ஃபாரின் பாலிசி என்று ஒரு பத்திரிகை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் இவர்கள் “FP Top 100 Global Thinkers” என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். சுவாரசியமான லிஸ்ட். இதில் மூன்று பேர் இந்தியர்கள்.


ஐந்தாம் இடத்தில் இருப்பவர் ராஜேந்தர் பச்சௌரி. இவர் ஐ.நா. சபையின் “Intergovernmental Panel on Climate Change” அமைப்பின் தலைவராக இருக்கிறாராம். இந்த அமைப்பு நோபல் பரிசு பெற்றது. குளோபல் வார்மிங் குறைய உழைத்திருக்கிறாராம்.

ஐம்பத்து எட்டாம் இடத்தில் இருப்பவர் நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென். சென் என்ன சொல்கிறார், அவருடைய economic philosophy என்று எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

எண்பத்து எட்டாம் இடத்தில் இருப்பவர் சுனிதா நாராயண். இவர் “Center for Science and Environment” அமைப்பின் இயக்குனராக இருக்கிறாராம். கோக், பெப்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்து போராடினாராம்.

நம்மூர் ஆட்களைப் பற்றி வெளியூரில் பேசினால்தான் நமக்கு தெரிய வருகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:

ஃபாரின் பாலிசி லிஸ்ட்
சுனிதா நாராயண் – விக்கி குறிப்பு
அமார்த்ய சென் – விக்கி குறிப்பு
ராஜேந்திர பச்சௌரி – விக்கி குறிப்பு

Advertisements