ராமஜன்மபூமி-பாபரி மசூதி கேசில் கடவுள் ராமன் ஒரு legal entity என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் ராமனுக்கு சொத்து இருக்கலாம் என்று தீர்ப்பு எழுதி இருக்கிறார்களாம்.

இந்த மாதிரி சட்ட நுணுக்கங்கள் are truly fascinating. யோசித்துப் பார்த்தால் கம்பெனிகள், அரசுகள், கிரிக்கெட் போர்ட் போன்ற abstract அமைப்புகள் எல்லாம் legal entities ஆக இருக்கும்போது ராமனும், அல்லாவும், கிறிஸ்துவும் ஏன் legal entities ஆக இருக்கக் கூடாது?

இது இன்று நேற்றில்லை, காலம் காலமாக நடந்து வருவதுதான் என்று டாக்டர் நாகசாமி தினமலர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

ராஜராஜ சோழன் இராஜராஜீச்வரம் உடைய பரமசுவாமிக்கு நாம் கொடுத்தது என்று தெளிவாக எழுதியுள்ளான். நிலம் கொடுத்தது மட்டுமல்ல, அணிகலன்கள் கொடுத்தது, சமையல் கலங்கள் கொடுத்தது என என்னென்ன கொடுத்தானோ, அத்தனையையும் தனித்தனியாக, “அவருக்கு கொடுத்தது’ என்றே எழுதியுள்ளார். அத்துடன், அந்த தெய்வத்தை, “உடையார்’ என்றும் தவறாது கூறுகிறான். அதாவது, நிலம், அணிகலன் என எல்லாவற்றையும் உடையவர் அவர் என்று கூறுகிறான். ராஜராஜன் பின்பற்றிய சட்டப்படி கோவிலில் உறையும் தெய்வம் உயிருள்ள மனிதர் போலவே கொள்ளப்பட்டுள்ளது என தெள்ளத் தெளிவாக குறித்துள்ளான்.

சரிதானே? கோவில்களுக்கு இறையிலி நிலம் கொடுப்பதும், மடங்களுக்கு கொடுப்பதும் (மடாதிபதிகளுக்கு இல்லை, மடங்களுக்கு) காலம் காலமாக நடப்பதுதானே? இதை இப்போதுதான் கோர்ட்டில் தீர்மானிக்கிறார்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய சுட்டிகள்:
டாக்டர் நாகசாமியின் கட்டுரை
அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்
அயோத்தி தீர்ப்பு

Advertisements