காரில் நானும் க்ரியாவும் போய்க்கொண்டிருந்தபோது அவளுக்கு கனமான, லேசான பொருள் எல்லாம் புவியீர்ப்பு விசையால் ஒரே மாதிரி இழுக்கப்படும், மேலிருந்து கீழே போட்டால் தரையை அடைய ஒரே நேரம்தான் ஆகும் என்பதை சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

நான் ஆரம்பித்தேன். க்ரியா நீ சூப்பர் ஸ்ட்ராங் சூப்பர்வுமனாம். பத்து மாடி கட்டடத்தின் மீது ஏறி நிக்கறயாம். உன் ஒரு கைல நாம போற இந்தக் கார் இருக்காம்…
க்ரியா: I am too small, I can’t lift this car!
நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
க்ரியா: So I can lift this car?
நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?

க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ என்று சொல்லிப் பார்த்தாள், நான் விடவில்லை. உனக்கு தோன்றுவதைச் சொல் என்று வற்புறுத்தினேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு பேப்பர்தான் முதலில் விழும் என்று சொன்னாள்.

நான் அசந்துபோனேன். பேப்பர் முதலில் விழும் என்று யாரும் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. அப்படி யோசிக்க முடியும் என்று கூட எனக்குத் தோன்றியதில்லை. இவள் மாத்தி யோசிப்பவள் என்று தெரியும், இருந்தாலும் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

நான்: ஏன் பேப்பர் கீழ முதல்ல விழும்னு நினைக்கறே?
க்ரியா: I think that the car will fall first. But if the car will fall first, you won’t ask this question. Since you ask this question, it has to be a trick question. So the right answer has to be paper.

சரி ரொம்ப நாளாச்சு க்ரியா பத்தி ஒரு போஸ்ட் போட்டு, இதைப் போடலாம் என்று சிரித்துக் கொண்டேன். And it got better and better.

நான்: சரி க்ரியா, ட்ரிக் கொஸ்டின் எல்லாம் மறந்துடு. நிஜமா உனக்கு எது முதல்ல கீழே விழும்னு தோணறது?
க்ரியா: கார்.

அப்பாடா என்னதான் மாத்தி யோசிப்பவளா இருந்தாலும் வழிக்கு வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
நான்: ஏன் கார் முதல்ல கீழே விழும்னு சொல்லறே?
க்ரியா: Because the car will be so heavy, that I will drop it before the paper ball!

அப்புறம் பைசாவில் டவர் (Leaning Tower of Pisa) ஏன் சாய்ந்து நிற்கிறது, அப்படி சாய்ந்து நின்றால் அது கீழே விழுந்துவிடாதா, பைசாவில் பிட்சா கிடைக்குமா என்று நிறைய கேள்விகளை விவாதித்துக் கொண்டே போவதற்குள் கிளாஸ் வந்துவிட்டது. கலீலியோவுக்கு வரவே முடியவில்லை.

Advertisements

நாங்கள் இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசுக்கு விடுமுறைக்காக வந்திருக்கிறோம். என் ஏழு வயதுப் பெண் க்ரியா அடித்த சில கமெண்ட்டுகள்.

லூவர் ம்யூசியத்துக்குப் போயிருந்தோம். அங்கே எகிப்து நாட்டிலிருந்து ஒரு சிலை. தலையைக் காணோம், எப்படி உடைந்ததோ தெரியவில்லை. இவள் அதைப் பார்த்ததும் அக்கா அக்கா என்று படு ஆர்வமாக தன் அக்காவைக் கூப்பிட்டு அந்த சிலையைக் காட்டிவிட்டு சொன்னாள் – “They forgot to make the head!”

ஓவியம், மற்றும் சிற்பங்கள் நிறைந்த டார்சே ம்யூசியத்துக்கு போயிருந்தோம். அங்கே நான், என் மனைவி, என் பனிரண்டு வயதுப் பெண் எல்லாரும் ஆஹா என்ன அழகு, வெளிச்சம் எப்படி வந்திருக்கிறது, என்ன நுண்விவரம் என்றெல்லாம் உருகிக் கொண்டிருந்தோம். இவள் ஒரு பெரிய ஓவியம் – ஒரு இருபதடிக்கு பதினைந்தடி இருக்கும் – ஒன்றைப் பார்த்தாள். நாங்கள் மூவரும் அதைப் பார்த்துவிட்டு வழக்கம் போல ஆஹா ஓஹோ என்று கூவிக் கொண்டிருந்தோம். இவள் என்னவோ யோசனையில் இருந்தாள். பிறகு மெதுவாகக் கேட்டாள் – “அப்பா, அந்த ஓவியம் என்ன எடை இருக்கும்?”


