என்ன ஒரு பிரமாதமான ஆட்டம்!

இன்று ஆனந்துக்கு வெள்ளை. அவர் வழக்கம் போல Catalan Opening -இல் ஆரம்பித்தார். ஆனால் டொபலோவ் நான்காவது மூவிலேயே வேறு மாதிரி ஆடத் தொடங்கினார். எட்டாவது மூவில் அவருக்கு பிடித்த மாதிரி positional imbalance உருவாக்கினார். பனிராண்டாவது மூவ் வரும்போது sacrifice! வலுவான ரூக்கை கொஞ்சம் வலுக் குறைந்த பிஷப்புக்கு exchange செய்துவிட்டார். பதினாறாவது மூவில் இன்னொரு exchange sacrifice; இருபது மூவில் டொபலோவுக்கு ஒரு சிப்பாய்தான் அதிகம் – d pawn. ஆனால் அது ஒரு passed pawn. (passed pawn என்றால் அந்த சிப்பாய்க்கு எதிராகவோ, இல்லை இரண்டு பககத்திலுமோ எதிராளியின் சிப்பாய் எதுவும் இல்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சிப்பாய்க்கு ராணியாக மாற வாய்ப்பு அதிகம்.) ஆனந்துக்கு ஒரு குதிரை அதிகம், ஆனால் அந்த குதிரை இன்னும் தன ஆரம்பக் கட்டத்தை விட்டு நகரவே இல்லை. நகர்த்துவது இன்னும் கஷ்டம்தான். For all practical purposes , that knight is still not part of the game. ஆனந்த் அந்த குதிரையை உயிர்ப்பித்து ஆட்டத்தில் நுழைக்க முயற்சி செய்ய வேண்டும், டொபலோவ் அதை நகர விடாமல் அங்கேயே வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

இது டொபலோவின் home preparation என்று நினைக்கிறேன்.இருபது மூவ்களையும் கிடுகிடு என்று ஆடிவிட்டார். ஆனந்துக்கு பதில் மூவ் செய்ய ஒரு மணி நேரம் ஆயிற்று. (இரண்டு பேரும் முதல் நாற்பது மூவை இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டும்.) டொபலோவ் அசத்திவிட்டார். இந்த மாதிரி அதிரடி ஆட்டம்தான் அவருடைய பலம். இந்த மாதிரி நிலையை கொண்டு வரவும், அப்படி ஒரு நிலை வந்த பிறகு அதை வெற்றியாக மாற்றுவதும் அவருக்கு கை வந்த கலை. நான் இந்த கட்டத்தில்தான் ஆட்டத்தை பார்த்தேன். இன்றைக்கு ஆனந்துக்கு கொஞ்சம் கஷ்டம்தான் என்று தோன்றியது. என் மாதிரி ஆரம்ப நிலை வீக் ஆட்டக்காரனுக்கே இது தெரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இதற்கப்புறம் ஆனந்தின் ஆட்டம் அபாரம்! டொபலோவ் விடாக்கண்டன் மாதிரி ஆடினால் இவர் கொடாக்கண்டன் மாதிரி ஆடுகிறார். ஆனால் அந்த அபாரமான ஆட்டம் டொபலோவின் ஒரு (சிறு) தவறில் தொடங்குகிறது. 21-ஆவது மூவில் டொபலோவ் தன பிஷப்பை f8 கட்டத்துக்கு நகர்த்துகிறார். ஆனந்த் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் பிஷப்பை c3 கட்டத்துக்கு கொண்டு வருகிறார். இப்போது அவருக்கு குதிரையை ஆட்டத்துக்குள் கொண்டு வர d2 கட்டம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஆனந்த் தவறு செய்துவிட்டார் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அவர் குதிரையை d2 கட்டத்துக்கு கொண்டு வந்து உயிர்ப்பிப்பதை ஒரு மூவ் தாமதப்படுத்தி இருக்க வேண்டுமாம். analysis எனக்கு புரியவில்லை. அப்புறம் பிஷப்புகள் exchange ஆகின்றன. இருவருக்கு forced draw (செஸ்சில் ஒரு பொசிஷன் மூன்று முறை ஏற்பட்டால் டிரா) செய்ய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது ஆனந்த் தனக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக எண்ணி இருக்க வேண்டும். அவர் forced draw -ஐ நிராகரித்து மேலும் விளையாடினார்

நாற்பதாவது மூவ் வாக்கில் விஷயம் சிம்பிளாகிவிட்டது. டொபலோவ் ஜெயிக்க ஒரே வாய்ப்புதான் – எப்படியாவது அந்த d passed pawn-ஐ ராணியாக்க வேண்டும். அதற்கு அது இரண்டு கட்டம் நகர வேண்டும். ஆனந்துக்கு ஜெயிக்க ஒரே வாய்ப்புதான். ராணிகளை exchange செய்துவிட்டு தன் ராஜா, குதிரை ஆகியவற்றை வைத்து டொபலோவின் சிப்பாய்களை தூக்க வேண்டும். டொபலோவால் தன் சிப்பாயை ஒரு கட்டம் நகர்த்த முடிந்தது. அடுத்த கட்டத்துக்கு கடைசி வரை போக முடியவில்லை. ஆனந்துக்கு தன் ராணியை exchange செய்ய முடியவில்லை. இரண்டு பேரும் கடுமையாக முயற்சி செய்து பார்த்தார்கள். கடைசியில் ஒரே பொசிஷன் மூன்றாவது முறை வர, கேம் டிரா.

மிகச் சிறந்த ஆட்டம். டொபலோவ் டொபலோவ் மாதிரி விளையாட முடிந்தது பெரிய திருப்பம். இனி மேல் இதே மாதிரி ஆடினால் ஆனந்துக்கு கஷ்டம்தான். அவருக்கு அடுத்த ஐந்து ஆட்டங்களில் மூன்று வெள்ளை என்பது ஒரு சின்ன advantage. ஆனந்த் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கு அது எங்கே என்று இன்னும் பிடிபடவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தைப் பற்றி அவர் நிச்சயமாக பெருமைப்படலாம். சுருக்கமாக சொன்னால் இன்றைய ஆட்டம் irresistible force vs immovable object.

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #6
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்

செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி

Advertisements