இந்த கேள்வியை அவ்வப்போது இணையத்தில் பார்க்கிறேன். பூணூல் ஜாதி அடக்குமுறையின் சின்னம், அதை அணிவது தான் உயர்ந்த ஜாதி, சூத்திரர்களின் பிறப்பு கேள்விக்குரியது என்பதைத்தான் சுட்டுகிறது, அப்படி பிராமணர்கள் நினைக்கவில்லை என்றால் அதை என் இன்னும் போட்டுக்கொண்டு அலைகிறார்கள், தூக்கி கடாச வேண்டியதுதானே என்று குமுறுவதை வினவு தளம் மாதிரி இடங்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கலாம்.
பூணூல் போடுவது தவறில்லை என்று வாதிடுபவர்கள் அடிக்கடி சொல்வது செட்டியார்கள், ஆசாரிகள் மற்றும் சில ஜாதியினரும் பூணூல் போட உரிமை உள்ளவர்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலோர் மனதில் பூணூல் என்றால் பிராமணர்கள்தான்; வேறு யாரும் இல்லை. ஆசாரிகள் பூணூல் போடுவது அவர்களின் ஜாதி மேட்டிமைத்தனம் என்று யாரும் நினைப்பதில்லை. பாரதியார் தலித் கனகலிங்கத்துக்கு பூணூல் போட்டாராம். சரி பூனூல்தான் போட்டாயிற்றே, கனகலிங்கம் இனி மேல் பிராமணன் என்று பாரதியும் வ.வே.சு. ஐயரும், வ.ரா.வும், மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் கனகலிங்கத்துடன் சம்பந்தம் பேசவில்லை. பிராமண ஜாதியில் பிறந்தவர்களுக்கே பூணூல்; அவர்கள் உடலில் பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பிராமணர்களே; மற்றவர்கள் ரங்கநாதன் தெருவில் வாங்கிப் போட்டுக்கொண்டாலும் சரி, பாரதி போட்டுவிட்டாலும் சரி, இல்லை பரம்பரை பரம்பரையாக ஆசாரிகள் மாதிரி போட்டாலும் சரி, அவர்கள் பிராமணர்கள் மாதிரி “உயர்” ஜாதியினர் இல்லை – அதனால்தான் ஜாதி மேட்டிமைத்தனத்தின் குறியீடு என்றுதான் பூணூலை பலரும் கருதுகிறார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் கேள்வியே தவறானது. பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது பிரச்சினையே இல்லை. ஒருவர் உடலில் என்ன அணியலாம் என்பதை தீர்மானிக்க அடுத்தவருக்கு உரிமை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி.
பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது, அப்படி அணியும் பூணூல் அறுக்கப்பட வேண்டும், ஏனென்றால் பூணூல் ஜாதியின் சின்னம், நாங்கள் ஜாதி அழிக்கப்பட வேண்டியது என்று உறுதியாக நம்புகிறோம் என்று சொன்னால்; ஒருவர் உடலில் என்ன இருக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லை, அவர் வாழும் சமூகத்துக்குத்தான் இருக்கிறது என்ற இந்த கோட்பாட்டை அனுமதித்தால்; அப்புறம் எப்படி தோள் சீலை அணியக் கூடாது என்ற அன்றைய சமூக அடக்குமுறையை மறுப்பது? சானியா மிர்சா குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று சொல்லும் முல்லாவை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தொப்புளில் வளையம் ஆபாசம் என்று உறுதியாக எண்ணும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வளையத்தை பிடுங்கிப் போடும் உரிமை உண்டா?
ரொம்ப சிம்பிளான விஷயம். என் உடலில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த விதி செல்லாமல் போகும் இடம் ஒன்றுதான் – என் உடலில் இருக்கும் பொருள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைக்கக்கூடும் என்றால்; (இடுப்பில் தற்கொலை பெல்ட்டுடன் விமானத்தில் ஏறக்கூடாது; வாயில் புகையும் சிகரெட்டுடன் ரோடில் போகாதே etc.) இந்த தீங்கு tangible ஆக இருக்க வேண்டும். என் மனம் புண்படுகிறது மாதிரி intangible effects என்றால் நானே புண்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், நானே மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஹுசேனின் ஓவியங்கள் பதிவில் மனம் புண்படுவதைப் பற்றி எழுதியவை இங்கும் பொருந்தும்.
பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். யார் உடலில் என்ன இருக்க வேண்டும் (அது அடுத்தவரை நேரடியாக பாதிக்காத வரையில்) என்று தீர்மானிக்க நீங்கள் யார் என்பதுதான் கேள்வி. என் உடலில் பூணூல் இருக்கிறது, எனக்கு மட்டும்தான் பூணூல் போட உரிமை இருக்கிறது, ஏனென்றால்/அதனால் நான் உயர்ந்தவன், மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர் என்று சொன்னாலொழிய பூணூலைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. என் உடலில் நான் பூணூல் அணிவதும், தாயத்து கட்டுவதும், குல்லா போடுவதும். முண்டாசு கட்டுவதும், தாலி அணிவதும், பான்ட் மேலே ஜட்டி போடுவதும், ஜட்டி மேலே பான்ட் போடுவதும் என் தனி மனித உரிமை. அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கலாம், அவ்வளவுதான். வேண்டுகோளை நிறைவேற்றுவதும், போடா போ என்பதும் என் இஷ்டம், என் உரிமை.
பதிவின் கருத்தை விட்டுவிட்டு பார்ப்பன சதி, மனு ஸ்ம்ரிதி, சூத்திரனை இழிபிறப்பு என்று சொல்கிறான் என்று எங்கேயோ போகும் மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.
திசெம்பர் 3, 2009 at 9:01 முப
நீங்கள் சொல்வதை முற்றிலுமாக ஏற்க முடியவில்லை. Tangible’ஆக இருக்க வேண்டும். உண்மை தான். அப்புறம் ஏன் மாட்டுக்கறி திங்கிறவனை பார்த்து மட்டும் இவனுங்களுக்கு non-Tangible’ஆக கோவம் வருகிறது…?
திசெம்பர் 3, 2009 at 9:09 முப
என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீர்கள்?
பிராமணர்களை எதிர்த்து பேசவும், அவர்களை இழிவு படுத்தவும், அவர்களை விரட்டி பூணூலை அறுக்கவும் எவ்வளவு துணிவும் வீரமும் வேண்டும்! எப்போதும் கத்தியோடும் கைக்குண்டுகளோடும் ஏகே 47 ஓடும் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பயங்கரவாதிகளை வேரோடு அழிக்கப் பாடுபடுகிறவர்களை சாமானியமாக நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com
திசெம்பர் 3, 2009 at 9:27 முப
பூனூல் ஒரு குறிப்பிட்ட சாதியின் உரிமையா இல்லையா என்பதைவிட அவர்கள் அதை ஒரு கடமையாகத்தான் கருதுகிறார்கள் என்பது உண்மை நிலை.
திசெம்பர் 3, 2009 at 10:26 முப
நான் முழுவதுமாக உங்கள் கருத்தில் ஒத்து போகிறேன்
என் தலையில் போட்டிருக்கும் குல்லாவை நான் தான் கலட்டனும் நீங்க புடுங்கனும்னு நினைச்சா அது தீவிரவாதம்
அதே போல் தான் பூனுலும் சிலுவையும்
திசெம்பர் 3, 2009 at 10:31 முப
பூணூல் போடக்கூடாதுன்னு சொன்னாலும் தப்பு …. பூணூல இன்னார்தான் (சாதி) போடணும் மற்றவர்கள் போடபடாதுன்னு சொன்னாலும் தப்பு
-:)
திசெம்பர் 3, 2009 at 11:30 முப
இங்கே பிராமணர்கள், என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்களே, இங்கே யார் பிராமணர்? எப்படி இவர்கள் பிராமணர்கள்?
