நாங்கள் இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசுக்கு விடுமுறைக்காக வந்திருக்கிறோம். என் ஏழு வயதுப் பெண் க்ரியா அடித்த சில கமெண்ட்டுகள்.

லூவர் ம்யூசியத்துக்குப் போயிருந்தோம். அங்கே எகிப்து நாட்டிலிருந்து ஒரு சிலை. தலையைக் காணோம், எப்படி உடைந்ததோ தெரியவில்லை. இவள் அதைப் பார்த்ததும் அக்கா அக்கா என்று படு ஆர்வமாக தன் அக்காவைக் கூப்பிட்டு அந்த சிலையைக் காட்டிவிட்டு சொன்னாள் – “They forgot to make the head!”

ஓவியம், மற்றும் சிற்பங்கள் நிறைந்த டார்சே ம்யூசியத்துக்கு போயிருந்தோம். அங்கே நான், என் மனைவி, என் பனிரண்டு வயதுப் பெண் எல்லாரும் ஆஹா என்ன அழகு, வெளிச்சம் எப்படி வந்திருக்கிறது, என்ன நுண்விவரம் என்றெல்லாம் உருகிக் கொண்டிருந்தோம். இவள் ஒரு பெரிய ஓவியம் – ஒரு இருபதடிக்கு பதினைந்தடி இருக்கும் – ஒன்றைப் பார்த்தாள். நாங்கள் மூவரும் அதைப் பார்த்துவிட்டு வழக்கம் போல ஆஹா ஓஹோ என்று கூவிக் கொண்டிருந்தோம். இவள் என்னவோ யோசனையில் இருந்தாள். பிறகு மெதுவாகக் கேட்டாள் – “அப்பா, அந்த ஓவியம் என்ன எடை இருக்கும்?”

Advertisements