ஏப்ரல் முதல் வாரம், 1908 – கல்கத்தா

ஒரு இல்லத்தில் ஜுகந்தர் குழு புரட்சி வீரர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அனறைய கடமை – வந்தே மாதரம் என்று கோஷமிட தயாராகிக் கொண்டிருந்த சுஷீல் குமார் சென் என்ற தேசிய கல்லூரி மாணவனை நிர்வாணப் படுத்தி கசையடிக் கொடுக்க உத்தரவிட்ட  Majistrate Kingsfordஐ கொல்வது பற்றி திட்டம் தீட்டுவது. முடிவில் 18 வயதே நிறைந்திருந்த ஒரு புரட்சி வீரனும் அவன் நண்பன் ப்ரொஃபுல்ல குமார் ஷாக்கியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பரவசமடைந்த புரட்சிக் காரனிடம் தலைவர் அந்த திட்டத்தின் அபாயத்தினைக் கூறி இதை சாதிக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவன் அமைதியாக ஆனால் உறுதியுடன் கூறுகிறான்: “நான் பிடிபட்டால் ஆங்கிலேயர்கள் என்னை தூக்கிலிடலாம். எனக்கு தந்தை, தாய் மற்றும் அனைவருமே என் பாரத மாதா தான். பாரதத்திற்க்காக என் உயிர் தியாகம் எனக்கு பெருமையானது. நான் நம் நாடு சுதந்திரம் அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன். மீண்டும் மீண்டும் தியாகம் செய்வேன்”.

அதைக் கேட்ட தலைவர் மிகவும் சந்தோஷமடைந்தார். வீரனுக்கும் ப்ரொஃபுல்ல குமாருக்கும் தலா ஒரு ரிவால்வர், வெடிகுண்டு மற்றும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

ஏப்ரல் 30 1908 – Muzzaffarpur ஐரோப்பிய மன மகிழ் மன்றம் வாயிலில் புரட்சிக் காரனும் அவனது நண்பனும் கைத்துப்பாக்கிகளுடனும், வெடிகுண்டுகளுகடனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் குதிரை கோச் வண்டி வருவதைப் பார்க்கிறான் வீரன். கோச் நெருங்குகிறது. வீரன் தயாராகிறான். மிக அருகாமையில் வந்தவுடன், கையிலிருந்த வெடிகுண்டை கோச்சின் மீது எறிகிறான். வீரன் எறிந்த அந்த வெடிகுண்டு தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எறியப்பட்ட முதல் வெடிகுண்டு. கோச் வெடித்துச் சிதறுகிறது. வெவ்வேறு திசைகளில் ஓடி மறைகிறார்கள் புரட்சிகாரர்கள் இருவரும்.

ஆனால் கோச்சின் உள்ளே Majistrate Kingsford இல்லை. அதிலிருந்த ஒரு நண்பரின் மகளும் வேலையாளும் இறையாகிறார்கள். செய்தியைக் கேட்ட Majistrate Kingsford மிகவும் பீதியடைந்து மேஜிஸ்திரேட் பதவியை துறந்தார்.

மறுநாள் காவலர்கள் புரட்சிக் காரனை  கைது செய்தனர். விரைவில் வழக்கு முடிவிற்கு வந்தது. மரண தண்டனை விதிக்கப் பட்ட புரட்சிக் காரன் நீதி மன்றத்தில் சொல்ல விரும்பிய கடைசி செய்தி “என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”.

அந்தப் புரட்சிக் காரனின் பெயர் குதிராம் போஸ்.

நாடக வடிவம் – பக்ஸ்

(For ItsDiff Radio)

Advertisements