ராணி சென்னம்மா இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீரர் என்று இடம் பிடித்தவர். பிரகாசமான தீப்பொறி போன்ற கண்களுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனியொருவராக குரல் கொடுத்தவர்.

இவர் 1778 ஆம் ஆண்டு வட பெல்காமில் ககத்தி என்னும் ஒரு கிராமத்தில் பிறந்தார். சிறிய வயது முத்ற்கொண்டு குதிரைச் சவாரி, கத்திச் சண்டை, வில் வித்தை முதலியவற்றில் பயிற்சி பெற்று வந்தார்.

இவருடைய திருமண வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. மன்னர் மல்லசர்ஜாவை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அதாவது 1816ல் இழந்தார். இவர்களின் மகனும் 1824ல் உயிர் இழந்தார்.

குடும்பத்தில் தனியாக  விடுபட்ட இவர் மனம் தளரவில்லை. சிறிது காலத்திற்கு பிறகு சிவலிங்கப்பா என்ற ஒரு மகனை தத்து எடுத்து தன் ராஜாங்க வாரிசாக அறிவித்தார். ஆங்கிலேய அரசங்கம் அப்பொழுது ”டாக்ட்ரீன் ஆஃப் லாப்ஸ்” என்ற ஒரு கொள்கையை அமுலில் வைத்திருந்தது. சந்ததி இல்லாத ராஜங்கங்கள் கிழக்கு இந்திய கம்பெனியின் சொத்துக்களுடன் இணைந்துவிடும் என்பதே அதன் ஷரத்து. அதன்படி ஆங்கிலேயர்கள்  இவரது சுவிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சிவலிங்கப்பாவை நாடு கடத்தும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் ராணியார் வெள்ளையர்கள் தன் ஆட்சியிலோ, முடிவிலோ குறுக்கிடுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். டாக்டிரின் ஆஃப் லாப்ஸை புறக்கணித்து, ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதனால் அரசிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது.

ஆங்கிலேயர்களின் பெரும் படையைப் பார்த்து ராணி மனம் கலங்காமல் தன்  திறமை மிக்க பயிற்ச்சியாலும், வீரத்துடனும், மனோதிடத்துடனும் போரிட்டார். ஆனால் எதிரிப் படையின் பிரம்மாண்டத்தை வெகுநேரம் சமாளிக்க முடியவில்லை. ராணியார் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் பெயில்ஹோங்கல் கோட்டையில் தன் வீர மரணத்தை தழுவினார்.

ராணியார் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயன்ற முயற்ச்சியில் தோல்வி அடைந்தாலும், கர்நாட்டக வீர வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

For ItsDiff Radio

Advertisements