இன்றைக்கு ஆனந்துக்கு வெள்ளை. ஆனந்த் வெற்றி பெற்றால் டொபலோவ் almost காலி. டொபலோவ் வென்றால் பிற்பாதியில் இருவரும் சமநிலையில் ஆரம்பிப்பார்கள். ஆனந்த் இருக்கிற ஒரு பாயின்ட் லிடை தக்க வைத்துக் கொள்வோம், டிரா போதும் என்று நினைத்தாற்போல தெரிகிறது.

ஆட்டம் மீண்டும் Catalan opening. ஒரு இருபது மூவுக்கு அப்புறம் ஆனந்துக்கு இரண்டு குதிரை, டொபலோவுக்கு இரண்டு பிஷப்பும். இரண்டு பிஷப்பும் இருப்பது நல்ல விஷயம், endgame-இல் 64 கட்டத்தையும் சுலபமாக கட்டுப்படுத்தலாம். ஆனால் ஆனந்தின் குதிரைகள் மிகவும் active ஆக இருந்தன. ஒரு கட்டத்தில் ஒரு பத்து மூவ் தொடர்ச்சியாக குதிரைகளையே நகர்த்திக் கொண்டிருந்தார். Looked like he was toying with Topalov! சில சமயம் எதிராளியை வெறுப்பேற்றுவதற்காக சும்மா வெறும் மூவ்கள் செய்வோம். அந்த மாதிரிதான் ஆடிக் கொண்டிருந்தார்.

ஒரு குதிரையும் பிஷப்பும் exchange ஆன பிறகு initiative டொபலோவ் பக்கம் போனது. ஒரு கட்டத்தில் டொபலோவ் தன பிஷப்பை h3 கட்டத்தில் வைத்தார். அப்போது ஆனந்த் சிறு தவறு செய்திருந்தாலும் ஆப்புதான். ஆனந்த் precise ஆக ஆடி கடைசியில் டிரா செய்தார்.

ஆனந்தின் strategy டொபலோவை frustrate செய்வது என்று தெரிகிறது. அவர் டொபலோவுக்கு ஓரளவு initiative வரும்படி விளையாடுகிறார். ஆனால் அந்த initiative வெற்றி பெறப் போதாது. அதன் பிறகு மிகவும் accurate defensive மூவ்களை விளையாடுவதால் அந்த initiative வேலைக்கு ஆவதில்லை. தன்னுடைய திறமை மேல் அபாரமான நம்பிக்கை உள்ளவர்தான் இப்படி செய்ய முடியும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்

செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி

Advertisements