ஊரெல்லாம் ஐபாட் பற்றிதான் பேச்சு. நான் இன்னும் பார்க்கக் கூட இல்லை. ஒரு பெரிய ipod touch மாதிரிதான் இருக்கும் என்று நினைத்தேன், அதை நியூ யார்க் டைம்ஸின் டேவிட் போக் உறுதிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக ஓரளவு டெக்னாலஜி தெரிந்தவர்களுக்கு பிடிக்கவில்லையாம், ஆனால் “சாதாரண” மக்களுக்கு பிடித்திருக்கிறதாம். நான் இரண்டுங்கெட்டான். அதனால் படித்தவரையில் (பார்க்கவில்லை) சில விஷயம் பிடித்திருக்கிறது, சிலது பிடிக்கவில்லை.

  1. மவுஸ் (Mouse) கிடையாது. கையால் தொட்டு தொட்டு வேண்டியதை செய்யலாம். நல்ல ஐடியா. ipod டச்சில் எல்லாருக்கும் இது ஓரளவு பழகிவிட்டது. பெரிய ஸ்க்ரீனாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் என் வீட்டு கம்ப்யூட்டரிலேயே என் பெண்கள் தொட்டு தொட்டு விரல் அடையாளம் நிறைய தெரியும். இப்படி ஒன்று இருந்தால் என்னாகுமோ?
  2. காமெரா இல்லை, USB இல்லை. USB இல்லை என்றால் இன்றைக்கு இருப்பதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். புதிதாக ஒன்றும் சேர்க்க முடியாது.
  3. இதை விட powerful ஆன ஒரு புது லாப்டாப்பை இதை விட கம்மியான விலையில் வாங்கலாம். ஆனால் ஆப்பிளிலிருந்து வருபவை எப்போதுமே விலை அதிகம்தான், அதனால் இது பலருக்கும் ஒரு பொருட்டாக இருக்காது.

நான் அடுத்த மாடல் வரை வரும் வரைக்கும் – USB, காமெராவுடன் – காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். என் வீட்டு எஜமானி அம்மா என்ன சொல்வார்களோ!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய சுட்டிகள்:
டேவிட் போக் குறிப்புகள் (May require registration)
ஐபாட் விவரங்கள்

Advertisements