//“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”//
எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனது இருக்கிறதா?
அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் )”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
மனதிலே கருணை இருக்கிறதா?
எல்லோரையும் போல காலையிலே இட்டிலி , பொங்கல் தின்று விட்டு வேலைக்கு ஓடுகிறீர்கள். மாலையில் வீட்டில் வந்து அடைகிறீர்கள்.
உங்களுக்கும் மற்றவருக்கும் கிஞ்சித்தாவது வித்யாசம் உண்டா?
ஆன்மீக அறிவாவது இருக்கிறதா?
இன்றைக்கு இருக்கும் “பிராமணர்க”ளுக்கு, யார் சரியான ஆன்மீக வாதி என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு கூட ஆன்மீக அறிவும் கிடையாது, அதப் பற்றி அக்கரையும் இல்லை. இவர்கல் மதிப்பது, பணத்தை, பட்சணத்தை, பதவியை தான்.
மற்ற பிரிவினரை விட ஆன்மீகத்திலே அதிகம் ஏமாந்தவர்களாக , அசிங்கத்தை ஒண்ணுமே நடக்கலை என்று கூறி விட்டுப் போகும் அளவுக்கு இருக்கிறீர்கள்.
பிறகு என்னய்யா பிராமணன்?
தோல்தான் கொஞ்சம் வெள்ளை. அதுதான் பிராமணைக்கு அடையாளமா? உத்தர பிரதேசத்திலே இருக்கும் தலித் பிரிவினர் கூட அதிக வெள்ளையாக இருக்கிறார்கள். திருந்துங்கள் அய்யா, கொஞ்சம் அறிவை உபயோகப் படுத்தக் கூடாதா?
திசெம்பர் 3, 2009 at 4:00 பிப
‘தனி மனித உரிமை’ என்கிற பார்வையில் மட்டும் பூணலை பார்க்க இயலாது. பூணல் என்பது ஒரு குறிப்பு அல்லது சின்னம். அது சமூகத்திற்கு ஏதோ சொல்லவே அணியப்படுகிறது.
பூணல் நுழைவுச் சீட்டாகவும் பயன்படும் இடங்கள்:
வேதம் ஓதுவதற்கு பூணல் அவசியம். பிராமண சங்கத்தில் இடம் பெற பூணல் அவசியம். உபநயணம் , திதீ போன்றவற்றிற்கு பூணல் அவசியம். அக்ரகாரத்தில் வாழ பூணல் தேவை. ஏன் சில தர்மங்களைப் பெற பூணல் அணிபவர்களே ‘தகுதியுடையவர்கள்’. SSMATRI.COM ல் இடம் பெற பூணல் தேவை.
பூணலை சமூகச் சின்னம் என்கிற அடிப்படையில் தான் பொரும்பான்மையான மக்கள் விமர்சிக்கின்றனர்.
திசெம்பர் 3, 2009 at 7:36 பிப
RV
You are exactly right nobody or society can force you to not to wear poonul. But people have the right to think and say and criticizes wearing poonul as an oppressive symbol. As long as no violence or any other form of coercion involved they have the right to say what do they want about poonul wearers and you have the right to ignore them. But Murali has a point too our society is not used to absolute free speech and absolute freedom of individual as in US Constitution. Indian law/culture restrict what they think in hate speech. (Granted it is applied arbitrarily). But thats the way our society/law is structured now we can’t wish that away. In US you can say any kind of racist things unless you directly incite violence so you can’t apply the same yard stick to the Indian society. Unfortunately or fortunately if the larger society thinks wearing poonul as a form of oppression then you have to face the consequence of living in that society. If you empathize with a Dalit point of view for him the poonul has been a symbol of oppression (among other things) and now he sees a chance to assert his place in society by opposing it even though the guy who is wearing has nothing to do with the years of oppression the Dalits parents and Grandparents endured. So the Brahmin thinks that he is just following a tradition by wearing a poonul. From his point he is right.But the Dalit thinks by making them not wearing a poonul he is asserting his place in the society as an equal. He is right too. Bottom line is in a perfect society these symbols will loose their significance and nobody would be bother to think about it. But for now there is no correct or wrong answer to your question
திசெம்பர் 4, 2009 at 1:54 முப
What a big deal.Anybody can wear it. It is quite cheap in terms of price.I have no problem if Veeramani wears it.Most tamil brahmins dont wear it.How does that become a symbol of oppression for dalits when somebody in california or london wears it.In India who is against dalits and who is preventing their entry into temples.Brahmins are a minority group with 4% of population in Tamil Nadu.But blaming them is easy as they
dont hit back or indulge in violence.
Many brahmins wear it as a traditional practice and only few do rituals regularly.
As long as a person does not hurt others feelings by words and action what is the harm in wearing it.I may or may not wear it, that is my choice.But others cannot decide that for me.I wont prevent others from wearing it.It is as simple as that.
திசெம்பர் 4, 2009 at 1:56 முப
பூணூல் ஜாதி அடக்குமுறையின் சின்னம், அதை அணிவது தான் உயர்ந்த ஜாதி, சூத்திரர்களின் பிறப்பு கேள்விக்குரியது என்பதைத்தான் சுட்டுகிறது, அப்படி பிராமணர்கள் நினைக்கவில்லை என்றால் அதை என் இன்னும் போட்டுக்கொண்டு அலைகிறார்கள், தூக்கி கடாச வேண்டியதுதானே என்று குமுறுவதை வினவு தளம் மாதிரி இடங்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கலாம்.
Vinavu.com cannot be the bench mark for any meaningful discussion.Ignore that site.
திசெம்பர் 4, 2009 at 6:19 முப
மெத்த படித்த ஐய்யா ஆர்.வி அவர்களுக்கு…
“அவாளே பதிவு போட்டு, அவாளே பின்னூட்டம் போட்டுண்டு சாகட்டும்” என்று உங்க நண்பர் எழுதியது போல் எங்களுக்கும் எழுத தெரியும்… ஆனால்… நாங்கள் உண்மையின் பக்கம் இருப்பவர்கள் ஆயிற்றே, உங்களுக்கும் உண்மை சொல்வோம், ஊருக்கும் சொல்வோம்… ஈயத்தை காய்ச்சி ஊத்துடா என்று சொல்லோம்.
பூணூல் மத அடையாளமா இல்லே… ஜாதி அடையாளமா?
அது ஏன் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் அணிந்திருக்கிறார்கள்? நீங்கள் சொன்ன மற்ற அடையாளங்கள் எல்லாம் (குல்லா, சிலுவை, மற்ற இன்ன பிற…) மத அடையாளங்கள், அது அந்த மதத்தை சார்ந்த அனைவரும் அணிந்திருப்பர், அவன் கூலி ஆளா இருந்தாலும், வேறு தொழில் செய்பவனா இருந்தாலும். அதை அணிந்த அவர்கள், அவர்களின் வழிபாட்டு தளங்கள் உள்ளே எங்கு வேணும் என்றாலும் செல்லலாம். நீங்கள் சொன்னது அப்படியா இருக்கு?
இதை தெரிந்த நீர் சும்மா பகல் வேஷம் போட வேண்டாம். இல்லை உண்மையிலேயே தெரியாது என்றால் இன்று முதல் தெரிந்து கொள்ளும்.
