திருமலை ராஜனின ”ஆதலினால் நடத்தல் செய்வீர்” ஒரு மன எழுச்சியை உண்டு பண்ணியதன் விளவே இந்தக் கட்டுரை.

விளையாட்டு வாழ்க்கையில் எனக்கு முக்கியமான ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. பல்ருக்கு இது போல் தான் இருக்கிறது. சில  சமயம் இதை நட்பையும் முறிக்கும். ஏப்படி? ஒரு அனுபவம் கீழே.

மெட்ராஸ் வாழ்க்கையின் காலத்தில் (என்ன, ஒரு இருபத்தேழு, இருபதெட்டு வயது இருக்கும்) காலை சுமார்  6 மணிக்கு பாட்மிண்டன் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் ”டவுசர்” பையனாக. இன்னும் 3 அல்லது 4 முப்பதுகளில் அல்லது நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் உள்ள ”டவுசர்” பையன்கள் வந்து சேர்வார்கள் ஒரு மணிநேரம் கடுமையான விளையாட்டு. வெள்ளை வெளேரென்று, கான்வெண்ட் ஆங்கிலம் பேசி கொண்டிருக்கும் ஒரு கிறுத்துவ சாக்லட் பாய் ”டவுசர்” பையன் (இவன் தான் உண்மையான பையன் – பதினேழு, பதினெட்டு வயதிருக்கும்;  மற்றவர்களெல்லாம் “பையர்கள்”) என்னுடன் டீம் சேர்க்க விரும்பவான். பெரிய பையர்கள் அவன் இஷ்டப்படி விட்டுக் கொடுத்து விடுவதால் நானும் அவனும் தான் அனேகமாக ஜோடி.

அவனோ சால்மான் கான் போல் வெல் பில்ட்.  நான் வெல் பில்ட் இல்லை என்றாலும் பத்து பதினைந்து வருடமாக விட்டு விட்டு விளையாடிய அனுபவம். இருவரும் சேர்ந்து எதிர் டீம்களை ஏழு மணிவரை துவம்சம் செய்திருப்போம். நாங்கள் தரையில் இருந்து இரண்டடி குதித்தெழுந்து அடிக்கும் ஸ்மாஷ்கள்களினால் (smashes) ஷட்டில் எதிர் தரப்பு கோர்ட்டில் பட்டு கிட்டத்தட்ட அவர்கள் தலை வரை பவுன்ஸாகும்.  ஒன்றும் செய்ய முடியாமல் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருப்பர்கள். சில சமயம் வெறுத்து போய்விடுவார்கள். ஆனால் அவர்களிடம் பாராட்டவேண்டியது என்ன வென்றால் அவர்கள் எங்கள் அணியை முதலில் சொன்னது போல் கலைக்க விரும்பமாட்டர்கள். எங்களை தோற்கடித்தே தீர வேண்டும் என்பது அவர்களுடைய ஆவல். எல்லோரும் வயது வந்தவர்களாதலால் ஒருவரும் பேசிகொள்ள மாட்டார்கள். உண்மையான ”டவுசர்” பையன் தான் “ஷூட்”, “மை”, ”ஹெக்” என்றாவது ஒற்றை வார்ததையில் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பான்.

அவனுடைய தந்தையும் விளையாட வருவார். சற்றே பருமனான குள்ளமான உருவம். குறுந்தாடி வத்திருப்பார்.  கண்ணாடி அணிந்திருப்பார். பின் கழுத்திலிருந்து கிளம்பும் ஸ்போர்ட் கார்ட் கண்ணாடியை கச்சிதமாக அதன் இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும். ஒரு நிஜாரும், போலோ ஷர்ட்டும், விலை மிக்க ஸ்னீக்கர்ஸும் அணிந்திருப்பார். மிகவும் கட்டுப்பாடான தந்தை என்று நினக்கிறேன்.  மற்றும் அவனுக்கு கோச்சும் அவர்தான்.

