Projectஇந்த தளத்தைப் படிப்பவர்களுக்கு ராஜனைத் தெரியாமல் இருக்கமுடியாது. ( அப்படி தெரியாதவர்கள் ராஜன் பக்கத்தைப் பார்க்கலாம். 🙂 ) ராஜனின் இந்த கனவுத் திட்டத்தைப் பற்றி சில சமயம் பேச்சுவாக்கில் சொல்லி இருக்கிறார். இந்த முறை கொஞ்சம் விவரங்களை அனுப்பி இருக்கிறார். ஓவர் டு ராஜன்!

கனவுத் திட்டம்: நூறு மரங்கள் நட்டு வளர்த்து சோலையை உருவாக்குவது

இது வரை முடிந்த சில முதல் படிகள்: வேலி, மின்சாரம் வாங்குதல், தண்ணீர் வசதி. சொட்டு நீர் பாசனம், குழிகள், தண்ணீர் டாங்க் கட்டல், மரங்களுக்கான இடம் தேர்வு, மரம் தேர்வு ஆகியவை

நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். சிறிய நிலம் ஒன்று வாங்கி ஒரு நூறு இருநூறு மரங்கள் நடுவது பல நாள் கனவாக இருந்து வந்தது. பாரம்பரியமான விவசாயம் என் அப்பாவின் இளம் வயதிலேயே கையை விட்டுப் போய் விட்ட நிலையில் அவருக்கும் தன் இளவயதில் செய்த விவசாயத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடுமையான உழைப்பாளியான அவரது ஓய்வு காலத்தை தன் விருப்பமான ஒரு தொழிலில் ஈடுபடுத்துவது அவருக்கும் உற்சாகமான ஒரு பொழுது போக்கை வழங்கும் என்பதினாலும் இந்த திட்டத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறேன். செயல்படுத்துவது அவர்தான். நான் இடம், நிதி மற்றும் ஆலோசனைகள் மட்டுமே இங்கிருந்து அனுப்புகிறேன். ஒரு ஏக்கரில் கிட்டத்தட்ட 75 மரங்கள் வைக்கலாம் என்பதைக் கண்டு கொண்டோம். ஒரு ஆலோசகரின் உறுதுணையுடன் வேலையை ஆரம்பித்து இப்பொழுது மரம் நடும் நிலைக்குச் சென்றிருக்கிறோம். ஆழ்துளை கிணறு போடுவது, சொட்டு நீர் பாசனம் அமைப்பது, குழி தோண்டுவது வரை முடிந்து விட்டது. மழை முடிந்தவுடன் நாற்றுக்களை நட வேண்டியதுதான் பாக்கி, அருகில் உள்ள விவசாயத் துறை வனத்துறை அலுவலர்கள் மற்றும் இதில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்கள, சிலர் என்று அனைவரும் உதவுகிறார்கள். சில தேக்கு மரங்கள், பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் மற்றும் மா, பலா, கொய்யா, நெல்லி, வேம்பு, மாதுளை, பன்னீர், குமிழ் போன்ற மரங்களில் வகைக்கு நான்கைந்து என்று தேர்ந்தெடுத்து மொத்தம் ஒரு 75 மரங்கள் நடுகிறோம். மேலும் ஒரு 20 நட இடமும் உள்ளது. ஆக என் கனவின் முதல் படியை என் அப்பாவின் துணையுடன் எடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். காங்க்ரீட் காடுகளினால் மூச்சுத் திணறும் நகர்ப்புறத்தின் நடுவே ஒரு தனித்த பசுமையாக சின்ன ஒரு கானகம் அமைப்பது என் கனவு, நிறைவேற ஆண்டவன் புண்ணியத்தில் முதல் சில படிகள் நிறைவேறியுள்ளன. ரியல் எஸ்டேட்டாக மாற்றி காசு பார்க்காமல் இப்படி மரம் நடுகிறானே இந்தக் கிறுக்கன் என்ற கேலிக்கு நடுவேதான் இதைச் செய்து வருகிறேன். இந்த திட்டம் நிறைவேறினால் இதை சில விலை குறைவான இடங்களில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நிலம் வாங்கி இந்த அனுபவத்தை துணையாகக் கொண்டு மேலும் பல குறு வனங்களை உருவாக்கும் எதிர்காலத் (பத்து வருடத்தில்) திட்டமும் உள்ளது. ஆர்வமுள்ள நண்பர்களிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நில மதிப்பு பல மடங்கு கூட வேண்டும் வீடு கட்டி விற்க வேண்டும் என்ற நினைப்புள்ளவர்களைத் தவிர்த்து விட்டு நம்மால் ஒரு சிறிய வனத்தை உருவாக்க முடியும் வேண்டும் என்று நினைப்பவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ராஜன் சம்மதித்தால் மாதாமாதம் இங்கே இந்த திட்டத்தைப் பற்றி ரிப்போர்ட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் பல வேலைக்காரர், அவர் சம்மதிப்பாரா என்று சொல்வதற்கில்லை. 🙂