திசெம்பர் 4, 2009 at 7:02 முப
பூணூல் நாங்கள் மட்டும் அணிய கூடிய ஒன்று அல்ல..
நீங்களும் அணியலாம் என்று தானே நான் பதிவு இட்டுள்ளேன், பின்னே நீங்கள் ஏன் இப்படி பின்னூட்டி இருக்கிறீர்கள் என நீங்கள் கூறலாம் அப்படியாகின்,
கடவுளர்களுக்கும் அணிந்து விட்டிருக்கிறீர்களே… அது கடவுள் அவரே அவருக்கு அணிந்து கொண்டாரா? சரி அவரே இரவோடு இரவாக அணிந்து கொண்டார் என்று நாம் நம்பினால் அந்த கடவுள், பிராமணரா? ஆசாரியா? இல்லே செட்டியாரா?
திசெம்பர் 4, 2009 at 7:33 முப
pongaya poi pullaigala patika vaigapa.
திசெம்பர் 4, 2009 at 7:35 முப
அன்பு, மாட்டுக் கறியை தட்டிலிருந்து பிடுங்கி எறியாத வரை குறை சொல்ல ஒன்றுமில்லை. மாட்டுக்கறி தின்னாதே என்று சொல்ல எல்லா உரிமையும் உண்டு. அதை கேட்பதும் போடா புண்ணாக்கு என்பதும் தின்பவர் இஷ்டம், உரிமை.
ஜவஹர், commie.basher, ராஜவம்சம், ஞானபித்தன், தமிழ் பிராமின், மறுமொழிக்கு நன்றி!
திருச்சிக்காரன்/க்வார்ட்டர் கோயிந்தன், இங்கே பேசப்படும் விஷயத்துக்கும் உங்கள் மறுமொழிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அடுத்தவருக்கு உள்ளதா என்பது பற்றி பேசுகிறோம் என்பதை நினைவூட்டுகிறேன்.
முரளி, பூணூல் ஜாதி மேட்டிமைத்தனத்தை குறித்த ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது அது (பிராமணர்களுக்கும்) வெறும் நூல் மட்டுமே என்பது என் அபிப்ராயம். அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அடுத்தவர் உடலில் என்ன இருக்கலாம் என்று கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு வேண்டும் என்றால் அதுவே சர்வாதிகாரத்தின், பாசிசத்தின் முதல் படி.
கார்த்திக், தலித் என்ன, பிராமணர் தவிர்த்த எல்லா ஜாதியினரும் பூணூலை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே. ஆனால் அது தவறான அணுகுமுறை என்ற என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
திசெம்பர் 4, 2009 at 8:47 முப
Your blog post is a rehash of your argument with me in my blog. I think, elsewhere too. Your major point is individual liberty. You say, you act of wearing poonul does not hurt anyone. In your words, don’t have any tangible effect.
Cambridge Online dictionary states as under:
TANGIBLE (Adjective); real or not imaginary; able to be shown, touched or experienced: Model sentences:
We need tangible evidence if we’re going to take legal action.
Other tangible benefits include an increase in salary and shorter working hours.
You are, therefore, correct to say your act does not have any tangible effect on the onlooker. Poonul is a thread. It is useless to be a weapon, unlike the belt which can be unsheathed and used as a weapon. So, you are correct.
But you are also incorrect to refer to the no-tangible effect. Poonul and all other religious ceremonies are in the domain of spirit. They are spiritual affairs in our lives. Such affairs can’t have tangible effect on human beings generally speaking, except when such theories like caste system is put to practice and discrimination is meted out to dalits.
Then, why to talk about tangible effect?
Coming to individual liberty, here too you go again. Poonul is done by the ceremony called upanayanam. Like thaali. You can’t bye the thread and put it around you, like Bharati did for the dalit boy. As you said, none can become a Brahmin like that. Poonul ceremony is a religious ceremony, prescribed for Brahmins. Thali is also a religious ceremony. The whole Hindu marriage is religious.
The argument that anyone can wear it, is ok for me; but that ‘anyone’ should also do it by a ceremony only. Thus, from every angle, it is a religious ceremony, enjoined upon Brahmins, or, to please members like Tirchykaaraan, enjoined upon Hindus in general.
In such background, how is it possible for you to say that it is an individual affair. What for do you wear it? For adornment like wearing jewels? Is the yellow thread, thali is worn by Tamil women as as adornment? Can it be equated with a gold neckless on her person? The answer is obviuous, isn’t it?
It is a tradition for Brahmins to wear Poonul. But what is tradition? Even if you do it mechanically, you subscribe to the belief system behind such traditions. In other words, you do it, not mechanically, but to continue the tradition, thereby perpetuating the belief system. It is, therefore, a conscious act.
By committing the act consciously, you accentuate and accept the belief system, and such system has, in it, the varnashradharam of four castes, which were given to Hindus by Lord Krishna.
Thus, you are for dividing people into castes. Those who are against caste system, will rave and rant about your act. It they don’t rave and rant about others resorting to caste marks, it is their partisan attitude, motivated to malign Brahmins only. But, I, for one, am against all forms and symbols of castes.
myownquiver
திசெம்பர் 4, 2009 at 8:51 முப
RV,
//திருச்சிக்காரன்/க்வார்ட்டர் கோயிந்தன், இங்கே பேசப்படும் விஷயத்துக்கும் உங்கள் மறுமொழிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அடுத்தவருக்கு உள்ளதா என்பது பற்றி பேசுகிறோம் என்பதை நினைவூட்டுகிறேன்.//
சம்பந்தமேயில்லாமல் – சரியான வார்த்தை.அதுதான் நானும் கேட்கிறேன்.
நீங்கள் பூணூலை பற்றி ஆயிரம் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் சம்பந்தமேயில்லாமல் இப்போது தமிழ் நாட்டிலே பிராமணர்கள் இருப்பது போலவும், அவர்கள் பூணூல் அணிவது போலவும் எழுதுவது ஏன்?
ஆனால் இங்கே இப்போது வாழாத, இல்லாத பிராமணர் பற்றி, உங்கள் கட்டுரையில் நீங்கள் ஏன் சம்பந்தமேயில்லாமல் பேசுகிறீர்கள் என்று கேட்கிறேன்.
நீங்கள் எல்லாம் பிராமணர் , பிராமணர் என்று
சம்பந்தமே இல்லாமல் சொல்லிக் கொள்வது ஏன்?
பிராமணன் என்பது ஒரு Specie இருந்து,it became extinct now. இப்போது இங்கே யாருமே பிராமணர் இல்லை.
காசுக்காக அலைபவன், காசு சேர்ப்பது இந்த
உலக வாழக்கையில் இன்பம் அனுபவிப்பது என
இருப்பவர்கள் எப்படி பிராமணன் ஆக முடியும்?
மக்களின் நன்மைக்கு உழைக்காத சுயநலவாதி எப்படி பிராமணன் ஆக முடியும்?
இங்கே பிராமணர்கள் என்ற வார்த்தை சம்பந்தமே இல்லாமல் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது உங்கள் கட்டுரையில். அதைத் தான் சொல்லுகிறேன்.
திசெம்பர் 4, 2009 at 9:10 முப
//By committing the act consciously, you accentuate and accept the belief system, and such system has, in it, the varnashradharam of four castes, which were given to Hindus by Lord Krishna.
//
அத்தியாயம் 4 , செய்யுள் (13)
” சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண – கர்ம விபாகச ”
கடவுளே ஒரு மனிதனைப் பிறக்கும் போதே தாழ்மையானவன், கீழானவன் , அடிமையானவன் என்ற நிலையிலே படைப்பதாகக் கூறினால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும். எனவே சகோதரர் வேந்தனுக்கு சினம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே!
