1. என்றைக்கு சோவியத் யூனியன் உடைந்ததோ அன்றே செஸ்சுக்கு ஸ்பான்சர்ஷிப் திண்டாட்டம்தான். இன்று செஸ் போட்டிகளில் பணம் என்பது செஸ்சில் ஆர்வம் உள்ள தனி மனிதர்கள் (கால்மிகியா நாட்டு அதிபர் இல்யும்ஜிநோவ்), அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், செஸ்சை கம்ப்யூட்டர்களின் processing power-ஐ விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்தும் இன்டல் போன்ற நிறுவனங்கள் இவைதான் செஸ்சில் பணத்தைப் போடுகின்றன. செஸ் ஒரு டிவி நிகழ்ச்சி இல்லை. நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய மோடிவேஷன் குறைவு. இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஸ்பான்சர் செய்ய பல்கேரியா தவிர யாருமே முன் வரவில்லை. பல்கேரியாவும் டொபலோவ் விளையாடாவிட்டால் ஸ்பான்சர் செய்திருக்காது. இந்த விளையாட்டு தழைக்குமா?
  2. பொதுவாக இன்றைய செஸ் வீரர்களுக்கு செஸ் மட்டும்தான் தெரியும். செஸ்சை எப்படி மேலும் சுவாரசியமாக ஆக்குவது என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. டொபலோவ், ஷிரோவ் போன்றவர்களின் aggressive விளையாட்டு முறை அவர்களின் பாணி மட்டுமே, அது பார்ப்பவர்களை கவர ஏற்பட்டதில்லை. (எல்லாருக்கும் சேவாக் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, ஆனால் சேவாக் அப்படி ஆடுவது அவரது பாணி, அவ்வளவுதான்.) ஐந்து நாள் கிரிக்கெட் இன்று ட்வென்டி-ட்வென்டி ஆக மாறி இருப்பது போல செஸ் மாறுமா?
  3. ஆனந்த் வருவதற்கு முன் செஸ் ஒரு career என்று இந்தியாவில் யாரும் நினைத்ததில்லை. இன்று நிறைய பேர் வந்திருக்கிறார்கள். சசிகிரண், கங்குலி, கொனேரு ஹம்பி மாதிரி. அடுத்த ஜெனரேஷன் செஸ்சுக்கு வருமா?
  4. கிராண்ட்மாஸ்டர்கள் விளையாடும்போது பல முறை பத்து இருபது மூவ் ஆடிவிட்டு சமநிலையில் இருப்பார்கள். ஒருவர் டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பார். அடுத்தவர் சரி என்று கை கொடுத்துவிட்டு போய்விடுவார். ஒரு பத்து ரவுண்ட் போட்டியில் விளையாடும்போது இப்படி ஒரு டிரா அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வை கொடுக்கிறது. அது அடுத்த நாள் விளையாட இன்னும் கொஞ்சம் தெம்பை கொடுக்கிறது. ஆனால் பார்ப்பவர்கள் நிலை? ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் டீம் தன் இன்னிங்க்சுக்கு மூன்று நாள், அடுத்த டீம் மிச்ச இரண்டு நாள் எடுத்துக் கொள்வது மாதிரி நிகழ்ச்சி இது. டொபலோவ் இந்த முறை சோஃபியா விதி என்று ஒன்றை கடைப்பிடித்தார். டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பதே இல்லை. அனேகமாக இந்த போட்டியின் எல்லா டிராக்களும் செஸ் விதிகளின்படி டிரா ஆனவை. (ஒரு பொசிஷன் மூன்று முறை நேர்ந்தால் அது டிரா). ஆனந்த் எட்டாம் ஆட்டத்தில் தோற்றது சாதாரணமாக கிராண்ட்மாஸ்டர் லெவலில் நடக்கவே நடக்காது. ஐம்பத்தைந்து மூவ் வரைக்கும் சமநிலை என்றால் டிரா என்று இருவரும் ஒத்துக்கொண்டு போயிருப்பார்கள். ஆனந்த் ஐம்பத்தாறாவது மூவில் தவறு செய்தார், உடனே தோல்வியை ஒத்துக்கொண்டு போய்விட்டார். இந்த சோ ஃ பியா விதி எல்லா போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டால் டிராக்கள் குறையும். அது செஸ்சின் எதிர்காலத்துக்கு நல்லது. (இது எப்போதும் இளைஞர்களுக்கு சாதகமான விதி, கிழவர்கள் தாக்குப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்)
  5. இவர்களின் ஆட்டங்கள் எல்லாமே high quality ஆட்டங்கள். ஒவ்வொரு ஆட்டமும் டென்ஷன் மிகுந்தது. ஆனந்த் ஒரு சிம்பிள் டாக்டிக்ஸ் வைத்திருந்தார். கொஞ்சம் பலவீனமான, ஆனால் solid பொசிஷன் வரும்படி விளையாடினார். டோபலோவை முடிந்தால் ஜெயித்துக்கொள் என்று சீண்டிவிட்டார். டொபலோவ் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் கடுமையாக முயன்றார். ஆனால் ஆனந்த் outright blunder செய்தபோது மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. ஆனந்தின் கடைசி வெற்றி மட்டுமே இப்படி டோபலோவின் outright blunder-aal வந்தது. மற்ற இரண்டு வெற்றிகளில் டொபலோவ் எங்கு தவறு செய்தார் என்று தேட வேண்டும். விடாக்கண்டன்-கொடாக்கண்டன் மாதிரி இருவரும் ஆடினார்கள். Bias இல்லாமல் சொல்கிறேன், ஆனந்தின் ஆட்டம் ஒரு மாற்று மேல்.
  6. ஆனந்துக்கு அந்த நீல NIIT சட்டையை விட்டால் வேறு எதுவுமே இல்லையா? மகா கோரமான சட்டை. டொபலோவ் எப்போதும் நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்தார்.
  7. அடுத்த முறை ஆனந்த் ஜெயிப்பது கஷ்டம் என்று நினைக்கிறேன். டொபலோவ், கார்ல்சன் இருவரில் யாராவது அடுத்த சாம்பியனாக வருவார்கள் என்று யூகிக்கிறேன். அரோநியனுக்கு outside chance.

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

Advertisements