ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) என்று ஒரு ஸ்பானிய மொழி படம் பார்த்தேன். பயப்பட வேண்டாம், விமர்சனம் எல்லாம் எழுதப் போவதில்லை.

அதில் ஒரு புதிர் வருகிறது. மூன்று மிட்டாய் பெட்டிகள். ஒன்றில் மின்ட் (புதினா) சாக்லேட்டுகள், ஒன்றில் aniseed சாக்லேட்டுகள் (aniseed-உக்கு தமிழில் என்ன?), ஒன்றில் இரண்டும். மூன்று பெட்டிகள் மீது லேபில் ஒட்டப்பட்டிருக்கிறது, ஆனால் எல்லா லேபிளும் தப்பு. அதாவது மின்ட் என்று லேபில் இருந்தால், அதில் இருப்பது aniseed-ஓ இல்லை mix-ஓ. நிச்சயமாக மின்ட் இல்லை. நீங்கள் பெட்டிக்குள்ளே எட்டிப் பார்க்காமல் எந்த பெட்டியிலிருந்து வேண்டுமானாலும் சாக்லேட்டை எடுக்கலாம். எந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று உறுதியாக சொல்ல உங்களுக்கு எத்தனை சாக்லேட் தேவைப்படும்?

என் 12 வயதுப் பெண் ஸ்ரேயாவுக்கு இதை கண்டுபிடிக்க பத்து பதினைந்து நிமிஷம் ஆனது.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி, அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) – IMDB குறிப்பு

Advertisements