ஆனால் கிருட்டினர் கூறியதை எல்லோரும் தங்களின் சுயனலத்திற்கக்காக திரித்துக் கூறிய நிலையில் கிருட்டினர் என்ன செய்ய முடியும்?
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.
ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.
இதையே வள்ளுவர்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்”
“பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக் கல்”
கூறியுள்ளார்.
கிருட்டினரும், வள்ளுவரும் கூறினால் என்ன? அதையும் நாம் சோதனைக்கு உள்ளாக்குவோம்.
கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை- மக்களுக்கு அவசியமானவை- மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் கெடுதல் விளைவிக்கக் கூடியவை- மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.
மக்களுக்கு அவசியமான கர்மாக்களை கூட இழிவான கர்மாவாக கருதுவது தவறு.
பிணம் எரிப்பது இழிவான செயலா? பிணம் எரிப்பது எவ்வளவு முக்கியமான செயல்.
இன்ஜினீயர் தன் வேலையை ஒரு வாரம் தாமதப் படுத்த முடியும். பிணம் எரிப்பவர் ஒரு நாள் தன் வேலையை தாமதப் படுத்த முடியுமா?
அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பார்ப்பன் ஓதுகிறான். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலத்தை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறான்.
இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் பார்ப்பனர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.
பார்ப்பனர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.
பார்ப்பன் ஓதாவிட்டால் ஒன்றும் கேடு இல்லை. ஆனால் சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.
இன்றைய உலகச் சூழலில் மென்பொருள் பணியாளர் வேலை வாய்ப்பு இல்லை. பணிப் பாதுகாப்பு உள்ள தொழில்கள் சுடலைக் காப்பாளரும், முடி திருத்துபவரும்தான். அடிப்படை சம்பளம் ரூபாய் 20,000 என நிர்ணயித்தால் பல பார்ப்பனர் சுடலைக் காப்பான் வேலைக்கு மனுப் போடுவார்கள்.
கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.
ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில், இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.
ஆனால் நாம் ஆனால் நாம் கூற வருவது இந்தையெல்லம் விட முக்கியமான விடயம்.
எந்த செயலை செய்தாலும் அவர் அந்த தொழிலை எவ்வளவு திறமையுடனும், நாணயத்துடனும் செய்கிறார்கள் எனபதைப் பொருத்தே சமூகம் அவரை மதிக்கும்.
ஒரு தச்சர் நன்றாக மேசை தயாரித்துக் குடுத்தால் அவரைப் பார்ரட்டுகிறோம். ஒரு கணக்கர் திறமையுடன் செயல் படாவிட்டால் எந்த மதிப்பும் குடுப்பது இல்லை.
ஒரு பொறியாளர் அவர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பாலத்தை இடிந்து விழும்படிக் கட்டினால் அவர் பார்ப்பனராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
ஒரு காவல் துறை அதிகாரி, அவர் கற்ப்பழிப்புக் கேசை மூடி அனியாயம் செய்தால் அவர் பார்ப்பனராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
எனவே குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் என்பது இயற்க்கையாக உருவாவது. ஆனால் அதை சுயனலமுடையோர், பிறப்பின் அடிப்படையில் என்று மாற்றி விட்டனர்.
ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் கூட வேறுபாடுகள் வேண்டாம்- வேண்டவே, வேண்டாம்- என்பதற்க்காகத்தான் நான், எல்லொரும்
கனவானாக மாறும் வகையில், நல்லொழுக்கத்தில், நல்லெண்ணதில், அன்பின் அடிப்படையில் ஒன்றாக இணைவொம் என்று கூறுகிறென்.
நான்தான் உயர்ந்த சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுபவன் மிக இழிந்தவன்,
பிறர் வாயில் பீ தினிப்பவன் மிக இழிந்தவன்,
நிதானத்தை இழந்து காட்டுமிரான்டித் தாகுதலில் ஈடுபடுபவனும் மன முதிற்ச்சி அடைய வேண்டியுள்ளது.
அரசாங்க வேலையில் இருந்து மக்களிடம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பவன் மிக இழிந்த திருடன்,
இவர் போன்ற பலரையும், எல்லோரையும் பகுத்தறிவின் அடிப்படையில் கனாவானாக்கி, வள்ளுவர் பாராட்டும் படியான மனிதராக்கி ஒன்றினைப்போம்.
உலகின் பல பகுதிகளிலும் அடிமை- முறை மிக மோசமான அடிமை முறை இருந்துல்லது. அமெரிக்காவில் அடிமைகளுக்கு பிறந்த குழந்தைகள் எஜமானுக்கு சொந்தம் எஜமானிடம் பணம் இல்லை என்றால், அடிமை மனைவியை தனியாக விற்று விடுவான்.
அவர்கள் திருந்தி விட்டார்கள்.
நாம் இன்னும் திருந்த வேண்டியுள்ளது.
இந்து மதமோ, எந்த மதமோ, இனி சாதி வேறுபாடு இல்லை.
இருக்க முடியாது.
திசெம்பர் 4, 2009 at 9:26 முப
Mr Jawahar attributes all oppoostion against poonul to INFERIORITY COMPLEX;
It is an immature argument.
The opposition to poonul, as I have written to RV hereinabove, is nothing but an opposition to the entire caste symbols, that is, against castes, caste system.
If DKists violently attack brahmins and tear their poonuls, it is an undemocratic way to show the opposition. If their attack is only this caste symbol, that too, worn by brahmins, it means their motives may be different. There are many other caste symbols which should also be hated and protested.
The democratic way to oppose caste-system is by peaceful protest only, and leave it to the conscience of the people concerned to take a stand against castes. That was why, I ended by protest with these words:
ACCEPT IT OR DISCOUNT IT.
The wearers are requested to take a stand on their own.
Govt uses law against caste discrimiantion, by legislating and implementing the Prevention of Untouchablity Act. But the guilty go to jail for a few days or months ony and then come out.
Will the guilty have a change of heart, as the jailbird in O.Henry’s story Cop and the Anthem does? Can govt change minds of its citizens? Can our mental inclinations colored differently by coercise methods? NOT AT ALL.
Similarly, whether the poonul offends those who dont believe in castes is for Brahmins to see and take a stand.
Here, Raagahavan expressed his stand: He said, இணையதள தாசில்தார்கள் என்ன சொன்னாலும் நாம் நம் முன்னோர்கள் சொன்ன வழிபடி நடப்போம்.
He did leave at that. He cites the story of Thiruppaanaatruvalvaar. What an irony? Of all the stories, he needed a story which came heavildy down upon a brahmin for his casteist physical attact on a poor and innocent Dalit Thiruppaanaatru aalvaar?
Speaking for the anti-caste lobby, I would say, their protest should continue. It is better to make the brahmins aware that truly religious life transcends such things; to make them aware their conscious act of wearing caste symbols is being protested .
I think, there ends the duty of anti-caste lobby:
To make brahmins sensitise about the popular opinion.
திசெம்பர் 4, 2009 at 9:28 முப
//He did leave at that//
Please read it:
He didn’t leave at that.
திசெம்பர் 4, 2009 at 10:31 முப
////RV Says:
டிசம்பர் 4, 2009 at 7:35 மு.பகல்
அன்பு, மாட்டுக் கறியை தட்டிலிருந்து பிடுங்கி எறியாத வரை குறை சொல்ல ஒன்றுமில்லை. மாட்டுக்கறி தின்னாதே என்று சொல்ல எல்லா உரிமையும் உண்டு. அதை கேட்பதும் போடா புண்ணாக்கு என்பதும் தின்பவர் இஷ்டம், உரிமை.
