Kriyaகாரில் நானும் க்ரியாவும் போய்க்கொண்டிருந்தபோது அவளுக்கு கனமான, லேசான பொருள் எல்லாம் புவியீர்ப்பு விசையால் ஒரே மாதிரி இழுக்கப்படும், மேலிருந்து கீழே போட்டால் தரையை அடைய ஒரே நேரம்தான் ஆகும் என்பதை சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

நான் ஆரம்பித்தேன். க்ரியா நீ சூப்பர் ஸ்ட்ராங் சூப்பர்வுமனாம். பத்து மாடி கட்டடத்தின் மீது ஏறி நிக்கறயாம். உன் ஒரு கைல நாம போற இந்தக் கார் இருக்காம்…
க்ரியா: I am too small, I can’t lift this car!
நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
க்ரியா: So I can lift this car?
நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?

க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ என்று சொல்லிப் பார்த்தாள், நான் விடவில்லை. உனக்கு தோன்றுவதைச் சொல் என்று வற்புறுத்தினேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு பேப்பர்தான் முதலில் விழும் என்று சொன்னாள்.

நான் அசந்துபோனேன். பேப்பர் முதலில் விழும் என்று யாரும் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. அப்படி யோசிக்க முடியும் என்று கூட எனக்குத் தோன்றியதில்லை. இவள் மாத்தி யோசிப்பவள் என்று தெரியும், இருந்தாலும் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

நான்: ஏன் பேப்பர் கீழ முதல்ல விழும்னு நினைக்கறே?
க்ரியா: I think that the car will fall first. But if the car will fall first, you won’t ask this question. Since you ask this question, it has to be a trick question. So the right answer has to be paper.

சரி ரொம்ப நாளாச்சு க்ரியா பத்தி ஒரு போஸ்ட் போட்டு, இதைப் போடலாம் என்று சிரித்துக் கொண்டேன். And it got better and better.

நான்: சரி க்ரியா, ட்ரிக் கொஸ்டின் எல்லாம் மறந்துடு. நிஜமா உனக்கு எது முதல்ல கீழே விழும்னு தோணறது?
க்ரியா: கார்.

அப்பாடா என்னதான் மாத்தி யோசிப்பவளா இருந்தாலும் வழிக்கு வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
நான்: ஏன் கார் முதல்ல கீழே விழும்னு சொல்லறே?
க்ரியா: Because the car will be so heavy, that I will drop it before the paper ball!

அப்புறம் பைசாவில் டவர் (Leaning Tower of Pisa) ஏன் சாய்ந்து நிற்கிறது, அப்படி சாய்ந்து நின்றால் அது கீழே விழுந்துவிடாதா, பைசாவில் பிட்சா கிடைக்குமா என்று நிறைய கேள்விகளை விவாதித்துக் கொண்டே போவதற்குள் கிளாஸ் வந்துவிட்டது. கலீலியோவுக்கு வரவே முடியவில்லை.


நாங்கள் இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசுக்கு விடுமுறைக்காக வந்திருக்கிறோம். என் ஏழு வயதுப் பெண் க்ரியா அடித்த சில கமெண்ட்டுகள்.

லூவர் ம்யூசியத்துக்குப் போயிருந்தோம். அங்கே எகிப்து நாட்டிலிருந்து ஒரு சிலை. தலையைக் காணோம், எப்படி உடைந்ததோ தெரியவில்லை. இவள் அதைப் பார்த்ததும் அக்கா அக்கா என்று படு ஆர்வமாக தன் அக்காவைக் கூப்பிட்டு அந்த சிலையைக் காட்டிவிட்டு சொன்னாள் – “They forgot to make the head!”

ஓவியம், மற்றும் சிற்பங்கள் நிறைந்த டார்சே ம்யூசியத்துக்கு போயிருந்தோம். அங்கே நான், என் மனைவி, என் பனிரண்டு வயதுப் பெண் எல்லாரும் ஆஹா என்ன அழகு, வெளிச்சம் எப்படி வந்திருக்கிறது, என்ன நுண்விவரம் என்றெல்லாம் உருகிக் கொண்டிருந்தோம். இவள் ஒரு பெரிய ஓவியம் – ஒரு இருபதடிக்கு பதினைந்தடி இருக்கும் – ஒன்றைப் பார்த்தாள். நாங்கள் மூவரும் அதைப் பார்த்துவிட்டு வழக்கம் போல ஆஹா ஓஹோ என்று கூவிக் கொண்டிருந்தோம். இவள் என்னவோ யோசனையில் இருந்தாள். பிறகு மெதுவாகக் கேட்டாள் – “அப்பா, அந்த ஓவியம் என்ன எடை இருக்கும்?”


என் ஏழு வயதுப் பெண் க்ரியாவை காலையில் ஸ்கூல் போக வேண்டும் எழுந்திருடா என்று எழுப்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு எழுந்திருக்க மனமே இல்லை. நாலைந்து முறை கூப்பிட்ட பிறகு தூக்கக் கலக்கத்திலேயே கடுப்போடு சொன்னாள் – “Daddy, I woke up so many times in my dream already!”


