக்கியமாக பெற்றோர்கள். இளைமைப் பருவத்தில் கல்லூரிப் படிப்புக்காகவோ, ஐ டி வேலைக்காகவோ அமெரிக்கா வரும் பொழுது வேறு பல சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட இந்தியாவில் உள்ள குடும்பத்தில் அனேகமாக எந்தவிதக் குழப்பங்களும் இருக்காது. அப்பொழுது பெற்றோர்கள் சற்று இளமையாக இருப்பார்கள். பெரிய நோய்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களைப் பிரிந்து வருவது அவ்வளவு சிரமமான காரியமாக இரு தரப்பாருக்குமே இருக்காது. காலப் போக்கில் திருமணம் புரிந்து பிள்ளைகளைப் பெறும் சமயங்களிலும் அதற்கு முன்பும் பின்புமாக பெற்றோர்களை இங்கு அழைத்து வந்து அமெரிக்கா சுற்றிக் காண்பித்து, பிரசவ சமயத்தில் உதவிக்கு வைத்துக் கொண்டு, பின்னர் பிள்ளைகளை வளர்க்கும் காலம் வரையிலும் அவர்கள் வந்து சென்று கொண்டிருப்பார்கள். பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பள்ளி இறுதி வகுப்புக்குச் செல்லும் முக்கியமான தருணத்தில் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கு வயதாகியிருக்கும், நோய் வாய்ப்பட்டிருப்பார்கள், கீழே விழுந்திருப்பார்கள், நடமாட்டம் குறைந்திருக்கும் இன்னும் ஏராளமான மூப்பின் காரணமான சிக்கல்கள் உருவாகியிருந்திருக்கும். அந்தக் காலக் கட்டத்தைச் சமாளிப்பது பெரும்பாலான அமெரிக்க இந்தியர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமையும். இந்தப் பிரச்சினை அனேகமாக பிற நாட்டினருக்கு இருக்காது அல்லது அவர்களுக்கு வேறு வசதி வாய்ப்புகளும் சமூக வசதிகளும் இருக்கும். ஆனால் இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் முதியோர்களின் பாதுகாப்பு அவர்களது வாரிசுகளின் பொறுப்பிலேயே விடப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல மூத்தோர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவில் இருப்பதில்லை. இங்கு சமூக காப்பீட்டுத் திட்டம் என்பதே நம் கலாச்சாரம் தான். பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும் என்ற கலாச்சாரமே இந்தியாவில் வயதானவர்களின் எதிர்காலத்திற்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான அரணாக விளங்குகிறது. இது முற்றிலும் பாதுகாப்பான ஒரு அமைப்பு என்று சொல்லி விட முடியா விட்டாலும் கூட ஓரளவுக்கு இந்த சமூகப் பாதுகாப்பு இயங்கி வருவதை மறுக்க முடியாதுதான்.

அமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கு வீடு எல்லாம் வாங்கி வேலைகள் பல வாங்கி பச்சை அட்டை, குடியுரிமை எல்லாம் வாங்கி, பிள்ளைகள் பள்ளி இறுதியிலோ கல்லூரி செல்லும் வயதிலோ இருக்கும் பொழுதுதான் ஊரில் உள்ள பெற்றோர்களின் வியாதிகளும் வயதும் முற்றி அவர்களுக்கான துணையின் அவசியமும் ஏற்படும். அந்த இக்கட்டான சமயத்தில் பலரும் இங்கும் இருக்க முடியாமல் அங்கும் செல்ல முடியாமல் அங்கிருக்கும் பெற்றோர்களை அநாதவராக விடும் நிலையிலோ உடன் பிறந்தாரின் பொறுப்பிலோ உற்றாரின் பொறுப்பிலோ விட வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். உடன் பிறந்தவர்களே கூட ”நீ அமெரிக்காவில் வசதியாக வாழும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் வயதான பெற்றோர்களை கவனிக்க வேண்டும் ?” என்ற குடும்பப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்வார்கள். இந்த நிலை எல்லாம் தேவைப் படாமல் வயதானாலும் இறுதி வரை ஆரோக்யமாக வாழும் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்கள் அன்புடனும் கரிசனத்துடன் கவனித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் அமையப் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு ஒரு மாபெரும் சிக்கலாக உருவெடுத்து நிரந்தரமாக ஊருக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயதான பெற்றொர்களை இங்கு அழைத்து வருவதும் ஒரு தீர்வு அல்ல, முதலில் விசா கிடைப்பது கஷ்டம் அப்படியே கிடைத்தாலும் இங்குள்ள மருத்துவச் செலவு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமானது. ஆகவே ஊரில் அவர்களைக் கவனித்துக் கொள்ள உரிய நபர்கள் இல்லாதபட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் படிப்பை அங்கு மாற்றிக் கொண்டு அவர்களை மன ரீதியாகவும், பழக்கப் படாத புதிய கல்விச் சூழலிலும் கொண்டு செல்கிறார்கள். இது அனேகமாக பெரும்பாலான இந்தியர்கள் எதிர் கொள்ளும் மாபெரும் சிக்கல்.