////
‘அண்ணல்’ ஆர்.வி அவர்களே…
நியாயத்தை உங்களிடம் இருந்து தான் நாங்கள் கற்று கொள்ளவேண்டும் போல் இருக்கிறதே, உங்கள் வார்த்தைகள் தானே மேலே தரப்பட்டுள்ளது?
நாங்களாக உங்களை பிடித்து பூணூலை அறுத்து எறிந்தால் தான் தவறு. (அப்படி யாரையும் நாங்கள் செய்தது இல்லை)
மாட்டு கறி சாப்பிடாதே என்று உங்களுக்கு சொல்ல உரிமை உள்ளது போல் எங்களுக்கும் பூணூல் போடாதே என்று சொல்லும் உரிமை உள்ளது அல்லவா.
திசெம்பர் 4, 2009 at 3:12 பிப
பூணூல்-பூ+நூல்.பூ=அழகு.(‘நெஞ்சத்து நல்லம் யாம் எனும் நடுவுநிலை தரும் கல்வி அழகே அழகு’)நூல்=1.பஞ்சுநூலுமாகும்.2.பயிலும் நூல்களுமாகும்.தற்காலக் கல்வி முறையில் LKG தொடங்கி Ph.D.,அதற்கு மேலும் பயின்ற கல்விக்கேற்ப சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குருகுலக்கல்விமுறைக் காலத்தில்,கல்வி கற்கத்தொடங்கி அடிப்படை நூல்களைக் கற்றபின்,அக்கற்றலுக்கான சான்றிதழாக-‘உபநயனம்’-முப்புரிநுல் சார்த்தப்படுகிறது.அக்கல்வி மேலும் விரிவடைந்து இலக்கண,இலக்கிய,வேத,வேதாந்த சாத்திரங்கள் முதலியவற்றைக் கற்ற தேர்ச்சிக்கேற்ப.அவ்வப்போது பூணூலின் முப்புரியின் உட்புரிகளின் எண்ணிக்கையும் கூட்டப்பட்டு பூணூலின் தடிமன் பெருத்துக்கொண்டே அமையும்.அதைப் பார்தமாத்திரத்தல் ஒருவருடைய கல்வித்தகுதியைத் தெரிந்துகொள்ளலாம்-அது தற்காலச் சான்றிதழ்களின் மாற்று அடையாளம்.சான்றிதழ்களைத் தனியாகப் பாதுகாக்கிறோம்.ஆனால் பூணூல் அவரவர்உடலோடு ஒட்டி உறவாடி அவர்தம் கல்வித் தகுதியை உலகிற்கு உணர்த்தியது.அதனால்தான்,பூணூலை அணியும்போது,இடது தோள்பட்டையில் தொடங்கி,மார்பில் இதயத்ப்பகுதியை(நெஞ்சை)தொட்டுவலப்புறம் செல்கிறது.இதன் கருத்து-கற்ற கல்வி இதயத்தில்-நெஞ்சத்தில் நிலைத்திருப்பதை குறியீடாகக் காட்டுவதாகும்.அவ்வாறு கற்றுணர்ந்தவர்கள் நெஞ்சத்து நல்லவர்களாய்,எவ்வுயிர்க்கும் தீங்கெண்ணாத செந்தண்மை(குளிர்ந்த அன்பொழுக்கம்)பூண்டவராய் வாழ்வர் ஆதலால் அந்தணர் ஆவர்.அந்தணர்=அம்+தண்மை+அர்.உண்மை நிலை இவ்வாறுதானிருக்கும்-ஆனால் காலப்போக்கில் சடங்காகிப்போய்-சாதி அடையாளமாகி எங்கோ போய்விட்டது-என்பது அடியேனின் கருத்தாகும்.
திசெம்பர் 5, 2009 at 7:16 முப
//Mr Jawahar attributes all oppoostion against poonul to INFERIORITY COMPLEX;//
Is it?
This is a news to me!
திசெம்பர் 5, 2009 at 4:46 பிப
பிள்ளைவாள், மறுமொழிக்கு நன்றி!
myownquiver, நீள நீளமாக, சாரம் குறைவாகவும் சக்கை அதிகமாகவும் பதில் எழுதுகிறீர்கள். எதற்கு 4 பத்தியில் tangible effect என்றால் என்ன என்று விளக்குகிறீர்கள்? யார் tangible effect என்றால் என்ன என்று புரியாமல் தவிப்பது? ஏன் tangible effect பற்றி பேசுகிறேன் என்று வேறு கேட்கிறீர்கள். அதுதானே அய்யா என் பதிவின் மையக் கருத்து? மற்றவர் மீது ஏதாவது tangible effect இல்லாத வரையில் உங்கள் உடலில் என்ன இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு என்றுதானே கத்திக் கொண்டிருக்கிறேன்?இத்தனை முறை rehash செய்தும் அது கூட புரியவில்லையா?
சரி மெய்ன் பாயிண்டே புரியாதபோது மற்றவை புரியாததில் ஆச்சரியம் இல்லை. பாரதி கனகலிங்கத்துக்கு உபநயனம் செய்துதான் பூணூல் போட்டார். கனகலிங்கம் பிராமணர் என்று யாரும் ஏற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இன்றைய சமூகம் பிராமண ஜாதியில் பிறந்தவர்களை மட்டுமே பிராமணர்கள் என்று பார்க்கிறது. இன்றைய சமூகத்தில் பூணூல் அப்படி பிறந்தவர்களின் குறியீடு. அவர்கள் உடம்பில் பூணூல் இருக்கிறது/இல்லை , ஆசாரிகள் பூணூல் போட்டுக் கொள்கிறார்கள் என்பது எல்லாம் பொருட்படுத்தப்படுவதில்லை.
சரி சாரத்துக்கு வருவோம். பூணூல் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது, அது ஜாதி மேட்டிமைத்தனத்தின் சின்னம், அதை நூல் என்று நினைத்து போட்டுக் கொண்டாலும் பிராமணர்கள் ஜாதி மேட்டிமைத்தனத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். (மிக உருப்படியான வாதம்.) பூணூலை எப்படி அடுத்தவர் பார்க்கிறார் என்பது பிராமணர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு இடம் கொடுத்தால்; யாரோ ஒரு முத்தாலிக்காம், அவரும் அவர் கூட்டமும் பெண்கள் பப்புக்கு போகக் கூடாது என்று நினைக்கிறார்களே, அதை பற்றி என்ன சொல்வது? ஒரு பெண் பப்புக்கு போவது முத்தாலிக் அதை எப்படி பார்க்கிறார் என்பதைப் பொறுத்துதான் தீர்மாநிக்கப்பட வேண்டுமா? அடுத்தவனின் உடல், உடை ஆகியவை என் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைபத்துதான் பாசிசத்தின் முதல் படி.
அப்புறம் ஜவஹர் சொன்னது மாதிரி அவர் மறுமொழியில் “inferiority complex” என்ற கருத்தை எங்கே கண்டுபிடித்தீர்கள்? முன் முடிவுகளின் மூட்டை நீங்கள்.
திருச்சிக்காரன், உங்கள் வரையறைப்படி இன்று பிராமணன் என்பவன் எங்குமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசும் சமூகமும் உங்கள் வரையறையை பின்பற்றவில்லை. அரசும் சமூகமும் இன்று யாரை பிராமணன் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு பூணூல் போட உரிமை உண்டா என்று எழுதப்பட்ட பதிவு இது.
