முதல் பகுதி இங்கே. இரண்டாம் பகுதி இங்கே. இந்த பகுதியில் கடைசி 33 புத்தகங்கள்.

68. ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா: முதலில் படிக்கும்போது மிக ஷாக்கிங்காக இருந்தது. ஷாக் வால்யூ தவிர வேறு எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை.

69. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்: தமிழின் தலை சிறந்த புத்தகங்களில் ஒன்று. கதையும் பிரமாதம், அவர் பயன்படுத்தி இருக்கும் பல இலக்கிய உத்திகளும் பிரமாதம். எழுத்தின் ஆர்ட்டும் க்ராஃப்டும் அருமையாக கலந்த புத்தகம்.

70. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – டி.ஆர். கார்த்திகேயன்: படித்ததில்லை.

71. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: பிரமாதம்! இதைப் பற்றிய பதிவு இங்கே.

72. குட்டி யாப்பா – நாகூர் ரூமி: படிக்க வேண்டும்.

73. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன்: படித்ததில்லை.

74. Made in Japan – அகியோ மொரிடா: படித்ததில்லை.

75. வைரமுத்து கவிதைகள் [முழுத்தொகுப்பு]: வைரமுத்து pretentious என்பது என் கருத்து. மேலும் கவிதை என்றால் எனக்கு அலர்ஜி. அதனால் இதை படிக்கும் வாய்ப்பு மிக குறைவு.

76. India after Gandhi – ராமச்சந்திர குஹா: மிக நல்ல புத்தகம். மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பகுதி அருமையாக இருந்தது. இதைப் பற்றிய பதிவு இங்கே.

77. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்: பாலகுமாரனின் நல்ல புத்தகங்களில் ஒன்று. காயத்ரியின் free sex கொஞ்சம் வலிந்து நுழைக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வாத்தியார் கரிச்சான் குஞ்சுவை மனதில் வைத்து எழுதப்பட்டவராம். ஆர்தர் ஹெய்லியை போல ஒரு தளத்தின் – மார்க்கெட், லாரி தொழில் – பல நுணுக்கங்களை நன்றாக கொண்டு வந்திருப்பார்.

78. மதினிமார்கள் கதை – கோணங்கி: படிக்க வேண்டும்.

79. காற்றில் கலந்த பேரோசை – சுந்தர ராமசாமி: படித்ததில்லை.

80. புலிநகக் கொன்றை – பி.ஏ. கிருஷ்ணன்: நல்ல புத்தகம்.

81. கொரில்லா – ஷோபா சக்தி: படித்ததில்லை.

82. ஸ்… [அண்டார்டிகா] – முகில்: படித்ததில்லை.

83. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் முத்துலிங்கம் அசோகமித்ரனின் வாரிசு. எல்லா கதைகளிலும் ஒரு observer மாதிரிதான் எழுதுவார். அருமையான நகைச்சுவை உணர்வு உள்ளவர். நான் அவரது முழு தொகுப்பையும் இணையத்தில்தான் படித்தேன்.

84. முத்துலிங்கம் கதைகள் [முழுத்தொகுப்பு]: முந்தைய புத்தகத்துக்கு எழுதியதுதான்.

85. தீ – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.

86. சடங்கு – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.

87. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பொன்னுத்துரை: படித்ததில்லை.

88. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி. ராமமூர்த்தி: படித்ததில்லை.

89. இஸ்தான்புல் – ஓரான் பாமுக்: பாமுக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். படித்ததில்லை.

90. A House for Mr Biswas – வி.எஸ்.நைபால்: படித்ததில்லை.

91. Half a Life – வி.எஸ். நைபால்: படித்ததில்லை.

92. ராஜு ஜோக்ஸ்: படித்ததில்லை.

93. பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்: படித்ததில்லை.

94. அதர்வ வேதம்: படித்ததில்லை.

95. இலியட் – தமிழில்: நாகூர் ரூமி: இலியடை ஏதோ ஒரு வடிவத்தில் படித்திருக்கிறேன். எனக்கு இந்திய இதிகாசங்கள்தான் மிக சிறந்தவையாக தெரிகின்றன.

96. சிந்திக்கும் நாணல் – மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும் – எஸ்.வி. ராஜதுரை: படித்ததில்லை.

97. புயலிலே ஒரு தோணி / கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம்: படித்துக் கொண்டிருக்கிறேன்.

98. Muhammad : His Life Based on the Earliest Sources – மார்ட்டின் லிங்ஸ்: படித்ததில்லை.

99. சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் – முகில்: படிக்க வேண்டும்.

100. நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? – எம்.ஆர். காப்மேயர்: படித்ததில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:

சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல், வாடிவாசல் பற்றி அழியாச்சுடர்கள் தளத்தில்

ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி

அதர்வ வேதம் பற்றி சில கேள்விகள்
அதர்வ வேதம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி

1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா, சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்

Advertisements