க்ரியாவுக்கு கணக்கு ஹோம்வொர்க் – ஒரு பையனிடம் 99 பைசா இருந்தது. ஒரு சாக்லேட்டின் விலை 14 பைசா. அவன் நான்கு சாக்லேட் வாங்கினான். அப்புறம் ஒரு க்ரனோலா பார் வாங்கினான். அதன் விலை 36 பைசா. அவன் கடைக்காரனிடம் 95 பைசா கொடுத்தான். கடைக்காரன் மிச்சம் எவ்வளவு தர வேண்டும்?

க்ரியா படிப்பது ஒண்ணாம் கிளாசில். இன்னும் பெருக்கல் எல்லாம் சொல்லித் தரப்படவில்லை. அவளுக்கு கொஞ்சம் குழப்பம்தான். அப்பா நாலு முறை 14 பைசாவை கூட்டினால் என்ன வரும் என்று கேட்டாள். நீயே கண்டுபிடி என்று நான் சொன்னதும் அவள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக அப்பா “I am going to add 4 times 10, that is 40; I am going to add 4 times 4, that is 16, now I have to add 40+16.” என்று சொன்னாள். 40+16 கண்டுபிடிக்க அவளுக்கு போர்டில் எழுதி 0+6, 4+1 என்று கூட்ட வேண்டி இருந்தது. அப்படி கூட்டி சாக்லேட் 56 பைசா என்று கண்டுபிடித்தாள். அப்புறம் க்ரனோலா பார் விலையைப் பார்த்தாள். அதற்குள் நாலு பதினாலு என்னவென்று மறந்துவிட்டது. என்னையே திருப்பி கேட்டாள். இந்த முறை நான் 56 என்று சொல்லிவிட்டேன். அப்புறம் உட்கார்ந்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டு 56+36=92 என்று கூட்டினாள். அப்புறம் 95-92=3 என்று கழித்தாள். விடையைக் கண்டுபிடித்தாயிற்று.

அப்புறம் சொன்னாள் – “So much work to get such a small number!”

தொகுக்கப்பட்ட பக்கம்: குடும்பம்

தொடர்புடைய பதிவுகள்:
அக்கா vs சாக்லேட்
நேற்று இன்று நாளை
க்ரியாவின் ஏமாற்றம்
பெரிய நம்பர்கள்
க்ரியாவுக்கு சொன்ன கதை

Advertisements