க்வார்ட்டர் கோயிந்தன், என்னங்க இது? இதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்! மிக வெளிப்படையாகவே இன்னொரு முறை சொல்லிவிடுகிறேன். பூணூல் போட வேண்டாம் என்று வாதிட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை ஏற்றுக் கொள்வதும், போடா போ என்பதும் பூணூல் அணிபவர் இஷ்டம். பூணூலை அறுத்தெறிய வந்தால்தான் தப்பு. இது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லையே? என் வாதம் அனைத்தும் அதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் பூணூல் அணிபவர் உரிமை என்பதைப் பற்றித்தானே இருக்கிறது? சரி பரவாயில்லை. பூணூல் வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் பூணூல் அணிபவர் உரிமை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? (மாட்டுக் கறி விஷயத்தில் ஒத்துக் கொள்வது போலத் தெரிகிறது)
பூணூலை நாங்கள் யாரும் அறுத்தெறிந்தது இல்லை என்று எழுதுகிறீர்கள். “நாங்கள்” என்றால் யாரென்று தெரியவில்லை. என் உறவினர்களில் பூணூல் அறுக்கப்பட்டவர்கள் உண்டு. குடுமி அறுக்கப்பட்டவர்கள் கூட உண்டு என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ராசு, பூணூலைப் பற்றி நல்ல விளக்கம் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல இருந்திருக்கலாம், எனக்கு பூணூலில் தோற்றம் பற்றி பேசும் அளவுக்கு அறிவு பத்தாது.
திசெம்பர் 5, 2009 at 7:24 பிப
//திருச்சிக்காரன், உங்கள் வரையறைப்படி இன்று பிராமணன் என்பவன் எங்குமே இல்லாமல் இருக்கலாம்.//
நன்றி.
//ஆனால் அரசும் சமூகமும் உங்கள் வரையறையை பின்பற்றவில்லை. அரசும் சமூகமும் இன்று யாரை பிராமணன் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு பூணூல் போட உரிமை உண்டா என்று எழுதப்பட்ட பதிவு இது.//
நன்றி சமூகம் அவ்வப் போது பிராமணர்கள் எனவும், அவ்வப் போது பார்ப்பனர் எனவும் சொல்லி வருகிறது.
பிராமணர்கள் என்று சொல்லப் பட்டவர்கள் எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டோழுகியதாக, சர்வ பூதானம் மைத்ர என்ற நிலையிலே இருந்ததாக கருதப் படும் போது,
சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அந்த பிராமணன் என்ற வார்த்தையை உபயோகிப்பது, பொருத்தம் இல்லாமல் உள்ளது. தயவு செய்து பிராமணன் என்ற வார்த்தையை உபயோகிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சர் சி.வி. ராமனை, விஞ்ஞானி என அழைக்கலாம். மூலிகை பெட்ரோல் விவாகாரம் சமபந்தப் பட்ட இராமர் பிள்ளையை விஞ்ஞானி என அழைக்க முடியுமா?
திசெம்பர் 6, 2009 at 8:28 முப
//tangible effect என்றால் என்ன என்று விளக்குகிறீர்கள்? யார் tangible effect என்றால் என்ன என்று புரியாமல் தவிப்பது? ஏன் tangible effect பற்றி பேசுகிறேன் என்று வேறு கேட்கிறீர்கள். அதுதானே அய்யா என் பதிவின் மையக் கருத்து? மற்றவர் மீது ஏதாவது tangible effect இல்லாத வரையில் உங்கள் உடலில் என்ன இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு என்றுதானே கத்திக் கொண்டிருக்கிறேன்?இத்தனை முறை rehash செய்தும் அது கூட புரியவில்லையா?//
You try to turn the tables upon me.
You are saying again, when an item does not have tangible effect upon another person, no one can interfere with your act of using that item. Isn’t your point? Am I correct?
For this point, I have said, there is no question of tangible effect involved in wearing in puunul, so it is idiotic to apply that rule here. Wearing it comes under the domain of spiritual affairs. Such an affair doesn’t affect anyone directly, unless when it is put into blatant practice to humiliate others, like for e.g the caste system, which was put into practice to humilate the dalits; and they suffered for millennia!
Why do you harp on the point when it has been invalidated?
I affirm that the punul is in spiritual matter and, as all of you, as. Tirchykaaran and the new one, Raasu, have pointed out, you wear it to show your caste. True or false?
Do you claim it as your right to flaunt your caste in society? Yes or No?
Say, yes. No one is going to quarrel with you for saying that because, it is not you alone, all other caste people do that, in their own way – for e.g the raucous cry of Thevars during the guru puja procession at Chennai this year.
Arent you one with such casteists as Thevars? But, they don’t pretend to be otherwise. They openly say, Yes, we are casateists. They are prepared to face any reaction. Who like them? Similarly, if the no-caste lobby says, We dont like you for wearing a caste symbol, you don’t take it, do you? That is the difference between you and Thevars.
திசெம்பர் 6, 2009 at 8:38 முப
//சரி மெய்ன் பாயிண்டே புரியாதபோது மற்றவை புரியாததில் ஆச்சரியம் இல்லை. பாரதி கனகலிங்கத்துக்கு உபநயனம் செய்துதான் பூணூல் போட்டார். கனகலிங்கம் பிராமணர் என்று யாரும் ஏற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இன்றைய சமூகம் பிராமண ஜாதியில் பிறந்தவர்களை மட்டுமே பிராமணர்கள் என்று பார்க்கிறது. இன்றைய சமூகத்தில் பூணூல் அப்படி பிறந்தவர்களின் குறியீடு. அவர்கள் உடம்பில் பூணூல் இருக்கிறது/இல்லை , ஆசாரிகள் பூணூல் போட்டுக் கொள்கிறார்கள் என்பது எல்லாம் பொருட்படுத்தப்படுவதில்லை.//
Your main point is Individual liberty which no one can question as long as it has no tangible effect. I have explained it in detail.
Please understand Bharati. The act of putting a punull on kanakalingam is not make him a brahmin but to mock at brahmins, Bharati knew about all nitty-gritty of brahmhinism more than you. He knew clearly that wearing punul is not so silly as to take a thread, call a paid preist, and put around a dalit. .
His ceremony was with a clear purpose to humiliate the brahmins. It was a mock ceremony. When he is serious he wrote a lot glorying many ceremonies in the religion. He was a staunch Hindu who believed in Vedic Hindu religion and rituals and ceremonies. His only grouse with brahmins was the same as Rasu and others have put it: The brahmins have turned all such ceremonies for self-aggrandizement.
திசெம்பர் 6, 2009 at 8:42 முப
//பூணூல் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது, அது ஜாதி மேட்டிமைத்தனத்தின் சின்னம், அதை நூல் என்று நினைத்து போட்டுக் கொண்டாலும் பிராமணர்கள் ஜாதி மேட்டிமைத்தனத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். (மிக உருப்படியான வாதம்.) பூணூலை எப்படி அடுத்தவர் பார்க்கிறார் என்பது பிராமணர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு இடம் கொடுத்தால்; யாரோ ஒரு முத்தாலிக்காம், அவரும் அவர் கூட்டமும் பெண்கள் பப்புக்கு போகக் கூடாது என்று நினைக்கிறார்களே, அதை பற்றி என்ன சொல்வது? ஒரு பெண் பப்புக்கு போவது முத்தாலிக் அதை எப்படி பார்க்கிறார் என்பதைப் பொறுத்துதான் தீர்மாநிக்கப்பட வேண்டுமா? அடுத்தவனின் உடல், உடை ஆகியவை என் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைபத்துதான் பாசிசத்தின் முதல் படி.//
Chaotic.
