அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகளில் சில சமயம் இந்த மாதிரி வரி வரியாக, பட்டை பட்டையாக இருக்குமாம்.

ஐஸ் கட்டியில் உள்ள ஒரு பிளவில் உருகிய தண்ணீர் வேகமாக நிரம்பி நுரை ஏற்படுவதற்குள் உருகினால் நீல நிற பட்டை ஒன்று ஏற்படுமாம். ஐஸ் கட்டி தண்ணீரில் விழும்போது கடல் நீர் கட்டியின் அடியில் கிடுகிடுவென்று உறையும். அப்படி உறையும் தண்ணீரில் பாசி இருந்தால் அது பச்சை நிற பட்டையாக மாறுமாம். பழுப்பு, கருப்பு, மஞ்சள் நிற பட்டைகள் “மண்ணால்” ஏற்படுகின்றனவாம்.

எது எப்படி இருந்தால் என்ன? பார்க்க அழகாக இருக்கின்றன!

தொகுக்கப்பட்ட பக்கம்: புகைப்படங்கள்

Advertisements