“சுஜாதாவின் முன்னுரை
சில்வியா ப்ளாத் என்னும் கவிஞர் சிறு வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போவதற்கு முன், பிரமிப்பூட்டும் சில கவிதைகள் எழுதினர்.  அவரது கவிதைகள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன.  இன்றைய இளைய சமுதாயத்தின் சோகங்களின் அடையாள தெய்வமாக சில்வியா கருதப்படுகிறார்.  அவருக்கு  bipolar disorder என்னும் மன நோய் இருந்ததாம்.  யோசித்துப் பார்த்தால், நம் அனைவருக்கும் அவ்வப்போது இது ஏற்படும்.  நவீன வாழ்க்கையின் கெடுபிடிகள் நம்மை நெருக்கும்போது, நம் கோபத்தையும், அதிருப்தியையும் காட்ட, ஒரு வடிகால் தேவைப்படுகிறது.

சில்வியா ப்ளாத்தின் வாழ்கைக் குறிப்பை வாசித்ததும், எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, ஒரு குறுநாவலாக எழுதினேன்.  அதை ஆனந்த விகடனில் பிரசுரித்தார்கள்.

இந்த குறு நாவலில் என்னைக் கவர்ந்த சில சுஜாதாவின் வைர வரிகள்
“God is in the details. எதையும் நுட்பமா கவனிக்கணும்… தெரியுதா ?  எனக்கு ஒரு கேள்விக்கு விடை கிடைச்சாதான் நிம்மதியா தூங்குவேன்.”  (வசந்த்துக்கு  கணேஷின் அட்வைஸ்)

“இயற்கைல ஒரு டீப் சிம்ப்ளிசிட்டி இருக்கும்பாங்க.  ஒரு சம்பவம் நிகழ்ந்ததுக்கு இரண்டு மூன்று விளக்கங்கள் இருந்தால், அதில் மிகவும் எளிமையானதைத்தான் எடுத்துக்கணும்”  (Ganesh on Acoms Razor which says that : ‘the simplest answer is usually the right answer’  )

bipolar disorder பற்றி
“கொஞ்சம் விளங்கற மாதிரி சொல்லுங்க.  மேனிக் டிப்ரெஷன்னு சொல்வாங்களே, அதுவா ?”
“அதான்.  சட்சட்ன்னு மூடு மாறும்.  ஒரே உற்சாகமா இருப்பாங்க.  உலகத்திலேயே, நான்தான் புத்திசாலி, திறமைசாலி,  என்னாலே எதுவும் முடியும்,  வானத்தை வில்லா வளைக்க முடியும்பாங்க.  இப்படி ஒரு சமயம்.  மற்றொரு சமயத்திலே, நாள் கணக்கா டிப்ரெஷன்.  அப்படி ஒரு சுய இரக்கம்.  நம்ம எல்லாருக்குமே, இந்த மாதிரி மூடு ஷிப்ட் ஓரளவுக்கு இருக்கும்.  இவங்க கேசுல பயங்கரமா வேறுபடும்.”