லலிதாராமை செஸ் பிரியர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனந்தும் டொபலோவும் போட்டி இட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு அருமையாக தமிழில் கமெண்டரி எழுதி இருந்தார்.

லலிதாராம் ஒரு இசைப்பிரியரும் கூட. சொல்வனம் இதழில் கஞ்சிரா என்று பக்க வாத்தியம் உருவானதைப் பற்றி அருமையாக எழுதி இருக்கிறார். புதுக்கோட்டையைச் சேர்ந்த மான்பூண்டியா பிள்ளை என்பவர்தான் இதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கினாராம். மான்பூண்டியா பிள்ளை துறவு பூண்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளை மீண்டும் நாடகத்தின் பக்கம் திருப்பி நாடக ஆசிரியராக மாற்றவும் செய்திருக்கிறாராம். கட்டாயம் படித்துப் பாருங்கள்!

படத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்தான் மான்பூண்டியா பிள்ளை. கீழே இருப்பவர் அவர் சீடர் முத்தையா பிள்ளை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இசை

தொடர்புடைய சுட்டி:
லலிதாராமின் முழு கட்டுரை

Advertisements