இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை  தொடர்கிறது………
இது போல் சாவி என்கிற சிறுவன்,
சாவி என்கிற நேர்மையாளர்,
சாவி என்கிற adventurist ,
சாவி என்கிற வாலிபர்,
சாவி என்கிற நுணுக்கம் தெரிந்த வணிகர்,
சாவி என்கிற நகைச்சுவையாளர்ஒவ்வொரு பழைய கணக்கும் ஒரு சினிமா காட்சி போல் ஒரு ஆரம்பம் — ஒரு இனிய மோதல் — ஒரு உச்ச கட்டம் — ஒரு தீர்மானம்  — ஒரு முத்தாய்ப்பு என்று முடிகிறது.  இதைப் பார்க்கும்போது அவர் ஏன் சினிமாவில் கை வைக்கவில்லை என்றே ஆதங்கம் தோன்றுகிறது.

சென்னைக்கு வரும் மாமாவை சினிமா தியேட்டருக்குக் கூட்டிபோய், முதல் வரிசையில் உட்கார வைக்கிறார் இவர்.  ஊருக்குப் போன மாமா மருமானின் செல்வாக்கை கிராமம் பூராவும் சொல்லி,  “என்னை முதல் வரிசையில் உட்கார வச்சான்னாப் பாரேன்”  என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஒவ்வொரு சம்பவமும் ஒரு பஞ்சதந்திரக் கதை மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்படி டயமண்டு கல்கண்டு போல் சின்னச்சின்ன வடிவங்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு இனிப்புத் தோரணமாகத் தொடர்கிறது பழைய கணக்கு.

இவையனைத்தும்  ‘உழைப்பே உயர்வைக் கொடுக்கும்’  என்கிற சிந்தாந்தத்தைத்தான் வலியுறுத்துகிறது.  Starting from the scrap என்று சொல்வார்களே,  அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பழைய கணக்குகள் பயனுள்ள ‘பார்முலா’ க்கள்.

K.Balachander

கே. பாலசந்தர்

34 ,  வாரன் சாலை,

சென்னை – 4

தொடர்புடைய பதிவுகள்:

பழைய கணக்கு – சாவி – 2

பழைய கணக்கு – சாவி – 1

Advertisements