சிறந்த நண்பர்கள் என்று ஒரு லிஸ்ட் எங்கேயோ பார்த்தேன். பார்த்த இடம் கூட நினைவில்லை. இந்த லிஸ்ட் அமெரிக்க சூழ்நிலைக்கு பொருந்துவது. இந்திய சூழ்நிலைக்கு இப்படி ஒரு லிஸ்ட் போட்டால் யார் யார் வருவார்கள்?

நிஜ வாழ்க்கை நண்பர்கள்:

 1. குத்துச்சண்டை வீரர் முஹம்மத் அலி, பத்திரிகையாளர் ஹோவார்ட் கோசல்
 2. டிவி ராணி ஓப்ரா வின்ஃப்ரே, கெய்ல் கிங்
 3. பில் கேட்ஸ், வாரன் பஃபெட்
 4. வின்ஸ்டன் சர்ச்சில், ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
 5. கூகிள் கம்பெனி நிறுவிய செர்ஜி ப்ரின், லாரி பேஜ்
 6. ஜான் லென்னன், பால் மக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார், ஜார்ஜ் ஹாரிசன் – பீட்டில்ஸ் இசைக் குழு
 7. ஃப்ராங்க் சினாட்ரா, டீன் மார்ட்டின், சாம்மி டேவிஸ் ஜூனியர், பீட்டர் லாஃபோர்ட் – Rat Pack என்று அழைக்கப்பட்ட நிஜ வாழ்க்கை சினிமா, இசை நண்பர்கள்

திரைப்பட நண்பர்கள்:

 1. தெல்மா, லூயிஸ் – தெல்மா அண்ட் லூயிஸ், சூசன் சாரண்டன் + ஜீனா டேவிஸ்
 2. புட்ச் காஸ்சிடி, சன்டான்ஸ் கிட்புட்ச் காஸ்சிடி அண்ட் த சன்டான்ஸ் கிட், பால் ந்யூமன், ராபார்ட் ரெட்ஃபோர்ட் (திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட நட்பு மட்டுமே இங்கே சொல்லப்படுகிறது.)
 3. ஹரால்ட், குமார் – ஹரால்ட் அண்ட் குமார் கோ டு த ஒயிட் காசில், ஜான் சோ, கால் பென்
 4. ஆர்2டி2, சி3பிஓ – ஸ்டார் வார்ஸ்
 5. ஸ்னோ ஒயிட், ஏழு குள்ளர்கள் – ஸ்னோ ஒயிட் அண்ட் த செவன் ட்வார்வ்ஸ் கதை, திரைப்படம்

டிவி சீரியல் நண்பர்கள்:

 1. காப்டன் கிர்க், மிஸ்டர் ஸ்பாக்ஸ்டார் ட்ரெக், வில்லியம் ஷாட்னர் + லியோனார்ட் நிமாய்
 2. செய்ன்ஃபெல்ட், எலெய்ன் – செய்ன்ஃபெல்ட், ஜெர்ரி செய்ன்ஃபெல்ட், ஜூலியா லூயிஸ்-பெனஸ்
 3. பெர்ட், எர்னி – செசமி ஸ்ட்ரீட்
 4. லூசி ரிகார்டோ, எத்தல் மெர்ட்ஸ் – ஐ லவ் லூசி, லூசில் பால், விவியன் வான்ஸ்
 5. ஃப்ரெட் ஃபிளின்ட்ஸ்டோன், பார்ணி ரப்பில் – ஃபிளின்ட்ஸ்டோன்ஸ்
 6. மேரி ரிச்சர்ட்ஸ், ரோடா மார்கன்ஸ்டெர்ன் – மேரி டைலர் ஷோ, மேரி டைலர் மூர், வாலரி ஹார்ப்பர்
 7. ஆண்டி டெய்லர், பார்னி ஃபைஃப் – ஆண்டி க்ரிஃபித் ஷோ – ஆண்டி க்ரிஃபித், டான் நாட்ஸ்
 8. பீவிஸ், பட்ஹெட் – பீவிஸ் அண்ட் பட்ஹெட்
 9. ரால்ஃப் க்ராம்டன், எட் நார்ட்டன் – ஹனிமூனர்ஸ், ஜாக்கி க்ளீசன், ஆர்ட் கார்னி
 10. வின்னி த பூ, கிறிஸ்டோஃபர் ராபின் – வின்னி த பூ புத்தகங்கள், சினிமா, டிவி ப்ரோக்ராம்கள்
 11. மிராண்டா ஹாப்ஸ், சார்லோட் யார்க், காரி பிராட்ஷா, சமந்தா ஜோன்ஸ் – செக்ஸ் அண்ட் தி சிடி, சிந்தியா நிக்சன், கிறிஸ்டின் டேவிஸ், சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர், கிம் காட்ரால்
 12. நாய் லாஸ்ஸி, சிறுவன் டிம் – லாஸ்ஸி டிவி சீரியல், சிறுவனாக நடித்தது ஜான் ப்ரோவோஸ்ட்
 13. ஸ்பான்ஜ்பாப் ஸ்க்வேர்பாண்ட்ஸ், பாட்ரிக் – ஸ்பான்ஜ்பாப் ஸ்க்வேர்பாண்ட்ஸ்

இந்திய சூழ்நிலைக்கு இப்படி ஒரு லிஸ்ட் போட்டால் யார் யார் வருவார்கள்? இதிகாசங்களில் கிருஷ்ணன், அர்ஜுனன். சரித்திரத்தில் ராஜா தேசிங்கு, அவரது நண்பர் ஒருவரை சொல்லலாம். சினிமாவில்? தளபதி திரைப்படத்தில் ரஜினி,மம்முட்டி? எனக்கு டிவியைப் பற்றி சுத்தமாக தெரியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

Advertisements