தீபாவளி ”ஸ்லீப் ஓவர் நைட்” முடிந்து காலை எட்டு மணி

டமால் டமால் – சத்தம் பிருந்தாவின் பெட்ரூமில் இருந்து வந்தது. பிருந்தா குளியலில்.

நான் (தீபாவளி தொடர்கிறதோ என்று நினைத்துக் கொண்டே) – Sreya, What’s  going on? Com’ere

ஸ்ரேயா – (சத்தமாக கிரியாவிடம்) நோ நோ!

ஸ்ரேயாவின் முகம் என் பெட்ரூமில் பிரசன்னமாகியது. பின்னால் கிரியா.

நான் – வாட்ஸ் ஹேப்பனிங்?

ஸ்ரேயா – (புன்முற்வலோடு) She is not doing what I told her.

நான்  – (புன்முறுவலோடு) Kriya, did you give hard time to her?

கிரியா – She is asking me to do things that I don’t want to do.

நான் – But did  you …… give hard time to her?

கிரியா – (சற்றே யோசித்தவாரே) Well, she is asking to do…

நான் – My question is “Did yooooou give hard time to her”

கிரியா – (ஆக்ரோஷமாகவும் வேகவேகமாகவும்) She gave me hard time first. So I gave back her what she gave me.

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்


ரொம்ப நாளாச்சு க்ரியா பதிவு ஒன்று எழுதி.

எனக்கும் அவளுக்கும் நடந்த ஒரு உரையாடல்.

க்ரியா: அப்பா, Can I watch TV while eating my dinner?
நான்: No.
க்ரியா: But I always do that அப்பா!
நான்: It is a bad habit, Kriya and we are going to stop it from today.
க்ரியா: Aaargn! Please, அப்பா!
நான்: No.
க்ரியா: Please, Please, அப்பா!
நான்: No.
க்ரியா: But அப்பா, everyone watches TV while eating dinner!
நான்: Then they are all doing the wrong thing.
க்ரியா: You too do it அப்பா!
நான்: Then I did the wrong thing too!
க்ரியா: Can I too do the wrong thing, அப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்


என் பெரிய பெண் ஸ்ரேயா சமீபத்தில் செஸ் பற்றிய ஒரு ஐதீகத்தை படித்தாள். அதாவது செஸ் கண்டுபிடித்த அறிஞனுக்கு ராஜா பரிசு கொடுக்க விரும்பினாராம். அறிஞர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் விடவில்லையாம். அறிஞர் கடுப்பாகிவிட்டாராம். சரி இதில் 64 கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டத்துக்காக எனக்கு ஒரு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் இரண்டாவது கட்டத்துக்கு அதை இரண்டாக்கி இரண்டு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் அதை இரண்டாக்கி நாலு நெல்மணி பரிசு கொடு, இப்படி தினம் தினம் இரண்டு மடங்காக 8, 16, 32, 64… என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் பரிசு கொடு கேட்டாராம். ராஜா இவ்வளவு சீப்பாக முடிந்துவிடுகிறதே என்று சந்தோஷப்பட்டானாம். ஆனால் அப்படி கொடுக்க வேண்டிய அளவுக்கு (மொத்தம் – 2 power 64, குத்துமதிப்பாக நான்கு ட்ரில்லியன் ட்ரில்லியன், 4,000,000,000,000,000,000,000 நெல்மணிகள்) இன்னும் நெல் விளையவே இல்லையாம்!

ஸ்ரேயா இதைப் படித்துவிட்டு எங்களிடம் வந்து அம்மா நான் தினமும் உனக்கு பாத்திரம் கழுவித் தருகிறேன், முதல் நாள் நீ எனக்கு ஒரு பென்னி கொடுத்தால் போதும், அடுத்த நாள் இரண்டு பென்னி, அதற்கு அடுத்த நாள் நான்கு, இப்படி நீ ஒரு மாதம் கொடுத்தால் போதும் எனறாள். கிட்டத்தட்ட பத்து மில்லியன் டாலர்கள் வரும். நான் மூச்சு வாங்கிக்கொண்டு கணக்கு பார்த்து சொல்ல, அம்மாவும் பெண்ணும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு என்று பாடாத குறைதான். சின்னப் பெண் க்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் எல்லாரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அக்காவுக்கு பத்து மில்லியன் டாலர் வரும் என்று மட்டும் புரிந்தது.

“You will share with me, right அக்கா?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

தொடர்புடைய சுட்டிகள்:

 • க்ரியா எழுதிய கதை – The Haunted House
 • க்ரியா: அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
 • க்ரியாவின் அலுப்பு
 • க்ரியா: நேற்று இன்று நாளை
 • க்ரியாவின் ஏமாற்றம்
 • க்ரியா: பெரிய நம்பர்கள்
 • க்ரியாவுக்கு சொன்ன கதை
 • அக்கா vs சாக்லேட்
 • ஸ்ரேயா: பரீட்சைக்கு நேரமாச்சு
 • ஸ்ரேயாவின் பசி

 • காலை அவளை எழுப்பும்போது அவள் கேட்டது.

