“ஆர்யபட்டா” – இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து கர்நாடக மாநிலத்தில் வெளிவந்தது. அதற்கு சுஜாதா திரைக் கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் 1998ல் தொடர் கதையாகவும் வந்தது. இந்தக் கதையின் ஆதாரக் கருத்தை கன்னடத்தில் முன்னணி நடிகரான ரமேஷ் அரவிந்த் சுஜாதாவிடம் சொல்ல, அதை அவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஒரு திரைப் படத்தை மனதில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் இருப்பதால், படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

Advertisements