You limit it to your point. Dont go to others. It will confuse things. My argument is with you, mainly, the point of individual liberty to show your caste in open society.
Do you agree that punul is used as a caste symbol by brahmins themselves,as Raasu and others have pointed out? If yes, is it right or wrong behavior?
Please limit it to that. Lets know.
திசெம்பர் 6, 2009 at 8:43 முப
//அப்புறம் ஜவஹர் சொன்னது மாதிரி அவர் மறுமொழியில் “inferiority complex” என்ற கருத்தை எங்கே கண்டுபிடித்தீர்கள்? முன் முடிவுகளின் மூட்டை நீங்கள்.//
He has also written that here.
My answer is: He has not said that in your blog. But in mine.
திசெம்பர் 6, 2009 at 9:27 முப
சகோதரர் myownquiver அவர்களே,
பூணூலை சாதியின் அடையாளமாக ஆக்குவதா இல்லையா என்பது உங்களின் கையிலும் என் கையிலும் தான் இருக்கிறது.
பூணூல் சாதி அடையாளம் என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை . நான் அப்படிக் கூறியிருக்க முடியாது. ஏனெனில் என்னுடைய அடிப்படை சமத்துவ சமுதாயம் அமைப்பது.
பூணூல் என்பது எல்லோராலும் அணியப் படக் கூடிய ஒன்று என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியிருத்திக் கூறுகிறேன். நீங்கள் இந்தப் பூணூலை சாதி ஒழிப்புக்கோ, சமத்துவ சமுதாயத்துக்கோ ஒரு தடையாக கருத வேண்டியதில்லை. இந்தப் பூணூலை வைத்தே நாம் சாதியை அழிக்க முடியும். தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக் கொள்ளும் பலருக்கும் இந்த பூணூலோ அல்லது சந்தி வணக்கமோ எதற்க்கு செய்யப் படுகிறது என்பதே தெரியாது. நீங்கள் இவ்வளவு தூரம் சிந்திக்கிறீர்கள், அப்படி இருக்கும் போது இந்த பூணூலை வெறுக்க வேண்டியதோ, ஒதுக்க வேண்டியதோ அவசியம் இல்லை என்பதை எளிதாகப் புரிதல் செய்யலாம்,
நான் கூற வருவது என்ன என்பதை இன்னும் விளக்க வேண்டியுள்ளது.
உங்களின் மின் அஞ்சல் முகவரி தர முடியுமா?
என்னுடைய தளத்திலே இதை பற்றி விரைவிலே எழுதுவேன்.
திசெம்பர் 7, 2009 at 4:06 பிப
நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக்கை ஒரு ஜெர்மன் அணிந்தால் யூதன் சும்மா ‘போடா முட்டாள்’ என்றா சொல்ல முடியும் ?
பூணலை மேட்டிமைத்தனம் , தனி மனித உரிமை என்று நீங்கள் விவாதிப்பதே தவறனா தளம் என எண்ணுகிறேன்.
திசெம்பர் 7, 2009 at 4:55 பிப
சகோதரர் bmurali80 என்ன சொல்ல வருகிரார் என்று தெரியவில்லையே!
நாஜிகள் என்கிரார், சுவஸ்திக்
என்கிறார்.
நாஜிகளைப் போல தமிழ் நாட்டில் இனப் படுகொலை வெறித் தாக்குதல்கள் நடை பெறவில்லையே?
ஒருவேளை தமிழ் நாட்டிலே தலித்துகள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்களை சொல்கிறாரா? அல்லது சட்டக் கல்லூரியிலே மாணவர்கள் நடத்திய வெறித் தாக்குதல்களை சொல்கிராரா?
அந்த மாணவர்கள் சுவஸ்திக் சின்னம் அணிந்து இருந்தனரா? தெளிவாக சொல்லுங்க!
திசெம்பர் 8, 2009 at 3:31 பிப
திருச்சிக்காரன்,
மாட்டுக் கரி விஷயத்தை சாதாரணமாக ‘போடா முட்டாள்’ என்று சொல்லிவிட முடியும் ஆனால் சில வலிகளை அவ்வாறு ஒதுக்க முடியாது. அதற்கான உதாரணமே நான் மேல் சொன்னது. மேலும் அதனை ஜெர்மன்-யூதன் என்ற வரையறையிலேயே அந்த உதாரணத்தை பார்க்க வேண்டுகிறேன்.
புரிதலுக்கு நன்றி.
ஓகஸ்ட் 11, 2010 at 1:30 பிப
மேலாடையின் சுருக்கமே பூணூல் என்போரும் உண்டு.
ஓகஸ்ட் 12, 2010 at 1:01 முப
மறுமொழிக்கு நன்றி, கண்ணன்!
ஓகஸ்ட் 12, 2010 at 3:55 முப
@ thiruchikkaran
நான் என் பிள்ளையை பள்ளியில் சேர்க்க செல்கிறேன்.
Application form ல் caste, community, religion என்று தான் இருக்கிறது. எனக்கு அது தவிர்த்த option இல்லாத வரை உங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் theory ஆக மட்டுமே இருக்க முடியும்.
பிராமணர்கள் என்றால் இவர்கள் தான் இப்படித் தான் இருக்க வேண்டும். இது தான் வரை அறுக்கப் பட்ட குணங்கள் என்று மேற்கோள் காட்டுவது சரி. மற்றவர்களுக்கு அது போல் ஏன் சொல்லுவதில்லை
சமுதாயம் பிராமணனை மட்டும் விதிக்கப் பட்ட வரையறையில் இரு என்று சொல்லுவது சரியா? அவன் பிள்ளை படித்து ஒரு உத்தியோகம் பார்க்கக் கூடாதா? தவறு செய்ய உரிமைக் கோரவில்லை என்பதை கவனிக்கவும்.
முதலில் நீங்கள் பிரமணைக்கான வரையறைகளை மட்டும் அமுல் படுத்தி மற்றவற்றை வர்ணாசிரமக் குப்பை என்று சொல்லுவதை நிறுத்தினாலே பாதி பிரச்னை குறையும்.
சில மந்திரங்களை சொல்ல பூணூல் அவசியமாகிறது. அதை சொல்ல விரும்புபவன் அணிகிறான். அவ்வளவே. பூணூலை கடாசிவிட்டவனுக்கு தனி option இருக்கா சொல்லுங்கள். நீ போட்டாலும் போடாட்டாலும் உனக்கு பெப்பே என்று சட்டம் வைத்துக் கொள்ளும் போது சரி அதையாவது போட்டுக் கொள்ளலாம் என்றும் சிலர்முடிவெடுப்பார்
ஓகஸ்ட் 14, 2010 at 2:49 பிப
When ever number of hits reduce on the web site, you start topics like Ponool is needed?, Namam or vibhoothy is good? etc. Some idotic brahmin haters will send pages of comments and some one who believes they can change this hatred will respond to it also. You can be happy that lot of vistors to your site , but it does it change anything?.
WHy not start topic is sunnath is hygenic or relgious ceremony? You will have more hits ( may be real hits)
ஓகஸ்ட் 16, 2010 at 2:15 முப
டக்ஸ், என் தளத்தில் எனக்கு பிடித்தவை எழுதப்படுகின்றன. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்க வேண்டாம். அதை விடுத்து ulterior motives தேடுவது கேனத்தனம். அதுவும் போன வருஷம் எழுதப்பட்ட ஒரு பதிவை தேடி எடுத்து இப்படி கமென்ட் அடிப்பது கடைந்தெடுத்த கேனத்தனம். சுன்னத் பற்றிய உங்கள் யோசனைக்கு நன்றி. எனக்கு அதிகம் தெரியாத டாபிக், எழுத ஒன்றுமில்லை. நீங்கள் எழுதினால் இங்கே போட முயற்சி செய்கிறேன்.
