அப்படி இப்படி தட்டு தடுமாறி இந்த ப்ளாக் ஒரு லட்சம் ஹிட்கள் பெற்றுவிட்டது. அவார்டா கொடுக்கறாங்கவும் லட்சம் ஹிட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எழுதுவதை படிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

நான் ஒரு கணக்கு போட்டுப் பார்த்தேன். கிட்டத்தட்ட நானூறு போஸ்ட்கள் இரண்டு ப்ளாகிலும் எழுதி இருக்கிறோம். சராசரியாக ஒரு பதிவுக்கு 250 ஹிட், 5 கமென்ட். (பாதி கமென்ட் நாங்கள் மறுமொழி எழுதியதாக இருக்கும்.) இரண்டரை ஹிட்டுக்கு ஒருவர் படிக்கிறார் என்று வைத்துக் கொண்டால் ஒரு நூறு பேர் படிப்பார்களா? இருபது பேர் படித்தால் ஒருவர் கமென்ட் எழுதுவார் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஐம்பது பேர் படிப்பார்களா? சரி ஒரு 75 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்கிறேன்.

பிற பதிவர்களுக்கும் இப்படி ஏதாவது கணக்கு உண்டா? இருந்தால் சொல்லுங்களேன்!

வோர்ட்ப்ரஸ்ஸில் unique visitors எவ்வளவு பேர் என்று கண்டுபிடிக்க வழி இருந்தால் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்:
ஆயிரம் ஹிட் வாங்கிய அபூர்வ ப்ளாக்
நூறு கூட்டாஞ்சோறு பதிவுகள்
ஆயிரம் கமெண்ட்ஸ்

Advertisements