  Daddy, is it tomorrow?


  என் ஐந்து வயது பெண் க்ரியாவுக்கும் அவள் அம்மாவுக்கும் நடந்த ஒரு உரையாடல்.

  க்ரியா: Mommy, I love you very very much in the whole wide entire enormous world.
  ஹேமா: Thank you, Kriya!
  க்ரியா: When I grow up, I am going to marry you.
  ஹேமா: You want to marry me?
  க்ரியா: First, let us go on a date, mommy.
  ஹேமா: Do you know what a date is, Kriya?
  க்ரியா: Yeah. We go to a restaurant and eat.
  ஹேமா: Oh.
  க்ரியா: (After a two minute pause) Ofo! But I can’t date you, mommy! It is not going to work!
  ஹேமா: Why?
  க்ரியா: Because you are already married!


  ரொம்ப சீரியசான பதிவுகளாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மாறுதலுக்காக, அவார்டா கொடுக்கறாங்க? ப்ளாகிலிருந்து ஒரு மீள்பதிவு.

  என் 4 வயதுப் பெண் ((இப்போது 5 வயது) க்ரியா அவ்வப்போது சூப்பர் கலக்கு கலக்குவாள். இப்போதுதான் கிண்டர்கார்டனில் சேர்ந்திருக்கிறாள். ஒரு முறை ஏதோ பெரிய எண்களைப் பற்றி பேச்சு வந்தது. அவலது 9 வயது அக்கா ஸ்ரேயா அவளுக்கு Infinity is the biggest number என்று சொல்லிக்கொடுத்திருக்கிறாள் போல. “எதுடா பெரிய நம்பர்” என்று நான் கேட்டேன். க்ரியா முதலில் Infinity என்று சொன்னாள். பிறகு கொஞ்சம் யோசித்து “One hundred” என்று சேர்த்துக் கொண்டாள். பிறகு இன்னும் ஒரு 15 வினாடிகள் யோசித்தாள். எல்லா உண்மைகளையும் புரிந்துகொண்டுவிட்ட சந்தோஷத்துடன் “Infinity, one hundred, AND thirteen! They are the biggest numbers appa” என்று சொன்னாள்!


  என் பெண்களுக்கு நான் சொல்லும் கதைகள் பிடிக்கும். வேறு கதி கிடையாது என்பதும் ஒரு காரணம். அதுவும் கதைகளில் அவர்களே பாத்திரமாக வந்தால் ரொம்ப பிடிக்கும். இன்று சொன்ன கதை.

  ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தா. அவ பேரு க்ளோயி. (பெயர் சூட்டியது என் பெண்தான். எனக்கு இந்த மாதிரி “யி” என்ற எழுத்தில் முடியும் பெண் பேர்கள் என்றால் கருப்பாயி, சிவப்பாயிதான்). ஒரு நாளைக்கு அவ எத்தனை விதமான ஹேர் ஸ்டைல் இருக்குன்னு அவ அப்பாகிட்ட கேட்டா. அப்புறம் அவளுக்கு Long hair, short hair, boy cut, bangs, corn rows, ponytail, pigtails இப்படி எல்லாம் இருக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டா. அப்புறம் அவ தன்னோட டீச்சர் கிட்ட போய் பூரா லிஸ்டையும் சொல்லிட்டு வேற ஏதாவது இருக்கான்னு கேட்டா. டீச்சர் அவ்வளவுதான்னு சொல்லிட்டா. தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டா. எல்லாரும் அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க. க்ளோயியோட அப்பா, அம்மா, brother, sister, கசின்ஸ் எல்லாரும் அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க.

  அப்புறம் அவ வந்து க்ரியாகிட்ட எல்லா ஹேர் ஸ்டைலும் சொல்லிட்டேனான்னு கேட்டா. க்ரியா இல்லே சொன்னா. உடனே க்ளோயி அப்படின்னு பூரா லிஸ்டையும் திருப்பி சொன்னா. க்ரியா இன்னும் இருக்குன்னு சொல்லிட்டா. க்ளோயி தான் டீச்சர், அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ், brother, sister, கசின்ஸ் எல்லார்கிட்டயும் கேட்டேன், அவ்வளவுதான்னு சொன்னா. க்ரியா திருப்பி இல்லேன்னு சொல்லிட்டா. க்ளோயி சரி, நீயே சொல்லுன்னு சொன்னா. க்ரியா உனக்கொரு ஹின்ட் தரேன், எங்க அப்பாவை பாருன்னு சொன்னா. அப்படியும் க்ளோயிக்கு தெரியலே. உடனே க்ரியா “மொட்டை ஸ்டைல்” அப்படின்னு சொல்லிட்டா!

  இதற்கு க்ரியா விழுந்து விழுந்து சிரித்ததும் என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது.