ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room ) திரைப்படத்திலிருந்து மேலும் புதிர்கள்.

  1. பூட்டிய அறையில் ஒரு பல்ப், வெளியே மூன்று சுவிட்சுகள். நீங்கள் எத்தனை சுவிட்சை வேண்டுமானாலும் ஆனோ ஆஃபோ செய்துவிட்டு உள்ளே போக வேண்டும். எந்த ஸ்விட்ச் பல்பை கட்டுப்படுத்துகிறது?
  2. இரண்டு மணல் கடிகாரங்கள், நாலு, ஏழு நிமிஷ கடிகாரங்கள். ஒன்பது நிமிஷத்தை எப்படி அளப்பது?
  3. இரண்டு கதவுகள், இரண்டு காவல்காரர்கள். ஒரு கதவை திறந்தால் பொக்கிஷம் கிடைக்கும். இன்னொன்றுக்கு பின்னால் பசித்த புலி. ஒரு காவல்காரன் பொய் மட்டுமே சொல்வான், அடுத்தவன் உண்மை மட்டுமே. யார் பொய்யன், யார் உண்மை சொல்பவன் என்று தெரியாது. நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். என்ன கேட்பீர்கள்?
  4. அம்மா பையனை விட 21 வயது பெரியவள். இன்னும் ஆறு வருஷத்தில் பையன் வயதைப் போல அம்மாவுக்கு ஐந்து மடங்கு வயதாகும். அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார்?
  5. வாத்தியாருக்கு மூன்று பெண்கள். அவர்களின் வயது என்ன என்று மாணவன் கேட்கிறான். வாத்தியார் சொல்கிறார், அவர்கள் மூன்று பேர் வயதையும் பெருக்கினால் 36 வரும். அவர்கள் மூவர் வயதையும் கூட்டினால் உன் வீட்டு நம்பர் வரும். மாணவன் சொல்கிறான் தேவையான அளவு விவரம் இல்லை என்று. வாத்தியார் அதைக் கேட்டுவிட்டு “அட ஆமாம், சரி என் பெரிய பெண் பியானோ வாசிப்பாள்” என்கிறார். அவர்களின் வயதுகள் என்ன?

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி, அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
புதிர், புதிருக்கு விடை
ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) – IMDB குறிப்பு

Advertisements