இந்த சிக்கலில் இப்பொழுது நானும் தள்ளப் பட்டிருக்கிறேன். மகள் பள்ளிப் படிப்பின் கடைசி இரு வருடத்தில் நிற்கும் பொழுது என் மனைவியின் தந்தை படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். எனது கிராமத்து வீட்டில் அவரைத் தங்க வைத்து சமையலுக்கு ஒரு உறவினரை ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் வீட்டளவில் நடமாடிக் கொண்டிருந்தார். 80 வயதில் மிக வேகமாக முதுமையை எட்டி விட்டார். முன்பு தாக்கிய ஒரு வித ஆர்த்ரைடிஸ் நோயால் பேச்சு, கை கால்களின் செயல் பாடு அனைத்தும் முடங்கி விட்டன. ஒருவர் உதவியில்லாமல் அவரால் நகர முடியாத நிலையை சென்ற வாரம் அடைந்து விட்டார். இது வரை அவ்வப் பொழுது பார்த்து உதவிக் கொண்டிருந்த நெருங்கிய உறவினர் அனைவரும் இனி எங்களால் கவனித்துக் கொள்ள முடியாது உடனடியாக ஊருக்கு வரவும் என்று அபாய அறிவுப்பு அளித்து விட்ட நிலையில் நாங்களும் ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் ஊருக்கு வரும் வரையிலாவது 24 மணி நேரமும் உடன் இருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு உதவியாளரைத் தேடிக் கொண்டிருந்தோம். பலரும் கோட்டயத்தில் உள்ள ரெட் கிராஸ் அமைப்பை அணுகுமாறு அறிவுறுத்தினார்கள். அவர்களிடம் விசாரித்ததில் ஒரு மாதம் கழித்துதான் உதவி அனுப்ப முடியும் என்று சொல்லி விட்டனர். ஆதலால் மேலும் பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டிருந்தேன்.

அவசரகதியில் மேலும் இணையத்தில் தேடியதில் கோயமுத்தூர் ( New No:191/Old No 204 Dr.R.K.Road, Tattabad, Sivanandha Colony, Coimbatore-12, Phone: 9894637363.) என்ற முகவரியில் டாட்டாபாட் சிவானந்தா காலனியில் இருந்த ஏவிஜி ஹோம் நர்ஸ் சர்வீஸ் என்ற ஏஜென்சியில் மட்டும் உடனடியாக ஒரு உதவியாளரை அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்கள். அங்கிருந்த மகாலட்சுமி என்னும் அதன் உரிமையாளர் என்னிடம் பேசினார். நானும் கோயமுத்தூரில் உள்ள எனது உறவினர் ஒருவரை அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவரும் போய் விட்டு அவர்கள் நன்றாகப் பேசுகிறார்கள் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றாக இருந்தால் தொடரலாம் என்று சொன்னார். அவர்கள் 28 நாளுக்குச் சம்பளமாக 12000 ரூபாய் கேட்டார்கள். பணத்தைக் கட்டி விட்டு ராஜேஸ்வரி என்ற உதவியாளரை அழைத்துப் போவதற்காக ஊரில் இருந்து எனது இன்னொரு மாமாவை போகச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனே கிளம்பி கோயமுத்தூர் போய் அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு ஊரில் கொண்டு போய் எங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.

