இந்த ஜாதிகள் எப்படி ஏற்பட்டன என்ற ஐதீகங்களை பற்றி கௌதம சித்தார்த்தன் எழுதி இருக்கிறார் (லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்) நான் இவற்றில் எந்த ஐதீகத்தையும் கேள்விப்பட்டதில்லை. இப்போது நம்பிக்கை குறைந்திருக்கலாம், ஆனால் அந்த காலத்தில் இந்த ஐதீகங்கள் பரவலாக நம்பப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. வேட்டுவரை தவிர மற்ற ஜாதியினர் முக்கியமான தொழில்களை செய்பவர்கள். கொல்லர்களும் தச்சர்களும் கருமார்களும் போயர்களும் வண்ணார்களும் நாவிதர்களும் இல்லாவிட்டால் ஊரே அழிந்துவிடும் – ஆனால் இவர்கள் எப்படி தங்கள் முக்கியத்துவத்தை அறியாமல் இருந்தார்கள்?

குறிப்பாக பொன்னர்-சங்கர் கதையை பற்றி சொல்வது மிக நன்றாக இருக்கிறது. தலையூர் காளிக்கும் பொன்னர்-சங்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் உண்மையில் வேட்டை சார்ந்த ஒரு clan-க்கும் விவசாயம் சார்ந்த clan-க்கும் இடையில் ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். பிற்காலத்தில் அது ஒரு தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும். (clan-க்கு தமிழில் என்ன எழுதுவது? எனக்கு இந்த சமூகம் என்ற வார்த்தையை கண்டால் அலர்ஜி – நாடார் சமூகம், பிராமண சமூகம், தேவர் இனம் என்றெல்லாம் வேறு sub-species மாதிரி எழுதுகிறார்கள். ஆனால் குழு என்ற வார்த்தையும் சரிப்படவில்லை.)

ஆசாரி ஜாதியினர் பூணூல் போடுவதைப் பற்றியும் ஒரு ஐதீகம் இங்கே விவரிக்கப்படுகிறது. பூணூல் பற்றி இங்கே நிறைய விவாதிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கலாம்.

இதை படிப்பவர்களும் தங்களுக்கு தெரிந்த ஜாதி ஐதீகங்களை பற்றி சொல்லுங்களேன்!

தொடர்புடைய பதிவுகள்:
வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர் ஜாதி உருவான ஐதீகங்கள்

Advertisements