என் ஏழு வயதுப் பெண் க்ரியாவை காலையில் ஸ்கூல் போக வேண்டும் எழுந்திருடா என்று எழுப்பிக் கொண்டிருந்தேன். அவளுக்கு எழுந்திருக்க மனமே இல்லை. நாலைந்து முறை கூப்பிட்ட பிறகு தூக்கக் கலக்கத்திலேயே கடுப்போடு சொன்னாள் – “Daddy, I woke up so many times in my dream already!”


ரொம்ப நாளாச்சு க்ரியா பதிவு ஒன்று எழுதி.

எனக்கும் அவளுக்கும் நடந்த ஒரு உரையாடல்.

க்ரியா: அப்பா, Can I watch TV while eating my dinner?
நான்: No.
க்ரியா: But I always do that அப்பா!
நான்: It is a bad habit, Kriya and we are going to stop it from today.
க்ரியா: Aaargn! Please, அப்பா!
நான்: No.
க்ரியா: Please, Please, அப்பா!
நான்: No.
க்ரியா: But அப்பா, everyone watches TV while eating dinner!
நான்: Then they are all doing the wrong thing.
க்ரியா: You too do it அப்பா!
நான்: Then I did the wrong thing too!
க்ரியா: Can I too do the wrong thing, அப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்


என் பெரிய பெண் ஸ்ரேயா சமீபத்தில் செஸ் பற்றிய ஒரு ஐதீகத்தை படித்தாள். அதாவது செஸ் கண்டுபிடித்த அறிஞனுக்கு ராஜா பரிசு கொடுக்க விரும்பினாராம். அறிஞர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் விடவில்லையாம். அறிஞர் கடுப்பாகிவிட்டாராம். சரி இதில் 64 கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டத்துக்காக எனக்கு ஒரு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் இரண்டாவது கட்டத்துக்கு அதை இரண்டாக்கி இரண்டு நெல்மணி பரிசு கொடு, அடுத்த நாள் அதை இரண்டாக்கி நாலு நெல்மணி பரிசு கொடு, இப்படி தினம் தினம் இரண்டு மடங்காக 8, 16, 32, 64… என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் பரிசு கொடு கேட்டாராம். ராஜா இவ்வளவு சீப்பாக முடிந்துவிடுகிறதே என்று சந்தோஷப்பட்டானாம். ஆனால் அப்படி கொடுக்க வேண்டிய அளவுக்கு (மொத்தம் – 2 power 64, குத்துமதிப்பாக நான்கு ட்ரில்லியன் ட்ரில்லியன், 4,000,000,000,000,000,000,000 நெல்மணிகள்) இன்னும் நெல் விளையவே இல்லையாம்!

ஸ்ரேயா இதைப் படித்துவிட்டு எங்களிடம் வந்து அம்மா நான் தினமும் உனக்கு பாத்திரம் கழுவித் தருகிறேன், முதல் நாள் நீ எனக்கு ஒரு பென்னி கொடுத்தால் போதும், அடுத்த நாள் இரண்டு பென்னி, அதற்கு அடுத்த நாள் நான்கு, இப்படி நீ ஒரு மாதம் கொடுத்தால் போதும் எனறாள். கிட்டத்தட்ட பத்து மில்லியன் டாலர்கள் வரும். நான் மூச்சு வாங்கிக்கொண்டு கணக்கு பார்த்து சொல்ல, அம்மாவும் பெண்ணும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு என்று பாடாத குறைதான். சின்னப் பெண் க்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் எல்லாரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அக்காவுக்கு பத்து மில்லியன் டாலர் வரும் என்று மட்டும் புரிந்தது.