சென்ற வியாழன், அக்டோபர் 18 அன்று வீட்டுக்கு வந்த அந்தப் பெண், ஞாயிறு அன்று மாலையில் வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் பீரோவைத் திறந்து அதில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு என் நினைவில்லாமல் கிடந்த மாமனாரையும் தனியாக விட்டு விட்டு கரண்டு இல்லாத மழை நேர இருட்டைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டார்.

வீடு திறந்து கிடப்பதையும், மாமா தனியாகக் கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும், துணிமணிகளும் பாத்திரங்களும் இறைந்து கிடப்பதையும் கண்ட உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக என்னை அழைத்துத் தகவல் தெரிவித்தார்கள். உடனே நான் அந்த கோயமுத்தூர் ஏஜென்ஸியின் மகாலட்சுமியை அழைத்து விசாரித்தேன். அந்தப் பெண்மணி தனக்கு எதுவும் தெரியாது காலையில் மீண்டும் அழையுங்கள் என்றும் மழுப்பினார். மீண்டும் மீண்டும் அழைத்த பொழுது ராஜேஸ்வரியிடம் பேசியதாகவும் உடனே ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லியிருப்பதாகவும் அவர் சாமான்களுடன் வீட்டுக்கே திரும்பி வந்து விடுவார் என்றும் கூறினார். ஆனால் இரவு முழுவதும் அந்தப் பெண் திரும்பவில்லை. மறுநாள் மீண்டும் அழைத்த பொழுது அவள் கோயமுத்தூருக்கே வந்து விட்டதாகவும், அவளுக்கு சாப்பாடு பிடிக்காமல் போனதால் திரும்பி விட்டதாகவும், யாரிடமும் சொன்னால், இருக்கச் சொல்லி வற்புறுத்துவார் என்பதினால் சொல்லாமல் வந்ததாகவும் கூறினார். மேலும் அவள் எந்தப் பொருளையும் திருடவில்லை என்றும் இருவரும் சாதித்தார்கள். நான் மீண்டும் அழைத்த பொழுது உன்னால் முடிந்ததைப் பார்துக் கொள். உன் வீட்டில் களவு போன பொருட்களுக்கு எல்லாம் நானும், அந்தப் பெண்ணும் பொறுப்பாக மாட்டோம், நீங்கள் கட்டிய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் உன்னால் ஆனதைச் செய்து கொள் என்று மிகவும் திமிருடன் பேசினார். அதன் பின் என் கோவை உறவினரை அனுப்பி நாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்கச் சொல்லி விட்டேன்.

இவர்களை நம்பி வயதான ஒருவரை ஒப்படைத்ததிற்கு அவரைத் தனியாக விட்டதுடன் அல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களையும் திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த ஏஜென்ஸி நடத்தும் அந்த மகாலட்சுமியும் இந்தத் திருட்டுக்கு உடந்தையா என்பது தெரியவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டே திருடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. உடனடியாக் என் உறவினர்களை ஒரு புகார் கொடுக்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் மோசமான இந்தப் பெண்கள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் என்பதினால் அவர்கள் என் உறவினர் மீது ஏதேனும் பொய் வழக்குக் கொடுத்து விடலாம் என்ற அச்சத்தினாலும் போலீஸ், கேஸ், வழக்கு என்று எதற்காகப் போக வேண்டும் என்ற கிராமத்தில் வசிப்பவர்களின் இயல்பான பயத்தினாலும் புகார் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இப்படி ஒரு முதியவரை தவிக்க விட்டு விட்டு திருடிக் கொண்டு போனவர்கள் எந்த பொய் வழக்கையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. மேலும் நமது போலீஸ் அமைப்பை பொது மக்கள் இயல்பாக அணுகவே தயங்கும் நிலையில் அவர்களது செயல்பாடுகளும் உள்ளது.

அதனால் குற்றம் நடந்த இடத்தில் எந்த புகாரையும் இது வரை எவரும் கொடுக்கவில்லை. ஆகவே நானே புகாரைக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் கோவை கமிஷனரின் வெப் சைட்டில் கீழ்க்கண்ட புகாரை இட்டிருந்தேன். கண்ட்ரோல் ரூமை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் வெப் சைட். ஃபேஸ் புக் எல்லாம் பார்ப்பதில்லை எனவும் cop…@yahoo.com என்ற முகவரிக்கு புகார் அனுப்பினால் பார்ப்போம் என்றும் சொன்னதன் பேரில் கீழ்க்கண்ட புகாரை அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தேன். இமெயில் எல்லாம் அவர்கள் படித்து அதன் படி நடவடிக்கை எடுப்பார்களா என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நேற்று மீண்டும் அழைத்த பொழுது அது இன்னொரு டிப்பார்ட்மெண்ட் என்று கூறினார்களே ஒழிய புகார் வந்ததா அதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற விஷயம் எதையும் கமிஷரின் உதவியாளர் தெரியப் படுத்தவில்லை. தூத்துக்குடி எஸ் பி ஆபீஸுக்கு அழைத்து நான் இங்கிருந்து இமெயில் மூலமாகவோ ஃபாக்ஸ் மூலமாகவோ புகார் கொடுக்க விரும்புகிறேன் என்னு சொன்ன பொழுது நீங்க என்னனென்னமோ சொல்றீங்க எங்களுக்கு அதெல்லாம் தெரியாது வேண்டுமானால் நேராக வந்து புகார் கொடுக்கவும் என்று சொன்னார்கள். எஸ் பி யிடம் நேரடியாக பேச முடியவில்லை. இணையத்தில் கிடைக்கப் பெற்ற ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பி வைத்திருக்கிறேன். அது உரியவர்களிடம் செல்லுமா என்பது தெரியவில்லை. இவர்கள் எவரிடம் இருந்தும் உரிய பதில் இன்னும் இரு நாட்களுக்குள் வராத பட்சத்தில் முதல்வரின் குறை தீர்ப்பு மையத்துக்கும் புகாரை அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளேன்.

எனக்கு காணாமல் போன வெள்ளிப் பாத்திரங்கள் பெரிய விஷயமில்லை. அதிக பட்சம் அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம். ஆனால் இப்படித் துணிவாகத் துரோகம் செய்து விட்டு வயதான நோயாளியை அநாதரவாக விட்டு விட்டு வீட்டுப் பொருட்களையும் திருடிக் கொண்டு போன அயோக்கியர்கள் கண்டிப்பாக விசாரிக்கப் பட்டுத் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் செய்த நம்பிக்கை மோசடியைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

இதைப் படிக்க நேரும் நண்பர்களில் பத்திரிகைத் தொடர்பு இருப்பவர்களும் கோவை போலீஸாரில் தொடர்பு இருப்பவர்களும் இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுக்க உதவுமாறு வேண்டுகிறேன். இனிமேலும் எந்த ஒரு அப்பாவிகளும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவாவது இந்த நிறுவனம் குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்கள் எச்சரிக்கப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே உங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினையாக அணுகாமல் சமூகப் பாதுகாப்பு சம்பந்தப் ப்ட்ட பிரச்சினையாகக் கருதி உதவவும். என் பொருட்களைத் திரும்பப் பெறுவது முக்கியமே இல்லை. குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு இந்த நிறுவனம் முடக்கப் பட்டால் எதிர்காலத்தில் வேறு எவரும் இவர்களினால் ஏமாற்றபட மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இந்தக் கோரிக்கையை இங்கு இடுகிறேன்.

தயவு செய்து இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிட்டு இந்த மோசடி நிறுவத்தினால் வேறு எவரும் பாதிக்கப் படாமல் தவிர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏஜென்சி பற்றிய முழு விபரமும் கோவை கமிஷனருக்கு நான் அனுப்பிய இமெயில் புகாரையும் கீழே காணலாம். இது குறித்து வேறு எந்தத் தகவல் தேவையென்றாலும் உடனே தெரிவிக்கவும். இதைப் பத்திரிகையில் வெளியிடவும் போலீசாரை நடவடிக்கை எடுக்க வைக்கவும் உதவவும். குறைந்த பட்சம் இந்த மோசடி பற்றிய ஒரு செய்தியையாவது எந்தவொரு தினசரியிலாவது வெளியிட்டு இந்த திருட்டுக் கும்பலை மக்களிடம் அடையாளம் காண்பிக்க உங்களால் இயன்ற உதவியைச் செய்யவும். போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளியாகாமல் போனால் மீண்டும் மீண்டும் இவர்கள் பல அப்பாவிகளையும் ஏமாற்றுவது தொடரும். பொது நலம் கருதியும் உங்கள் மேலான உதவியை இந்த விஷயத்தில் நல்கவும். இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப் பட்டால் தெரிவிக்கவும். அந்த ஏஜென்சி பற்றிய முழு விபரத்தையும் கீழ்க்கண்ட புகாரில் காணவும்.

முக்கியமாக கோவையில் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் கோவை போலீஸ் கமிஷனரிடம் நான் ஏற்கனவே அனுப்பியிருக்கும் எனது கீழ்க்கண்ட புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரவும். இந்த விஷயத்தை கோவை பத்திரிகைகளிடம் கொண்டு செல்லவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

ராஜன்

Dear Sir

My name is ThirumalaiRajan Sadagopan. I am a NRI living in California, CA, USA. As my father in law, Mr.Srinivasan, 80 year old retired Tashildhar was staying alone at our home in our native place in a village in Thoothukudi Dist has fell down and collapsed last week, we were searching for a home nurse help. As he was totally indisposed and required somebody to take care of even his basic needs we were looking for some urgent help. As we could not travel immediately to India, we were desperately searching for a nurse help till we reach India. We found an agency by name AVG Home Nurse Service in Coimbatore through a web site AVG Home Nurse Service .

This AVG Nurse Service is located at New No:191/Old No 204 Dr.R.K.Road, Tattabad, Sivanandha Colony, Coimbatore-12, Phone: 9894637363. I contacted this agency and spoke with one Mrs.Mahalakshmi, who is running this agency and placing nurse help to the customers. I also sent one of my relatives in Coimbatore to check with them. She collected Rs.12,000 as one month salary and immediately arranged for an assistant by name Rajeswari to help my uncle. She assured complete safety and integrity of her employee. One of my relatives went to Coimbatore and escorted that assistant Rajeswari to our home in a village. She started her job of helping my uncle since last Thursday, Oct 18th and it was going well for the next three days.

On last Sunday evening around 6 PM, when there was no power at the entire village and when it was raining and my uncle was also unconsciously sleeping, she opened the safe in our house took all the silver items, some cash and ran away from the home by abandoning the indisposed old man. She did not inform my ailing uncle or anybody else and sneaked out of the village without any body’s notice under the cover of dark rainy night. Fortunately that lady did not harm my uncle. She was talking to somebody over her cell phone for the whole day it seems. Further she was inquiring about the local people on the various routes. Cleverly using the cover of darkness, she just ransacked the safe and took the silver items and money and got away in stealth.

On seeing an unlocked home,abandoned patient and a ransacked steel cupboard, the neighbors and relatives got shocked and they immediately called me in the US and alerted me. I immediately called the AVG Nurse Service”s owner Mrs. Mahalakshmi and informed about the crime committed by her employee. Mahalakshmi feigned ignorance and was not giving us any convincing reply and asking us to wait and hold from complaining this incident to the police till morning. Mahalakshmi was kept promising us that her employee will come back to our come along with the stolen articles. But her employee never returned back. By Monday morning when i called Mahalakshmi again, she told her help reached back Coimbatore and both Mahalakshmi and Rajeswari claimed innocence and refused to take any responsibility. Mahalakshmi challenged me to go and complain to anybody. She told me audaciously that she can not be held responsible for her employee’s crime. She returned the salary i paid to my relative but refused to recover and return the stolen goods from her employee and dared me to complain anywhere. She bluntly refused to take any guilt.

As my aged uncle in no position to talk fluently, write or make any complaint about the crime, I am making this complaint about AVG Nurse Service’s owner Mahalakshmi and her employee Rajeswari. Silver items worth few kilos were stolen from our house and it may worth around 1 lakh rupees. As my uncle was unable to speak clearly and not in a position to inform us, we could not clearly ascertain the loss of any currency. I am not much concerned about the stolen goods. More than the lost articles, I’d like the perpetrators of the crime to be handled by law so that no future innocent victims will be robbed blind like this. As a responsible citizen I’d like to bring this incident to your notice and necessary actions.

