சுஜாதாவின் முன்னுரை – டிசம்பர் 2004

குங்குமம் வார இதழில் தொடர்ந்து வந்தபோது,  இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இது சாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’.
1991க்குப் பிறகு, நீண்ட காலம் மறுபதிப்புக்காகக் காத்திருந்த இந்த நாவலை இப்போது படித்தாலும் இதன் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதன் காரணம்,  இதில் கூறப்பட்டுள்ள மருத்துவ அறிவியல் சாத்தியங்கள் இன்னும் நடைமுறைக்கு வராததே.  சயின்ஸ்பிக் ஷன்  என்னும் அறிவியல் புனைகதை எழுதும்போது இந்த சௌகர்யம் முக்கியமானது.  விருப்பப்படி எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.  ஒரேயொரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாக வேண்டும்.
இனி ‘பேசும் பொம்மைகள்’ பற்றி….நம் கதையின் நாயகி மாயாவுக்கு, ஒரு ஆராய்ச்சி கேந்திரத்தில் (CMR  Labs  – Center for Mind Research ) ஆராய்ச்சி உதவியாளர் வேலை கிடைக்கிறது.  அவளது திகில் பயணம் அங்கு ஆரம்பிக்கிறது.   அவளது அனுமதி இல்லாமலே, அவள் பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு ஆளாக்கப்படுகிறாள்.  அவளது பல கேள்விகளுக்கு அங்கு விடை இல்லை  அவளுக்கு முன் அங்கு அதே வேலையில் இருந்து திடீரென்று மாயமாய் மறைந்து விட்ட அவள் அக்கா மேனகா உட்பட…மாயாவுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.  அவளுடன் அந்த ஆராய்ச்சி கேந்திரத்தில் பணி புரியும் பல பெண்களுக்கு வலது கை இடது கையை விட குட்டையாக உள்ளது.  அதற்கும் அவளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.   அதற்கு காரணம் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் மேல் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளே (ஓர் இம்யூனோ சப்ரசன்ட் மருந்தோட ரியாக் ஷன் )   என்ற பயங்கரமான உண்மையை அவள் அறிந்தும்,  அவளால் அந்த வேலையை விட முடியாததற்கு காரணம் அவள் பெறும் கொழுத்த சம்பளமும், அவளுடன் வேலை பார்க்கும் அவள் காதலன் சுனிலும் தான்.

Dr சாரங்கபாணி மற்றும் Dr  நரேந்திரநாத் என்று முற்றிலும் மாறுபட்ட குணங்களுடைய  இரண்டு Boss களுடன் மாயாவுக்கு ஏற்படும் அனுபவங்கள்…   அவர்கள் போட்டிக்கும் பொறாமைக்கும் இடையே அவள் ஒரு பகடைக்காயாய் மாறுகிறாள்.  அவள் அக்கா மேனகாவுக்கு ஏற்பட்ட கதியைப் பற்றி மேலும் ஆராயும்போது,  மாயாவும் ஒரு மீள முடியாத அதி பயங்கரமான வலையில் சிக்குகிறாள்.

மாயாவை மீட்பதற்கு,  அவள் தந்தையும், சுனிலும் கணேஷ் வசந்த் உதவியை நாடுகிறார்கள்.  கணேஷ் வசந்த் வந்தவுடன் கதை மின்னல் வேகத்தில் பறக்கிறது.   கணேஷ் வசந்தின் துரத்தல் – சென்னை – விஜயவாடா – மீண்டும் சென்னை என்று வேகம் எடுக்கிறது.  கடைசியில் சுஜாதாவுக்கே உரித்தான அதிரடி கிளைமாக்ஸ்  + Poetic Justice உடன்  கதை முடிகிறது.

ஒரே மூச்சில் படித்து முடித்தேன்… இது ஒரு Must  Read  – நீங்கள் வித்தியாசமான கதை + புத்திசாலித்தனமான  திருப்பங்களை விரும்புவராக இருந்தால்….

Advertisements