மற்ற கனவுகள்:

snkm ராஜன் கோஷ்டி போலிருக்கிறது. அவரும் செடி நடுவதைப் பற்றி எழுதி இருக்கிறார். இன்னும் விவரங்கள் தந்தால் இங்கே பதித்துவிடுகிறேன்.

வல்லம் தமிழ் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் நண்பர்களுடன் வல்லம் தமிழ் சங்கத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டதாம். அவருடைய திட்டம், கனவு என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் விவரங்கள் தந்தால் இங்கே பதிக்கலாம்/தொகுக்கலாம்.

நட்பாஸ் (பாஸ்கர்) அபிநவகுப்தர் பற்றி ஒரு தீசிஸ் எழுதும் அளவுக்கு தெரிந்து கொள்வதாக திட்டம் போட்டிருக்கிறார். தீபாவளிக்குள் என்று சொன்னார், தீபாவளி முடிந்துவிட்டதே! 🙂

சங்கம், வல்லம் தமிழ், பாஸ்கர், நீங்களும் (இங்கேயோ, உங்கள் தளத்திலோ) உங்கள் கனவு திட்டம் பற்றி மாதாமாதம், வாராவாரம் ரிப்போர்ட் கொடுத்தால் இங்கே பதிக்கலாம்/தொகுக்கலாம். ரிப்போர்ட் கிப்போர்ட் என்றால் பயந்துவிடாதீர்கள், அது மறந்து போகாமல் இருக்க ஒரு tactic, அவ்வளவுதான்.

என் கனவு பற்றி இங்கே.

(இது வரை) ஐந்து பேர் ஆட்டத்துக்கு வந்தது மகிழ்ச்சி!

சுவாமி ஓம்காரின் ஒரு திட்டத்துக்கு விருட்சம் லிங்க் கொடுத்திருக்கிறார். நல்ல திட்டமாகத் தெரிகிறது. நிலம் இருக்கிறது என்று சொன்னால் அவர்களே வந்து மரம் வைக்கிறார்களாம், முதல் சில வருஷங்கள் பராமரிக்கக் கூட செய்கிறார்களாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ப்ராஜெக்ட்கள், ராஜன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
என் கனவு
கனவை நிஜமாக்கிய ப்ரேம்ஜிபாய் படேல்

பாஸ்கரின் திட்டம் – அபிநவகுப்தர்
வல்லம் தமிழின் தளம்

Advertisements

ரொம்ப நாளாகவே மனதில் இருக்கும் ஏதாவது ஒரு ஐடியாவை டெவலப் செய்து venture funding வாங்கி சுயமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று எண்ணம். ஆனால் ஐடியாவை செயலாக்கும் தொழில் நுட்பத் திறமை குறைவாக இருப்பது எப்போதுமே பிரச்சினை. அதற்கான தொழில் நுட்பத் திறமையை வளர்த்துக் கொள்வது எப்போதுமே ஆரம்பம், பிறகு கைவிடல் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும்! முதல் ஸ்டெப்பாக ஒரு ப்ராஜெக்டை செய்ய திட்டம்.

பல ப்ராஜெக்ட்கள் உண்டு. இந்த ஆட்டத்துக்காக நான் தேர்ந்தெடுத்த ப்ராஜெக்ட் ஐபாடில் ஆடுபுலி ஆட்டம் ஆடுவது.

அடுத்த ஸ்டெப்பாக என்னுடைய அல்காரிதத்தை இங்கே பதிக்கப் போகிறேன்.

வாராவாரம் வெள்ளி அன்று இங்கே என்ன முன்னேற்றம் என்று பதிவு செய்யப் போகிறேன்.

snkm, வல்லம் தமிழ் இருவரும் ப்ரேம்ஜிபாய் படேல் போலவே மரம் நடுவது என்று கிளம்பி இருக்கிறார்கள். (ஏற்கனவே கிளம்பிவிட்டார்களோ?) அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் முன்னேற்றத்தை வாராவாரம் (மாதாமாதம்) பதிவு செய்யுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கனவுகள்

தொடர்புடைய பக்கம்: கனவை நிஜமாக்கிய ப்ரேம்ஜிபாய் படேல்