I am making this complaint as an agency from Coimbatore has been involved in this crime and i don’t want any further old or ailing people fell prey to this deceitfully fraudulent agency from Coimbatore. When we initially contacted Mahalakshmi, she assured complete safety and vouched for the integrity of her employee Rajeswari. I also thought she must have sent Rajeswari to us after doing a background check only. But after this incident happened Mahalakshmi’s tone and replies were completely arrogant, reckless and non committal. I am not sure if Mahalakshmi is also part of this criminal act or not. Having sent a person she must have taken complete responsibility in recovering our valuables back and she must be made responsible for her employees crime against an innocent aged destitute person. From the way Mahalakshmi spoke to me and arrogantly refused to take any responsibility, I seriously doubt her motives too. Please investigate both the parties and bring the truth out from them. As the owner of that agency she can not completely absolve herself from the actions of her employee. Since Mahalakshmi claimed to know Rajeswari for the last four years I could not believe that the owner does not have any role in sending a criminal to our home as a help.

I request you to thoroughly investigate both Mahalakshmi and Rajeswari and retrieve the stolen goods from Rajeswari. More than retrieving my lost silver goods, I request you to prevent that agency from harming any further innocent victims like us. We believed in the words of Mrs.Mahalakshmi and handed over the life of an aged helpless person in her hands. She betrayed our faith and confidence in them. Our basic belief in fellow human beings and the complete reliance that we confided on her and her employee was utterly shattered. We are shell shocked by this breach of faith and most inhuman attitude of these people within three days of their services. My uncle is in a terribly shocked status and we living abroad some 10,000 miles away from home are helpless and terribly disturbed psychologically too. Sir, more than the stolen goods, it is the sense of betrayal and lack of basic humanity are perturbing us the most. We never expected such a daring crime could be committed against a fragile old man in this manner. Had that lady taken care of my uncle well till we reached India, I would have certainly rewarded may be with more valuable gifts than she has stolen from our home.

I request you to take suitable actions. Please let me know if you need any further information in this regard. As my uncle, the victim in totally indisposed and unable to communicate, I only has to make this complaint. You may contact me any time at the below contact coordinates for any additional information needed. Awaiting your response and actions in this regard.

Thanking You
Sincerely Yours
Thirumalairajan Sadagopan

Phone number of Mahalakshmi, owner of AVG Home Nurse Service: 9894637363
Address Of AVG Nurse Services: New No 191 Old No 204, Dr Radhakrishnan Road, Tattabad, Sivananda Colony, Coimbatore – 641012


நிர்வாண சுகதாயினி என்ற கட்டுரை திரு.ராமசாமி சுப்ரமணியனால் எழுதப்பட்டது. ஏற்கனவே கூட்டாஞ்சோறு தளத்தில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளது. இந்துத்துவம் 1, 2, 3 என்ற கட்டுரைகள் இந்தத் தளத்தில் உங்களுக்கு அறிமுகமானவையே.  திரு. ராமசாமி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு இந்துத்துவம் 1 என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய பிற தளங்கள்

தமிழ் ஹிந்து

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1


(திரு. ராமசாமியின் கட்டுரை – 3ஆம் பாகம்)

ஆன்மீக இந்துத்துவம் :-நம்மிடம் உள்ள குறைகள் காரணமாக “சடங்குகள்” பொருளற்றதாக கருதப்படுகின்ற நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமுதாயத்தில் நிலைநிறுத்த செயல்பட்டவர்கள் ஆன்மீக இந்துத்துவர்களும், அவர்கள்  சார்ந்த நிறுவனங்களும் (மடங்கள்) மற்றும் ஆலயங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது,. ஆனால் இந்த அமைப்புகளில் ஏற்பட்ட சில தேவையற்ற கட்டுப்பாடுகள் ,பழக்கவழக்கங்கள் இவையனைத்தும் ஒரு சாராருக்கே உரியவையோ என்ற நிலை உருவாகியது மேலும் உலக நியதியையோட்டி இந்த அமைப்புகளும்  தம் கட்டுப்பாட்டைத் தளர்த்த முற்பட்டன. அறநெறி நீங்கியது மக்கள் கவர்ச்சி தலைதூக்கியது அதிகாரபலமும், செல்வச்செழிப்பும்  ஆதிக்கப்போட்டிக்கு வழி வகுத்தன. சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன.புரியாத மொழியில் விளங்காத சடங்குகள் தேவையற்ற சர்ச்சைளையும் விவாதங்களையும் தோற்றுவித்தன. விளைவாக நாத்திகவாதமும் பிற மத குறுக்கீடுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. எதிர் கோஷா ங்கள் எழும்பின.
இந்துத்துவத்திற்கு நாத்திகவாதம் புதிதல்ல. சார்வாக மதம் தொன்றுதொட்டே நாத்திகம் பேசியது. ஆனால் எடுபடவில்லை. இந்துக் கடவுளர் இழிவு படுத்தப்பட்டனர். இந்துக்கள் பொறுமை காத்தனர். இந்து மதம் செழுமை கண்டது. சில பாஷாண்டிகள் தங்களை இந்துத்துவத்தின் பாதுகாவலர்களாகவும் இறைவனின் பிரதிநிதிகளாகவும் உருவகப்படுத்திக்கொண்டு சித்து வேலைகள் மூலம் பாமர மக்களைக் ஏமாற்றி வந்தனர். இதனால் ஏமாந்தவர் பலர். அந்நிய பணபலமும் மதமாற்றத்தை ஊக்குவித்தன சாதி இன பாகுபாடுகள், பகுத்தரிவாலரின் விபரீத விளையாட்டு மடங்களின் அவமதிப்பு மத நூல்களிலிருந்து தேவையான வரிகளை மட்டும் எடுத்து விரும்பத்தகாத கடுமையான விமரிசனங்கள் இந்து மதத்திற்குத் தொய்வை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே உருவானது. பாமர மக்கள் வழிவகை தெரியாது அலைக்கழிக்கப்பட்டனர்.

அரசியல் இந்துத்துவம் :- இந்துத்துவம் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய முனைந்தது. புதிய வழிமுறைகள் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்தது. ஆள்பலமும், பணபலமும், ஆதிக்கபலமும் இருந்தால் எதிர் பிரசாரத்தை எளிதில்
முறியடிக்கலாம் என்பது புலனாயிற்று. அரசியல் பலம் கூடும்போது ஆனவமும் வந்து விடும் எதிராளியும் அஞ்சுவன்ரோ?ஆதரிக்கும் அமைப்புகள் ஒன்று சேர வாய்ப்புகள் ஏற்பட்டன. அரசியல் இந்துத்துவம் பிறந்தது. மாற்றம் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. இந்துக்களின் ஒற்றுமையின்மை, நம் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்லாமை, நம்மைப்பற்றி நாமே புறம் கூறி எள்ளி நகையாடும் போக்கு ,எதிர்ப்பு வந்தபோது அமைதியாக ஏற்றது,இழிவு வந்ததபோது பொங்கி எழாமை -இந்துத்துவத்தை பலவீனப்படுத்தின. நம்மை ஜடப்பொருளாக மாற்றின. இவற்றை நிவர்த்தி செய்யவே அரசியல் இந்த்துதுவம் செயல்பட ஆரம்பித்தது.

சடங்கு இந்துத்துவம்,ஆன்மீக இந்துத்துவம்,அரசியல் இந்துத்துவம் ஆகிய மூன்றுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து தனித்தனியே பிரித்துப்பார்க்கமுடியாத நிலையில் இருப்பவை. மாற்றங்கள் வரலாம். அணுகுமுறை மாறலாம். உட்கரு ஒன்றுதான் இந்துத்துவம் நிலையானது. மக்கள் (மாக்கள் உள்பட) நல்வாழ்வு விரும்புவது. தெய்வ நம்பிக்கை கொண்டது. பிற சமயத்தாரையும் மதிப்பது. என்றும் அழியாதது.

வாழ்க!–வளர்க இந்துத்துவம்!!

(முற்றும்)

தொடர்புடைய கட்டுரைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1


(திரு ராமசாமியின் கட்டுரை – இரண்டாம் பாகம்)

