மேலும் புதிர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த புதிர்களை பெரும்பாலும் இளந்தென்றல், அனுஜன்யா , பாலராஜன்கீதா ஆகியோர் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!

 • பூட்டிய அறையில் ஒரு பல்ப், வெளியே மூன்று சுவிட்சுகள். நீங்கள் எத்தனை சுவிட்சை வேண்டுமானாலும் ஆனோ ஆஃபோ செய்துவிட்டு உள்ளே போக வேண்டும். எந்த ஸ்விட்ச் பல்பை கட்டுப்படுத்துகிறது?
 • இளந்தென்றலின் வார்த்தைகளில்: முதலில் ஒரு சுவிட்ச்சை போட வேண்டும் . 5 நிமிடம் நேரம் கழித்து அதை அணைத்து விட்டு இரண்டாவது சுவிட்சை போட வேண்டும். இப்போது அறைக்குள் சென்று அந்த பல்பை பார்க்க வேண்டும். பல்பு எரிந்து கொண்டு இருந்தால் இரண்டாவது சுவிட்ச். எரியாமல் இருந்தால் பல்பை தொட்டு பார்க்க வேண்டும். சூடாக இருந்தால் முதல் சுவிட்ச். சூடாக இல்லை என்றால் மூன்றாவது சுவிட்ச்.
 • இரண்டு மணல் கடிகாரங்கள், நாலு, ஏழு நிமிஷ கடிகாரங்கள். ஒன்பது நிமிஷத்தை எப்படி அளப்பது?
 • அனுஜன்யாவின் வார்த்தைகளில்: இரண்டு கடிகாரங்களையும் ஒரே சமயத்தில் துவக்க வேண்டும். நான்கு நிமிட கடிகாரம் இரண்டு முறை முடித்திருக்கும் (அதாவது எட்டு நிமிடம் ஆகியிருக்கும்) போது ஏழு நிமிட கடிகாரம் இரண்டாவது சுற்றில் ஒரு நிமிடம் எடுத்திருக்கும். இப்போது ஏழு நிமிட கடிகாரத்தை தலைகீழ் ஆக்கி, இன்னொரு நிமிடத்தில் ஒன்பது நிமிடங்களைக் கணக்கிடலாம்.
 • இரண்டு கதவுகள், இரண்டு காவல்காரர்கள். ஒரு கதவை திறந்தால் பொக்கிஷம் கிடைக்கும். இன்னொன்றுக்கு பின்னால் பசித்த புலி. ஒரு காவல்காரன் பொய் மட்டுமே சொல்வான், அடுத்தவன் உண்மை மட்டுமே. யார் பொய்யன், யார் உண்மை சொல்பவன் என்று தெரியாது. நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். என்ன கேட்பீர்கள்?
 • இளந்தென்றலின் வார்த்தைகளில்:நான் பொக்கிஷ அறைக்கு போவதற்கு சரியான வழி எது என்று அடுத்தவரை கேட்டால் என்ன சொல்லுவார் என்று யாரேனும் ஒருவரை கேட்க வேண்டும். அவர்கள் காட்டும் வழி விடுத்து வேறு வழியில் செல்ல வேண்டும்.
 • அம்மா பையனை விட 21 வயது பெரியவள். இன்னும் ஆறு வருஷத்தில் பையன் வயதைப் போல அம்மாவுக்கு ஐந்து மடங்கு வயதாகும். அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார்?
 • பையன் வயது X என்று வைத்துக் கொள்வோம். அம்மாவின் வயது X+21. 6 வருஷங்களுக்கு பிறகு 5 times (X+6) = X+21+6 அதாவது 4X = -3 அதாவது X = -3/4 வருஷங்கள், அதாவது -9 மாதங்கள். பையன் பிறப்பதற்கு 9 மாதம் முன் அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்? ஹி ஹி…
 • வாத்தியாருக்கு மூன்று பெண்கள். அவர்களின் வயது என்ன என்று மாணவன் கேட்கிறான். வாத்தியார் சொல்கிறார், அவர்கள் மூன்று பேர் வயதையும் பெருக்கினால் 36 வரும். அவர்கள் மூவர் வயதையும் கூட்டினால் உன் வீட்டு நம்பர் வரும். மாணவன் சொல்கிறான் தேவையான அளவு விவரம் இல்லை என்று. வாத்தியார் அதைக் கேட்டுவிட்டு “அட ஆமாம், சரி என் பெரிய பெண் பியானோ வாசிப்பாள்” என்கிறார். அவர்களின் வயதுகள் என்ன?
 • பாலராஜன்கீதாவின் வார்த்தைகளில்: வாத்தியாரின் பெண்களின் வயதுகள்
  1 1 36
  1 2 18
  1 3 12
  1 4 9
  1 6 6
  2 2 9
  2 3 6
  3 3 4
  இவற்றில் 1+6+6 = 13 , 2+2+9 = 13 என்று இருப்பதால் (மற்றவற்றின் கூட்டுத்தொகை எல்லாம் வெவ்வேறு தனித்த unique எண்கள்). ***பெரிய*** பெண் என்பதால் வாத்தியாரின் பெண்களின் வயதுகள் 9, 2, 2. (பியானோ வாசிப்பதற்கும் புதிருக்கும் தொடர்பு இல்லைதானே?)
 • தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி, அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்:
  ஃபெர்மத்தின் அறை திரைப்படத்திலிருந்து புதிர்கள்
  ஃபெர்மத்தின் அறை திரைப்படத்திலிருந்து இன்னும் ஒரு புதிர், புதிருக்கு விடை
  ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) – IMDB குறிப்பு
  அனுஜன்யாவின் தளம்

  Advertisements