பெப்ருவரி 27 1931ஆல்ஃப்ரெட் பூங்கா, அலகபாத்பிரிட்டிஷ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் புரட்சிக்காரன் ஒருவன் தன் சகாக்கள் இருவரை சந்திப்பத்தற்க்காக காத்திருக்கிறான். போலீஸ் அவனை தேடிவருவதற்கு காரணம் – ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல தீவிரவாத நடவடிக்கைகள் – 1926ல் கக்கோரி ரயில் கொள்ளை, 1928ல் ஜான் போயண்ட்ஸ் சாண்டர்ஸ் என்ற அஸிஸ்டண்ட் சூப்பரிண்டெண்ட் ஆஃப் போலிஸ் கொலை, 1926ல் வைஸ்ராய் பயணம் செய்த புகைவண்டியை குண்டு வைத்து தகர்க்க முயன்றது போன்றவைகளாகும்.

தன் 15ஆவது வயதிலேயே இந்திய விடுதலைப் போரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவன் பனாராஸில் சம்ஸ்கிருத பாடசாலையில் பயின்றுகொண்டிருக்கும் பொழுது அமிரிட்ஸரில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை அவன் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவாக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றான். தண்டனையாக கடுமையான 15 கசையடிகளை பெற்றான். இவையெல்லாம் அவனை சிறிது சிறிதாக மாற்றி பின்னர் முழுமையாக ஆயதம் ஏந்திய புரட்சியின் பால் எடுத்துச் சென்றது. முழுமையாக ஆயுத புரட்சியை நம்பத் தொடங்கி அவன் பகத் சிங், சுக்தேவ், பதுகேஷ்வர் தத், ராஜ்குரு போன்ற புரட்சிகாரர்களை உருவாக்கினான். அவர்களால் அவன் பண்டிட்ஜி என்று அழைக்கப்பட்டான்.

கக்கோரி ரயில் கொள்ளையில் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா கான் முதலியவர்கள் பிடிபட்ட பொழுது இவன் சுந்தர்லால் குப்தாவுடன் தப்பி ஓடினான். பின்னர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் என்ற புரட்சி அமைப்பை ஷிவா வர்மா, ராஷ்பிகாரி கோஷ் போன்றவர்களோடு சேர்ந்து உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக  சதி திட்டங்களை தீட்டினான். ஷோஷலிஸமே விடுதலை அடைந்த இந்தியாவின் எதிர்காலம் என்று நம்பினான்.

அவன் தீவிரவாத்தத்தை நம்பினாலும் அன்பும், பாசமும் நிரறைந்தவன். இல்லாதவர்களுக்கு உதவும் உத்தம குணம் படைத்தவன். ஒரு முறை, தான் மறைந்திருந்த வீட்டின் மூதாட்டி தன் மகளின் திருமணத்திற்கு பொருள் இல்லாம்ல் தவித்த சமயம் தன்னை பிடித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.5000 வெகுமதி வழங்கும் என்றும் அதை பெற்றுக் கொண்டு திருமணத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தாலும் காட்டி கொடுப்பதில்லை என்று மூதாட்டி மறுத்துவிட்டாள்.

அன்று ஆல்ஃப்ரெட் பூங்காவில், நண்பர்கள் வந்தவுடன் தன் புரட்சி திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தான். இதை பூங்காவின் வெளியில் இருந்து அறிந்த இன்னொரு சகா ரூ.30000த்திற்கு ஆசைப்பட்டு போலீஸிர்க்கு தகவல் சொல்ல போலீஸ் படை பூங்காவை சுற்றி வளைத்தது. துப்பாக்கி சூடுகளின் மத்தியில் நண்பர்கள் இருவரையும் தப்பிக்க வைத்தான். பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிர் தியாகம் செய்தான்.

அந்த புரட்சி வீரன் சந்திரசேகர் ஆஸாத் என்று வழங்கப்பட்டு வந்த மோனிக்கர் சந்திரசேகர் திவாரி

(For ItsDiff Radio – Sep 21 2011)
Advertisements