(திரு ராமசாமியின் கட்டுரை – இரண்டாம் பாகம்)

விவரங்கள்  முழுமையாக  தெரியாத நிலையில்  அவை மூட நம்பிக்கைகளாக மதம் சார்ந்த  கோட்பாடுகளாக அமைகின்றன.
(உதாரணம்)   முன்னோர் திதி கழித்தல் :- இது  காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. முன்னோர் வாழ்த்து (ஆசி) பிள்ளைகளுக்கு  நல்லதொரு  வாழ்க்கையை அமைத்துத்தரும் என்ற நம்பிக்கை.  குறிப்பு;- அமாவாசை -மூன்று தலைமுறை  முன்னோரை நினைவு கூர்ந்து வழிபடுவது. இன்றும் இந்து பிராமணர்கள்  தொடர்ந்து செய்து வருவது -மஹாலய  அமாவாசை -அனைத்து இந்துக்களும் செய்வது
இந்த திதி கழித்தல் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் பாலமாக அமைகிறது அந்த இடங்களில்  திதி கழிப்பதை இந்துக்கள்  தலையாய கடமையாக எண்ணுகிறார்கள். மேலும்  கயாவில் திதி  கழிக்கும்போது –நம்  முன்னோர்களுக்கு மட்டுமல்ல – நமக்குததெரிந்த  தெரியாத  இறந்தவர்களுக்காக, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக, திதி கழிக்க இயலாதவர்களுக்காக,அனைத்து  மதம் சார்ந்தவர்களுக்காக ,வளர்ப்பு  பிராணிகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம், இது தான் இந்துத்துவத்தின் விரித்து பரந்த மனப்பாங்கு.
நடுகல் சடங்குகள்,கிராம தேவதைகள் ,அய்யனார் -இவையனைத்தும்  சமுதாய ஒற்றுமைக்கே.
ஆலயங்கள்,திருவிழாக்கள் -இவை மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி  ஒருவரையொருவர்  புரிந்து மனித நேயம்  வளர்வதற்கே. அதனால் தான் வந்த சொற்றொடர் “ஊர் கூடி தேர்  இழுத்தல்’. அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் சமூகம் ,கிராமம்,நகரம் நாடு ஆகியவை மேன்மையுறும்.
காது குத்துதல்,மெட்டி  அணிதல் -நம் உடலில் நிறைய நரம்பு முடிச்சுக்கள் உள்ளன இவையனைத்தும் மூளையுடன் தண்டுவடம் மூலம் தொடர்பு கொண்டவை. அதாவது  இன்றைய   “அகுபன்ச்சர  காதணி ,மூக்கில்  அணிவது,மெட்டி கொலுசு -ஆகியவை  வட்ட வடிவம் கொண்டவை நம் உடலுடன் சமச்சீரான முறையில் ஒட்டி உறவாடி நரம்பு மண்டலத்தையே செம்மையாக்குகின்றன.
மொட்டையடித்தல்:–நேர்த்திக்கடனாக மனிதன் மொட்டையடித்துக் கொள்கிறான். கொச்சையாக “உயிரைக் கொடுக்கிற சாமிக்கு மயிரைக்  ‘கொடுக்கிறான். சிகை என்பது மனிதனின் கௌரவச்  சின்னமாகும். அதை இழப்பது அவமானம் என கருதப் படுகிறது. மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்ல ப் படுவதில்லை.மாறா க  அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது  . நேர்த்திக் கடனாக மொட்டையடித்துக் கொள்பவன் இறைவன் முன் சிகை நீக்கி ,தலை தாழ்த்தி அவமானத்
தை ஏற்று  தன  அடக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
நம் பெரியோர் சொன்னார்கள் என்பதனால் நாம் சடங்கைக் சடங்காக கண்மூடித்தனமாக பின்பற்றி வருகிறோம். அவற்றின் உட்பொருளைப்  புரிந்து  செயல்படாதது நம்மிடமுள்ள மிகப் பெரிய குறைபாடே. ஆனால் சடங்குகளைப் பற்றி விளக்கம் சொல்பவரும் பெருமளவில் இல்லை என்பதும்  நம்முடைய துரதிரூ ஷ்டமே. காலம்,தூரம் ,அறிவியல் முன்னேற்றம் என பலப்பல காரணம் காட்டி விலகி ஓடிவிடுகிறோம். ஆகவேதான் சடங்குகள் –  சில/பல இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாததாக இருதாலும்,பொருள் போதிந்தவையே ஆனாலும் அவை பொருளற்றவையாக வழக்கொழிந்தவையாக தோன்றுகின்றன

(தொடரும்)

தொடர்புடைய இடுகைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

Advertisements