Anandarangam Pillai

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளையைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். பாண்டிச்சேரியில் ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு துபாஷாக (மொழிபெயர்ப்பாளராக) இருந்தவர். தினமும் விலாவாரியாக டைரி எழுதி இருக்கிறார். அன்றைய நாட்டு நிலையை புரிந்துகொள்ள அது மிகச் சிறந்த ஆவணமாக இருக்கிறது.

அன்றைக்கும் ரோட்டோரம் ஒதுங்குபவர்கள் பிரச்சினை பெரிதாக இருந்திருக்க வேண்டும். இந்த உத்தரவைப் பாருங்கள்.

அர்ச்சிக்கத் தக்க சம்பா கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழியோரம், பட்டணத்து வீதிகளுக்குள்ளே, கடற்கரையோரம், ஆராகிலும், உபாதைக்குப் போகிறது என்றிருந்தால், ஆறு பணம் அபராதம் வாங்குகிறது. அந்த ஆறு பணத்தில், உபாதைக்குப் போகிறவனை பிடித்துக் கொண்டு வருகிறவனுக்கு இரண்டு பணமும் கொடுக்கிறது. மற்ற நாலு பணம் சாவடி சிப்பாய்கள், அதிகாரிகளால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது.

யாராவது “உபாதைக்கு” ஒதுங்கினால் அவனை/அவளை கையோடு பிடித்துக் கொண்டு வந்து ஆறு பணம் வாங்கி அதில் இரண்டு பணம் பெற்றுக் கொள்வது. நல்ல தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறதே!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்தரங்கம் பிள்ளை பதிவு செய்திருக்கும் மதுவிலக்கு உத்தரவு
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகத் தலைவர் பத்ரி சேஷாத்ரி

Advertisements