பொதுவாக 4 பேர் விளையாடிக் கொண்டிருக்கையில் வெயிட் செய்துக் கொண்டிருப்பவர்கள் ரெஃப்ரியாக இருப்பார்கள். இவன் விளையாடும் பொழுது தந்தை ரெஃப்ரியாக இருக்கும் சூழ்நிலைகள் வரும். இவன் வயதின் வேகத்தில் சில சமயம் “இட்ஸ் ஒயிட்”, “இட்ஸ் ஒயிட்” (It’s wide) என்று கதறிக் கொண்டிருக்கையிலேயே தந்தை “இன்” என்று தீர்ப்புக்  கூறி விட தலையை பிடித்துக் கொண்டு  ”நோ, இட்ஸ்….ஒயிட்” என்று சுருதி இறங்கிப்போய் தரையைப் பார்த்துகொண்டே தலையை பக்கவாட்டில் அகலமாக ஆட்டியவாறு தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவான். அப்பா உடனே “டூ நாட் டிஸ்புயூட் த அம்பையர்” என்று ஸ்திரமான ஸ்டேட்மண்ட் விடுவார். பையன் கப் சிப் காரா வடை. அவர் எல்லோருக்கும் சொன்ன மாதிரி எல்லோருமே கப் சிப் தான் அன்றைய கோட்டா முடிவடையும் வரை. ஏழு மணிக்கு விளையாட்டு முடிந்து விடும். குளித்திருப்போம்.  இருந்தாலும் நீர் குளியல் போட்டு அம்மா நீட்டும் டிஃபனை சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு பெஸண்டு நகர் பஸ்டாண்டுக்கு ஒரு ”நீண்ட” நடை
பயணம்…சிபிடபிள்யுடி குவாட்டர்ஸிலிருந்து.

சிறுவயதிலிருந்தே விளையாட்டு என்னுடன் சேர்ந்தே பயணித்தது. எங்கு சென்றாலும் அதில்லாவிட்டால் தவறு செய்வது போன்ற ஒரு உள்ளுணர்வு. உறுத்தல். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விளையாட்டு. சாக்கர், பாட்மிண்டன், க்ரிக்கெட், சில சமயம் பிங் பாங்…பள்ளிக் காலத்தில் க்ரிக்கெட்டும் (மாட்டட் பிட்ச்) பாட்மிண்டனும் (இண்டோர் சிமெண்ட் கோர்ட்), கல்லூரியில் சிறிது க்ரிக்கெட்டும் (ரெகுலர் பிட்ச்) சாக்கரும், கல்லூரிக்கு பின்னர் சில வருடங்கள் க்ரிக்கெட்டு… தரம் தாழ்ந்த பிட்ச், சில சமயம் தெரு க்ரிக்கெட்…பின்னர் ஒரு வருடம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் கண்ட்ரோல் ரூமில் பிங் பாங் (இது சிங்கப்பூரில்), பின்னர் சில வருடம் மேலே சொன்ன சிமெண்ட் கோர்ட் ஷட்டில் காக் விளையாட்டு.
இப்படி போய் கொண்டிருந்தபொழுது ஒரு நாள் ஒரு ஞாயிறு அன்று விளையாடி முடித்து எல்லோரும் கிளம்பிய பின்னரும் நானும்  மாத்யூவும் மட்டும் கோர்ட் அருகிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவன் ஒரு திட்டத்தை முன் வைத்தான். அவன் தீவிரமாக டென்னிஸ் விளையாடுவதாகவும், என்னுடன் சேர்ந்து டென்னிஸ் டீம் அமைக்க வேண்டும் என்று விரும்பவதாகவும் கூறினான். எனக்கும் ஆசைதான். ஆனால் என்னுடைய வாழ்க்கை வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. இன்னும் பதினைந்து நாட்களில் அமெரிக்கா புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்தேன்.
”மாத்யூ, ஸாரி, பட் ஐம் லிவீங் டூ யுனைட்டட் ஸ்டேட்ஸ் இன் ஃபிஃப்டீன் டேஸ்”
”யாஹ்? ரியலி”
“யாஹ், ஸோ …”
“யூ ஆர் நாட் ஈவன் கோயிங் டு ப்ளே திஸ்?” – பாட்மிண்டன் கோர்ட்டை சுட்டியபடி

எனக்கு திடுக்கென்றது. என்னடா இது. நான் சொன்னதை இவன் நமபவில்லையோ?. ஏதோ டென்னிஸ் விளையாடபிடிக்காமல் தான் இப்படி ஒரு கதை சொல்கிறேன் என்று நினைக்கிறானோ?