“You will share with me, right அக்கா?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

தொடர்புடைய சுட்டிகள்:

 • க்ரியா எழுதிய கதை – The Haunted House
 • க்ரியா: அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
 • க்ரியாவின் அலுப்பு
 • க்ரியா: நேற்று இன்று நாளை
 • க்ரியாவின் ஏமாற்றம்
 • க்ரியா: பெரிய நம்பர்கள்
 • க்ரியாவுக்கு சொன்ன கதை
 • அக்கா vs சாக்லேட்
 • ஸ்ரேயா: பரீட்சைக்கு நேரமாச்சு
 • ஸ்ரேயாவின் பசி

 • என் ஆறு வயதுப் பெண் (முதல் வகுப்பு) ஸ்கூலில் க்ரியாவுக்கு “Young Author” என்று ஒரு அசைன்மென்ட் உண்டு. அவளே யோசித்து ஏதாவது ஒரு கதை எழுத வேண்டும். அவள் எழுதிய கதை கீழே.

  One day a girl named Kriya got the hiccups. And then skipping around the street, she found a haunted house. She was so scared. There were zombies, skeletons, and ghosts.

  I saw a sign that said “Exit”. I climbed a few steps. But the stairs were broken. I thought and thought and thought. And I decided to build some stairs.

  After I built them, I climbed them very carefully. Suddenly I realized my hiccups were gone! I cheered Hooray!

  I love the way the story seamlessly changes from being in third person in the first paragraph and first person in the second paragraph. இதை தமிழில் எழுதினால் புரியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது – இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். முதல் பத்தியில் படர்க்கையில் சொல்லப்படும் கதை இரண்டாம் பத்தியில் தன்னைப் பற்றி சொல்லப்படுவதாக மாறுவது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.

  இரண்டாம் பத்தியில் படிகள் உடைந்துவிட்டதால் அவளே படிகளை கட்டுவது அபாரம்! (சர்ரியலிசம்? ஃபான்டசி?)

  கடைசியில் விக்கல் போய்விட்டதாக முடித்திருப்பது, ஆஹா!

  எல்லாருக்கும் அவரவர் குழந்தை ஒஸ்திதான். ஆனால் இந்தக் கதை எனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறது.

  தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

  தொடர்புடைய பதிவுகள்:
  அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
  க்ரியாவின் அலுப்பு
  நேற்று இன்று நாளை
  க்ரியாவின் ஏமாற்றம்
  பெரிய நம்பர்கள்
  க்ரியாவுக்கு சொன்ன கதை
  அக்கா vs சாக்லேட்


  க்ரியாவுக்கு கணக்கு ஹோம்வொர்க் – ஒரு பையனிடம் 99 பைசா இருந்தது. ஒரு சாக்லேட்டின் விலை 14 பைசா. அவன் நான்கு சாக்லேட் வாங்கினான். அப்புறம் ஒரு க்ரனோலா பார் வாங்கினான். அதன் விலை 36 பைசா. அவன் கடைக்காரனிடம் 95 பைசா கொடுத்தான். கடைக்காரன் மிச்சம் எவ்வளவு தர வேண்டும்?

  க்ரியா படிப்பது ஒண்ணாம் கிளாசில். இன்னும் பெருக்கல் எல்லாம் சொல்லித் தரப்படவில்லை. அவளுக்கு கொஞ்சம் குழப்பம்தான். அப்பா நாலு முறை 14 பைசாவை கூட்டினால் என்ன வரும் என்று கேட்டாள். நீயே கண்டுபிடி என்று நான் சொன்னதும் அவள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக அப்பா “I am going to add 4 times 10, that is 40; I am going to add 4 times 4, that is 16, now I have to add 40+16.” என்று சொன்னாள். 40+16 கண்டுபிடிக்க அவளுக்கு போர்டில் எழுதி 0+6, 4+1 என்று கூட்ட வேண்டி இருந்தது. அப்படி கூட்டி சாக்லேட் 56 பைசா என்று கண்டுபிடித்தாள். அப்புறம் க்ரனோலா பார் விலையைப் பார்த்தாள். அதற்குள் நாலு பதினாலு என்னவென்று மறந்துவிட்டது. என்னையே திருப்பி கேட்டாள். இந்த முறை நான் 56 என்று சொல்லிவிட்டேன். அப்புறம் உட்கார்ந்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டு 56+36=92 என்று கூட்டினாள். அப்புறம் 95-92=3 என்று கழித்தாள். விடையைக் கண்டுபிடித்தாயிற்று.

  அப்புறம் சொன்னாள் – “So much work to get such a small number!”

  தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

  தொடர்புடைய பதிவுகள்:
  அக்கா vs சாக்லேட்
  நேற்று இன்று நாளை
  க்ரியாவின் ஏமாற்றம்
  பெரிய நம்பர்கள்
  க்ரியாவுக்கு சொன்ன கதை