சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை – காந்தி, நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் – எல்லாருக்கும் தெரியும். இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்கள், தொண்டர்களை யாருக்குத் தெரியும்? இன்று சத்தியமூர்த்தி, கக்கன், திரு.வி.க., வைத்யநாத ஐயர், ம.பொ.சி. போன்றவர்கள் கூட நம் நினைவிலிருந்து அழிந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் நூறு வருஷம் போனால் காந்தியை மட்டும்தான் நினைவு வைத்திருப்போம்.

ஆனால் இவர்களின் தியாகமும் மகத்தானது. அடியும் உதையும் சிறைவாசமும் வறுமையும் விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டவர்கள். அவர்களை மறப்பது சரி இல்லை. அவர்களை நமக்கு இன்னும் நினைவுபடுத்துகிறார் தஞ்சாவூரான் (கோபாலன்). அவர் ராஜாஜி, காமராஜ் என்று நின்றுவிடவில்லை, அஞ்சலை அம்மாள், பி.எஸ். சுந்தரம் என்று பலரைப் பற்றி பதித்திருக்கிறார். அவரது தமிழக விடுதலைப் போராளிகள் ப்ளாகை கட்டாயம் சென்று பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்

தொடர்புடைய சுட்டிகள்:
விடுதலைப் போரில் தமிழகம் தளம்
கோவை அய்யாமுத்து
கடலூர் அஞ்சலை அம்மாள்

Advertisements