கடுகு என்ற அகஸ்தியன் ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளில் பிரபலம். அவரது கமலா, தொச்சு காரக்டர்கள் இன்னும் பலருக்கு நினைவு இருக்கும். நினைவு இல்லாதவர்கள் அவரைப் பற்றி முன்னாள் குமுதம் உதவி ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன் எழுதியதை இங்கே காணலாம். அவர் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பத்தி ஒன்றை இங்கே காணலாம். இதை எல்லாம் அவர் இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கும் ப்ளாகில் பார்க்கலாம்.

கல்கியைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். கல்கிதான் கடுகுவுக்கு ஆதர்ச எழுத்தாளர். இந்த உறவு எப்படி ஆரம்பித்தது என்று எழுதி இருக்கிறார். அதில் கல்கியின் மறைவு பற்றி எழுதி இருந்த வரிகள் உருக்கமாக இருந்தன.

கல்கிக்கு அஞ்சலிக் கூட்டங்களை பல அமைப்புகள் நடத்தின என்றாலும், அரண்மனைக்காரத் தெரு கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டம் மறக்க முடியாதது. அதில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கத்தின் காரியதரிசி பேசியது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் பேசியது: “கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் பாரதி விழாவை கல்கி அவர்களின் பரிபூர்ண ஆதரவுடன் பவழக்கார தெருவில் நடத்திக் கொண்டிருந்தோம். தெருவில் தான் மேடை பெரிய கூட்டம். மூன்றாம் நாள் மாலை மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது நான் வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காசு தீர்ந்து போன நிலைமை. பலருக்கு பணம் பாக்கி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். மேடையில் உட்கார்ந்திருந்த கல்கி அவர்களிடம் சென்று, ரகசியமாக கவலையுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர் “தம்பி கவலைப்படாதே, இந்தா. என் வீட்டு மேஜை சாவி, வீட்டிற்குப் போய் என் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வா”என்று சொல்லி சாவியைக் கொடுத்தார். நான் போய் எடுத்து வந்தேன். இளைஞர்கள் மீது அவருக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை …..” என்று பேசிக்கொண்டே வந்த அந்த இளைஞர், துக்கம் தாளாமல் மேடை.யில் நின்றுக் கொண்டே, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார். இவ்வளவு பெரிய கூட்டத்தில், மைக் முன்னால் நின்று அழுகிறோமே என்று அவருக்குத் தோன்றவே இல்லை.

விமர்சகர் சுப்புடுவைப் பற்றி, எழுத்தாளர் தேவன் பற்றி, பத்திரிகையாளர் சாவி பற்றி சுவாரசியமான பதிவுகளும் என் கண்ணில் பட்டன.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
கல்கி – ஒரு மதிப்பீடு
கல்கி பற்றி எஸ்.எஸ். வாசன்
கல்கி, ராஜாஜி, மதுவிலக்கு

கடுகு தளம், கடுகு – சுய அறிமுகம், கடுகு பற்றி ரா.கி. ரங்கராஜன்
கடுகு கல்கியைப் பற்றி எழுதிய பதிவு
கடுகு சுப்புடு, சாவி, தேவன் பற்றி எழுதிய பதிவுகள்

Advertisements