(திரு. ராமசாமியின் கட்டுரை – 3ஆம் பாகம்)

ஆன்மீக இந்துத்துவம் :-நம்மிடம் உள்ள குறைகள் காரணமாக “சடங்குகள்” பொருளற்றதாக கருதப்படுகின்ற நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமுதாயத்தில் நிலைநிறுத்த செயல்பட்டவர்கள் ஆன்மீக இந்துத்துவர்களும், அவர்கள்  சார்ந்த நிறுவனங்களும் (மடங்கள்) மற்றும் ஆலயங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது,. ஆனால் இந்த அமைப்புகளில் ஏற்பட்ட சில தேவையற்ற கட்டுப்பாடுகள் ,பழக்கவழக்கங்கள் இவையனைத்தும் ஒரு சாராருக்கே உரியவையோ என்ற நிலை உருவாகியது மேலும் உலக நியதியையோட்டி இந்த அமைப்புகளும்  தம் கட்டுப்பாட்டைத் தளர்த்த முற்பட்டன. அறநெறி நீங்கியது மக்கள் கவர்ச்சி தலைதூக்கியது அதிகாரபலமும், செல்வச்செழிப்பும்  ஆதிக்கப்போட்டிக்கு வழி வகுத்தன. சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன.புரியாத மொழியில் விளங்காத சடங்குகள் தேவையற்ற சர்ச்சைளையும் விவாதங்களையும் தோற்றுவித்தன. விளைவாக நாத்திகவாதமும் பிற மத குறுக்கீடுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. எதிர் கோஷா ங்கள் எழும்பின.
இந்துத்துவத்திற்கு நாத்திகவாதம் புதிதல்ல. சார்வாக மதம் தொன்றுதொட்டே நாத்திகம் பேசியது. ஆனால் எடுபடவில்லை. இந்துக் கடவுளர் இழிவு படுத்தப்பட்டனர். இந்துக்கள் பொறுமை காத்தனர். இந்து மதம் செழுமை கண்டது. சில பாஷாண்டிகள் தங்களை இந்துத்துவத்தின் பாதுகாவலர்களாகவும் இறைவனின் பிரதிநிதிகளாகவும் உருவகப்படுத்திக்கொண்டு சித்து வேலைகள் மூலம் பாமர மக்களைக் ஏமாற்றி வந்தனர். இதனால் ஏமாந்தவர் பலர். அந்நிய பணபலமும் மதமாற்றத்தை ஊக்குவித்தன சாதி இன பாகுபாடுகள், பகுத்தரிவாலரின் விபரீத விளையாட்டு மடங்களின் அவமதிப்பு மத நூல்களிலிருந்து தேவையான வரிகளை மட்டும் எடுத்து விரும்பத்தகாத கடுமையான விமரிசனங்கள் இந்து மதத்திற்குத் தொய்வை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே உருவானது. பாமர மக்கள் வழிவகை தெரியாது அலைக்கழிக்கப்பட்டனர்.

அரசியல் இந்துத்துவம் :- இந்துத்துவம் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய முனைந்தது. புதிய வழிமுறைகள் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்தது. ஆள்பலமும், பணபலமும், ஆதிக்கபலமும் இருந்தால் எதிர் பிரசாரத்தை எளிதில்
முறியடிக்கலாம் என்பது புலனாயிற்று. அரசியல் பலம் கூடும்போது ஆனவமும் வந்து விடும் எதிராளியும் அஞ்சுவன்ரோ?ஆதரிக்கும் அமைப்புகள் ஒன்று சேர வாய்ப்புகள் ஏற்பட்டன. அரசியல் இந்துத்துவம் பிறந்தது. மாற்றம் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. இந்துக்களின் ஒற்றுமையின்மை, நம் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்லாமை, நம்மைப்பற்றி நாமே புறம் கூறி எள்ளி நகையாடும் போக்கு ,எதிர்ப்பு வந்தபோது அமைதியாக ஏற்றது,இழிவு வந்ததபோது பொங்கி எழாமை -இந்துத்துவத்தை பலவீனப்படுத்தின. நம்மை ஜடப்பொருளாக மாற்றின. இவற்றை நிவர்த்தி செய்யவே அரசியல் இந்த்துதுவம் செயல்பட ஆரம்பித்தது.

சடங்கு இந்துத்துவம்,ஆன்மீக இந்துத்துவம்,அரசியல் இந்துத்துவம் ஆகிய மூன்றுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து தனித்தனியே பிரித்துப்பார்க்கமுடியாத நிலையில் இருப்பவை. மாற்றங்கள் வரலாம். அணுகுமுறை மாறலாம். உட்கரு ஒன்றுதான் இந்துத்துவம் நிலையானது. மக்கள் (மாக்கள் உள்பட) நல்வாழ்வு விரும்புவது. தெய்வ நம்பிக்கை கொண்டது. பிற சமயத்தாரையும் மதிப்பது. என்றும் அழியாதது.

வாழ்க!–வளர்க இந்துத்துவம்!!

(முற்றும்)

தொடர்புடைய கட்டுரைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

Advertisements