“யெஸ் அஃப்டெர் 15 டேஸ்…”

அவன் கண்ணில் ஏமாற்றத்தை காண முடிந்தது. நன்றாக் இரண்டு வருடமாக போய்கொண்டிருந்த விளையாட்டு த்டைபடப்போகிறது எனப்தில் எனக்கும் ஏதோ ஒன்றை இழக்கும் உணர்வு ஏற்பட தொடங்கியிருந்தது. தலையை குனிந்து கொண்டான். சிறிது நேரம் மௌணமாக உட்கார்ந்திருந்தோம். பின்னர் எழுந்தான். “குட் லக்” என்று கூறிவிட்டு விடைப்பெற்று சென்று விட்டான். பின்னர் மிஞ்சியிருந்த பதினைந்து நாட்களில் அவன் கோர்ட்டுக்கு வரவேயில்லை.

விளையாட்டு என்பது சிலருக்கு மிக ஸீரியஸான ஒன்று. நானும் விளையாட்டில் ஸீரியஸ்தான். இவனுக்கும் அது போல்தான். ஏதோ பிராஜக்டை நான் அபாண்டன் செய்வது போல் உணர்ந்து விட்டான் என நினைக்கிறேன். வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு நகரவேண்டிய நிர்பந்தம் எனக்கு. என்னுடைய ஸ்டேட் டீம், நேஷனல் டீம் கனவுகளெல்லாம் கலைந்து முடிந்த தருணம். மாயை விலகி விழித்தெழுந்துப் சுற்று முற்றும் பார்த்த  பொழுது யதார்த்த உலகம் என்ற பஸ்ஸில் “போலாம் ரைட்” என்று விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஃபுட்போர்டிலாவது இடம் கிடைத்து விடாதா என்று அந்த பஸ்ஸுடன் ஓடிக்கொண்டிருந்த கால கட்டம்.

அவனுக்கோ அவனுடைய கனவு பிம்பத்தை நினைவாக்கும் வயதும், முயர்ச்சியும் இருந்தது. அதுவரை என்னுடைய டென்னிஸ் விளையாட்டெல்லாம் மொத்தமே ஒரு எட்டு மணி நேரம் தான். ஜப்பானிய சக ஊழிய நண்பர்கள்  இருவர் சிங்கப்பூரின் ஆர்ச்சிட் ஓட்டலில் டென்னிஸ் கோர்ட்டை ஒரு ஆறு மணி நேரத்திற்கு 90 டாலர்கள் கொடுத்து புக் செய்திருப்பார்கள். அவர்கள் ஓய்வெடுக்கும் நேரங்களில் இன்னொரு சக இந்திய ஊழியரும், நானும் டென்னிஸ் பந்துகளை நெட்டை தாண்டி எதிராளியிடம் அடிக்க முயல்வோம். ஆனால் பந்துகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, கோர்ட்டின் வேலியை தாண்டி விழும். நாங்கள் அடித்த பந்தை நாங்களே பொறுக்கி வருவதற்க்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் முடிந்துவிடும். இவவளவு தான் என் டென்னிஸ் எக்ஸ்பீரியன்ஸ்.   என்னை வைத்து மாத்யூ எந்த மாட்சை ஜெயிக்க?

முரண்பாடுவுடைய ஒரு விளையாட்டே வாழ்க்கையில் அங்கம் வகித்தது. இங்கே அமெரிக்காவில் வந்து செட்டிலாகி விளையாட்டு ஒரு ஒழுங்குக்கு வருவதற்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடமாகியது.  ஆனாலும் இந்த இடைப்பட்ட ஒன்பது வருடங்களிலும் அப்படி இப்படி விளையாடி எப்படியோ டென்னிஸும் கற்றாகியது. ஏதோ அடித்தால் ஒழுங்காக பந்து போகும். சர்வ் பலமாக செய்ய வர ஆரம்பித்தது. அதன் பின்னர் ஒரு நான்கு வருடங்களாக வார இறுதியில் தீவிர டென்னிஸ். இப்பொழுது ஒரு 6 மாதமாக மறுபடியும் தேக்கம், விளையாடுவதற்கு ஒரு நிரந்தர சக டென்னிஸ் வீரர் கிடைக்காததால்.

வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினேன்…

(தொடரும்)