எங்கே படித்தேன் என்று நினைவில்லை. (என் 12 வயது பெண்ணுக்கு விடை கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டது.)

மொத்தம் ஒன்பது தங்கக் கட்டிகள். ஒவ்வொன்றும் நூறு கிராம் எடை இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் 99 கிராம்தான் எடை. தராசு இருக்கிறது, ஆனால் எடைக்கற்கள் இல்லை. ஆனால் தராசை பயன்படுத்துவதற்கு வாடகை உண்டு. ஒவ்வொரு முறை எடை பார்க்கும்போதும் நூறு ரூபாய் கொடுக்க வேண்டும்.

  1. எது குறைந்த எடை உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது? எவ்வளவு ரூபாய் வாடகை கொடுக்க வேண்டி இருக்கும்?
  2. இதை ஜெனரலைஸ் செய்து ஒரு ஃபார்முலா தரமுடியுமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: புதிர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஃபெர்மத்தின் அறை திரைப்படத்திலிருந்து புதிர்கள் பகுதி 1, பகுதி 2
புதிர்களுக்கு விடைகள் பகுதி 1, பகுதி 2

Advertisements