ரொம்ப சீரியசாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மாறுதலுக்காக:
இரண்டு நாட்களுக்கு முன் என் பெரிய பெண் ஸ்ரேயாவை அவள் வகுப்புத் தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்காக தோழி வீட்டில் கொண்டு விடப்போனேன். கூடவே சின்னப் பெண் ஆறு வயது க்ரியாவும் வந்தாள்.
பெரியவளுக்கு ஒரே குஷி. க்ரியா பார்த்துக் கொண்டே இருந்தாள். ஸ்ரேயாவை விட்டதும் என்னிடம் கேட்டாள்.
க்ரியா: Daddy, why is she so happy?
நான்: அவ பார்ட்டிக்கு போறா இல்லே? அப்புறம் நீ வேற அவளை இன்னிக்கு bother பண்ண முடியாது…
க்ரியா: OK, let us bother her double the usual when she comes back in the evening.
நான்: சரிடா குட்டி
க்ரியா: After we go home, I am going to mess up her bed!
நான்: No no. அப்புறம் அம்மா உன்னைத் திட்டுவா!
க்ரியா: OK daddy, you mess up her bed!
நவம்பர் 30, 2009 at 2:46 மு.பகல்
//க்ரியா: OK daddy, you mess up her bed!//
பரவாயில்லியே…
உங்க வீட்டுக்க்காரம்மா கிட்டே நீங்க திட்டு வாங்கி உங்க பொண்ணு பார்த்த்தில்லை போலருக்கே..
எங்க வீட்டுல எல்லாம்.. ”நீங்க செய்யாதீங்கப்பா.. அம்மா உங்களைத் திட்டுவாங்க.. எல்லாம் நாங்க பாத்துக்கறோம் ” டைப்புதான்..
நவம்பர் 30, 2009 at 3:45 மு.பகல்
ஹா ஹா.. க்ரியா நல்ல பெயர்.
நவம்பர் 30, 2009 at 9:14 மு.பகல்
//எங்க வீட்டுல எல்லாம்.. ”நீங்க செய்யாதீங்கப்பா.. அம்மா உங்களைத் திட்டுவாங்க.. எல்லாம் நாங்க பாத்துக்கறோம் ” டைப்புதான்..//
December 1, 2009 at 9:02 பிற்பகல்
ராகவன், க்ரியா என்று பேர் வைத்தது என் மனைவி. அவளிடம் உங்கள் பாராட்டை தெரிவித்துவிடுகிறேன்.
சீமாச்சு/பாலராஜன்கீதா, மறுமொழிக்கு நன்றி!
December 8, 2009 at 4:44 மு.பகல்
கீழே சுட்டப்பட்டுள்ள பதிவில் வரும் ஆர்வி நீங்களா அல்லது வேறு யாராவதா?
பார்க்க: (பின்னூட்டங்கள் 35 & 52) http://www.iwillteachyoutoberich.com/blog/why-do-immigrants-save-so-much-more-money-than-you-do/
அன்புடன்,
டோண்டு ராகவன்
December 9, 2009 at 3:34 பிற்பகல்
RV,
நீங்கள் சொல்வது போல் உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் இடையே நடந்த நாலுவரி உரையாடல் tension எல்லாம் மறந்து, மனம் திறந்து சிரிக்க வைக்கிறது. நன்றி.
ஜனவரி 10, 2010 at 9:32 மு.பகல்
Sir,can i know the meaning for Kriya..?