விவரங்கள்  முழுமையாக  தெரியாத நிலையில்  அவை மூட நம்பிக்கைகளாக மதம் சார்ந்த  கோட்பாடுகளாக அமைகின்றன.
(உதாரணம்)   முன்னோர் திதி கழித்தல் :- இது  காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. முன்னோர் வாழ்த்து (ஆசி) பிள்ளைகளுக்கு  நல்லதொரு  வாழ்க்கையை அமைத்துத்தரும் என்ற நம்பிக்கை.  குறிப்பு;- அமாவாசை -மூன்று தலைமுறை  முன்னோரை நினைவு கூர்ந்து வழிபடுவது. இன்றும் இந்து பிராமணர்கள்  தொடர்ந்து செய்து வருவது -மஹாலய  அமாவாசை -அனைத்து இந்துக்களும் செய்வது
இந்த திதி கழித்தல் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் பாலமாக அமைகிறது அந்த இடங்களில்  திதி கழிப்பதை இந்துக்கள்  தலையாய கடமையாக எண்ணுகிறார்கள். மேலும்  கயாவில் திதி  கழிக்கும்போது –நம்  முன்னோர்களுக்கு மட்டுமல்ல – நமக்குததெரிந்த  தெரியாத  இறந்தவர்களுக்காக, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக, திதி கழிக்க இயலாதவர்களுக்காக,அனைத்து  மதம் சார்ந்தவர்களுக்காக ,வளர்ப்பு  பிராணிகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம், இது தான் இந்துத்துவத்தின் விரித்து பரந்த மனப்பாங்கு.
நடுகல் சடங்குகள்,கிராம தேவதைகள் ,அய்யனார் -இவையனைத்தும்  சமுதாய ஒற்றுமைக்கே.
ஆலயங்கள்,திருவிழாக்கள் -இவை மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி  ஒருவரையொருவர்  புரிந்து மனித நேயம்  வளர்வதற்கே. அதனால் தான் வந்த சொற்றொடர் “ஊர் கூடி தேர்  இழுத்தல்’. அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் சமூகம் ,கிராமம்,நகரம் நாடு ஆகியவை மேன்மையுறும்.
காது குத்துதல்,மெட்டி  அணிதல் -நம் உடலில் நிறைய நரம்பு முடிச்சுக்கள் உள்ளன இவையனைத்தும் மூளையுடன் தண்டுவடம் மூலம் தொடர்பு கொண்டவை. அதாவது  இன்றைய   “அகுபன்ச்சர  காதணி ,மூக்கில்  அணிவது,மெட்டி கொலுசு -ஆகியவை  வட்ட வடிவம் கொண்டவை நம் உடலுடன் சமச்சீரான முறையில் ஒட்டி உறவாடி நரம்பு மண்டலத்தையே செம்மையாக்குகின்றன.
மொட்டையடித்தல்:–நேர்த்திக்கடனாக மனிதன் மொட்டையடித்துக் கொள்கிறான். கொச்சையாக “உயிரைக் கொடுக்கிற சாமிக்கு மயிரைக்  ‘கொடுக்கிறான். சிகை என்பது மனிதனின் கௌரவச்  சின்னமாகும். அதை இழப்பது அவமானம் என கருதப் படுகிறது. மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்ல ப் படுவதில்லை.மாறா க  அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது  . நேர்த்திக் கடனாக மொட்டையடித்துக் கொள்பவன் இறைவன் முன் சிகை நீக்கி ,தலை தாழ்த்தி அவமானத்
தை ஏற்று  தன  அடக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
நம் பெரியோர் சொன்னார்கள் என்பதனால் நாம் சடங்கைக் சடங்காக கண்மூடித்தனமாக பின்பற்றி வருகிறோம். அவற்றின் உட்பொருளைப்  புரிந்து  செயல்படாதது நம்மிடமுள்ள மிகப் பெரிய குறைபாடே. ஆனால் சடங்குகளைப் பற்றி விளக்கம் சொல்பவரும் பெருமளவில் இல்லை என்பதும்  நம்முடைய துரதிரூ ஷ்டமே. காலம்,தூரம் ,அறிவியல் முன்னேற்றம் என பலப்பல காரணம் காட்டி விலகி ஓடிவிடுகிறோம். ஆகவேதான் சடங்குகள் –  சில/பல இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாததாக இருதாலும்,பொருள் போதிந்தவையே ஆனாலும் அவை பொருளற்றவையாக வழக்கொழிந்தவையாக தோன்றுகின்றன

(தொடரும்)

தொடர்புடைய இடுகைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1


ஒரு மைசூர் சம்பவம்.

Jun 8, 2011
Human-elephant conflict turned fatal in Mysore as two wild tuskers  entered the
city. One of the elephants gored a security guard to death  before it was
subdued and taken away.

 

(Photos – Courtesy The Hindu)

அடுத்த பக்கம் »