முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து விட்டுப்போனது. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மேலை நாடுகள் இங்கே குப்பைகளை கொண்டு கொட்டுகிறார்கள் என்று ஆதங்கபட்டிருந்தார். ஆபத்தான குப்பைகளாக இல்லாவிட்டால், அது தேசிய அளவில் ஒரு வர்த்தக வாய்ப்பு மற்றும் மின் உற்பத்தி வாய்ப்பு என்று எனக்குப்
பட்டது. நான் 20 வருடங்களுக்கு முன் குப்பைகளை வைத்து மினசாரம்
தயாரிக்கும் அனல் மின் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறேன். Senoko
Incineration Plant என்ற அந்த அனல் மின் நிலையம் என்னை பல் வகையில்
கவர்ந்த ஒன்று. நாடு திரும்பியதும் சிங்கப்பூரில் உள்ள அதை போல் ஒன்றை
அரசாங்கம் இந்தியாவில் ஸ்தாபிப்பது பற்றி ஒரு இந்திய மின் பொறியாளரிடம்
பேசியபோது அவர் சொன்னது – “இந்தியாவில் பொருட்களை எல்லோரும் ரீசைக்கிள் செய்துவிடுகிறார்கள். அதனால் குப்பை சேராது” என்றார். அப்பொழுது இந்த மேலை நாட்டுக் குப்பை பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்திய
குப்பைகளையும் சேர்த்து மேலை நாடுகளும் கொட்டும் அளவு கடந்த குப்பையை
(குப்பையை கொட்ட பணமும் கொடுக்கிறார்கள்) நாம் உபயோகித்தால் நிச்சயம்
மின் உற்பத்தி செய்ய குப்பைகள் போதுமானது என்று நினைக்கிறேன்.
சிந்திக்கலாமே?

மின் தயாரிப்பு பற்றி விளக்கம் –

சிங்கப்பூர் நகரில் (தேசத்தில்)வீடுகளிலும், வர்த்தகங்களிலும்
கொட்டப்படும் குப்பைகள் தங்கள் பயணத்தை ஆங்காங்கு காணப்படும் இரும்பு
குப்பைத் தொட்டிகளில் தொடங்குகிறது. (அடுக்கு மாடிக் கட்டடங்களில்
வசிக்கும் மக்கள் சிறு குப்பைகளை வீட்டின் சமயலரையின் சுவற்றில்
பொறுத்தியிருக்கும் ஒரு சிறிய கதவை திறந்து சிம்னி குழாய் போன்ற ஒரு
Chuteல்  எறிகிறார்கள். அது கீழே சரியாக பெரிய ஒரு இரும்புத்தொட்டியில்
வந்து விழுகிறது. பெரிய குப்பைகள் லிஃப்டில் கீழே கொண்டு வந்து
எறியப்படுகின்றன)

நாள் முழுவதும் இயங்கும் பெரிய ட்ரக் வாகணங்கள் ஆங்காங்கு காணப்படும்
பெரிய இரும்புத்தொட்டியை தன் இரும்புக் கைகளால் ஏந்தி தன்னுள் கவிழ்த்து
குப்பைகளை சேகரிக்கிறது.

வாகணங்கள் குப்பையை Senoko மற்றும் Tuas என்ற இரண்டு incineration
plantற்கு எடுத்துச் சென்று அதன் பிரம்மாண்டமான குப்பைதொட்டிகளில்
சரிக்கிறது.

இந்த புதிய குப்பை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் குப்பைகளுடன்
சேர்ந்துக் கொண்டு தன் அடுத்தக் கட்ட பயணத்திற்க்காக காத்திருக்கிறது.

இடைவிடாமல் தொடர்ந்து பெரிய கிரேண்கள் இப்படி காய்ந்துக்
கொண்டிருக்க்கும் குப்பைகளை அள்ளி ஒரு கன்வேயர் பெல்டில் வைக்கிறது.

பெல்ட்டில் பயணம் செய்யும் குப்பை ஒரு ட்ரையர் பகுதியில் நுழைந்து
வெளிவருகிறது. வெளிவரும் பொழுது அதிலிருந்த ஈரப்பசை அனேகமாக இல்லாமல்
ஆகிவிடுகிறது.

அடுத்தது Magnetic Separator. குப்பை என்பது கசங்கிய பேப்பராகவும்
இருக்கலாம். உடைந்த பெரிய மேஜை நாற்காலிகளாகவும் இருக்கலாவும். இரும்புக்
கட்டிலாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். (ஒரு வதந்தி – உடல்
பாகங்களும் இருக்கலாம் – நான் பார்த்ததில்லை) இந்த ”காந்த விலக்கி” யின்
வேலை அணைத்து இரும்புக் குப்பைகளையும் தன் காந்த சக்தியால் கைபற்றி சற்றே
நகர்ந்து வேறு ஒரு பெல்ட்டில் காந்த சக்தியை தற்காலிகமாக இழந்து
கைவிடுகிறது. இப்படி அப்புறப்படுத்தப்பட்ட இரும்புகள் நாள் ஒன்றுக்கு
இரண்டு மூன்று பெரிய ட்ரக்குகள் தேறும். அவை இரும்பு மார்க்கெட்டிற்கு
எடுத்துச் செல்லப்பட்டு recycle செய்வதற்க்காக விற்க்கப்படுகிறது.

முதல் பெல்ட்டில் பயணத்தை தொடரும் மற்ற குப்பைகள் crusherல்
உட்படுத்தப்பட்டு அளவு குறைக்கப்பட்டு அடுத்த இலக்கான பாய்லரை நோக்கி
செல்கிறது.

Senokoவில் மொத்தம் 4 பாய்லர்கள் (அல்லது 8 – மறந்துவிட்டது). பாய்லரின்
பெரும் வெப்பத்தில் குப்பைகள் எரிந்து அதன் மேல் இருக்கும் பெரும் நீர்
குழாய்களில் உள்ள தண்ணீர்  நீராவியாக மாற்றம் பெற்று கடுமையான அழுத்தம்
மற்றும் வெப்பம் மற்றும் வேகம் கொண்டு டர்பைனை (2 டர்பைன்கள்)
நோக்கிப்பாய்கிறது.

அதன் பின்னர் தெரிந்த கதை தானே! – நீராவி primemover டர்பைன் ப்ளேடை
தாக்கி அதிவேகத்தில் சுழற்றுகிறது (3000 RPM). அதனுடன் இணைக்கபட்ட
ஜெனரேட்டர்கள் 28 மெகாவாட்டை சிங்கப்பூர் கிரிட்டில் பரப்பி மிதக்கவிட்டு
synchronize செய்கிறது.

மின்சாரம் நம் வீட்டை அடையும் முன்னர், தன்னை தியாகம் செய்த திருப்தியில்
குப்பையின் ஆத்மா சாந்தியடைகிறது.

http://www.youtube.com/watch?v=MwPJBT_sgRg (குப்பைகளை பெல்ட்டில்
ஏற்றும் வீடியோ)

(பி.கு. Senokoவை Keppel நிறுவனம் வாங்கிவிட்டது. Tuas Senokoவை விட
பெரியது. என்ன நிலைமை என்று தெரியவில்லை. நான் மிட்சுபிஷி கழகத்தில்
(Mitsubishi Corporation) Commissioning Engineerஆக வேலை பார்த்தேன்.)