விருட்சம், மறுமொழிக்கு நன்றி!
நவம்பர் 25, 2011 at 7:20 முப
first ellorum onnu therinju kunga….. ovvoruvarukum ovvovoru nambikai irukum….. thevai illamal ivargal poonul podalama vendama endru naam mudivu seiya kudathu…. avar avar madha nambikai ku naam mariyathai koduthu than aaga vendum…. ithai en muslim midam poi nee kulla aniya kudathu endru yaarum solla maatringa……..
செப்ரெம்பர் 16, 2012 at 1:18 முப
யார் உடலில் என்ன இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற உரிமை அவரவர்களுக்குத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன் நண்பரே . அனால் ஒரு விஷயத்தை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .பூணூல் போடும் உரிமை உயர் சாதி யினருக்குத்தான் இருக்கிறது என் மனு சொல்கிறார் . அதை காலம் காலமாக நாம் கடை பிடித்து வருகிறோம் .அதுவே நம் இரத்தத்திலும் அதன் அணுக்களிலும் ஓடிக் கொண்டு இருக்கிறது . பிராமணிய மேலாதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மனு நீதி சாஸ்திரத்தின் தாக்கங்கள் தான் இன்று வரை நமக்குள் உள்ளன . சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் திரு G.BUHLER மொழி பெயர்த்த மனு ஸ்மிருதி சொல்வதை கேளுங்கள் . குழந்தைக்கு பெயர் வைக்க மொட்டை போட திதி கொடுக்க .,உபநயனம் செய்ய என நாம் இப்போது செய்து வருபவை எல்லாமே மனு சொன்ன (ஆ) நீதி தான் .
பூணூல் போட மனு சொன்ன விதிப்படி பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் தான் அந்த உரிமை உள்ளது
Chapter II 36: In the eighth year after conception, one should perform the initiation (upanayana) of a Brahmana, in the eleventh after conception (that) of a Kshatriya, but in the twelfth that of a Vaisya.
மொட்டை போட
Chapter II 35. According to the teaching of the revealed texts, the Kudakarman (tonsure) must be performed, for the sake of spiritual merit, by all twice-born men in the first or third year
பேர் வைக்க
Chapter II 30. But let (the father perform or) cause to be performed the Namadheya (the rite of naming the child), on the tenth or twelfth (day after birth), or on a lucky lunar day, in a lucky muhurta, under an auspicious constellation.
Chapter II 31. Let (the first part of) a Brahmana’s name (denote something) auspicious, a Kshatriya’s be connected with power, and a Vaisya’s with wealth, but a Sudra’s (express something) contemptible.
Chapter II 32. (The second part of) a Brahmana’s (name) shall be (a word) implying happiness, of a Kshatriya’s (a word) implying protection, of a Vaisya’s (a term) expressive of thriving, and of a Sudra’s (an expression) denoting service.
Chapter II 33. The names of women should be easy to pronounce, not imply anything dreadful, possess a plain meaning, be pleasing and auspicious, end in long vowels, and contain a word of benediction.
என சொல்லிக் கொண்டே போகலாம் .
சாதி குறித்து நம் மனதில் ஏற்கனவே ஏற்றிவைக்கப் பட்ட கசடுகளை நீக்குவது ரெம்ப கஷ்டம் , கல்வியும் படிப்பும் மட்டுமே அதற்கு துணை நிற்கும் . சாதி அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் நமக்கு அம்மாதிரி கல்வி தருவதில்லை . நல்ல படிப்பு தரும் சிந்தனைகளே தேவை . அதை நாம் நமது சந்ததியினருக்கு தருவோம்.பயனுள்ள விவாதத்திற்கு வழிவகுத்த உங்களுக்கு நன்றி …P.Sermuga Pandian
ஓகஸ்ட் 8, 2014 at 8:24 முப
poonul anium urimai viswabramma kuladhil pirandhavargalukumadumay urithanathu nangal seytha kadavulai naangalay poojika kudathu eanpatharga engalal konduvarapattavan than iyyar k
ஜனவரி 4, 2018 at 7:52 பிப
பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டே ஓடிவிடுங்கள்! அல்லது இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள்! அப்போதுதான் இந்தநாடு எழுச்சிபெரும் ஏற்றம்பெரும்! நீங்கள் சூன்யம்! நீங்கள் மாயை! கானல் நீர்! மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர்வழிகள்!
–விவேகானந்தர்
#ஆதாரம் : எழுமின் விழிமின்!– (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152)
முழு விவரங்களுக்கு கீழே படியுங்கள் :
ஆரிய வம்சத்திலிருந்து தோன்றியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்களே; நீங்கள் எவ்வளவுதான் பெருமை பேசினாலும், எவ்வளவுதான் புகழ் இசைத்தாலும்; உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடைப்போட்டாலும், உங்களுக்கு உயிர் இருப்பதாக, சிந்தனை இருப்பதாக ஏற்க இயலாது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம்போல இருக்கிறீர்கள். நீங்கள் யாரை சவம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ அவர்களிடையேதான் (ஒடுக்கப்பட்டோர்) பாரதத்தின் எதிர்கால வீரிய சக்தி எஞ்சி நிற்கிறது!
மாயை நிறைந்த இவ்வுலகில் நீங்கள் தான் உண்மையான மாயை; புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல்நீர். பாரதத்தின் உயர் வகுப்பாரே உங்களைத் தான் சொல்கிறேன் நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி அதில் எல்லா விதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன.
நீங்கள்தான் சூன்யம். வருங்காலத்தில் உருப்படியில்லாமல் போகப்போகிற திண்மையில்லா வஸ்துக்கள் கனவு உலக வாசிகளே நிங்கள் இன்னும் ஏன் நடமாடுகிறீர்கள்?
கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது?
இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம் உங்கள் கையுள் நாற்ற மடிக்கும் உங்கள் கரங்களிலிருந்து அவற்றை விடுவித்து உரியவர்களிடம் சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், கல்வியும், ஞான ஒளியும், சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள். ஆம் முடிந்த அளவு விரைவாய் அவற்றை ஒப்படையுங்கள் நீங்கள் சூனியத்தில் முழ்கி மறைந்து விடுங்கள் நீங்கள் விலகிய இடத்தில் நவபாரதம் எழட்டும்.
நவ பாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி இவர்களின் குடிசைகளிலிருந்து நவ பாரதம் வெளித் தோன்றும். பல சரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து நவ பாரதம் தோன்றட்டும். தொழிற்சாலைகளிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தையிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், அந்த நவ பாரதம் வெளிவரட்டும்.
இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச் சகித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஆச்சரியகரமான பொறுமையும் தைரியமும் பெற்றுள்ளார்கள். முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அநுபவித்ததன் பயனாக, வளையாத ஆண்மைச் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலகத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்று உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களது சக்தியைப் பாருங்கள்.
இந்த உலகமே கொள்ளாது. ரக்த பீஜனுக்கிருந்த குன்றாத சக்தி இவர்களுக்கும் அருளப்பட்டிருக்கிறது. (ரக்த பீஜன் துர்க்கா சப்த சதியில் வருகிற ஓர் அரக்கன். அவனுடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் கீழே சிந்தினால் அவனைப் போன்றே மற்றொரு ராட்சதன் தோன்றுவான்) அத்துடன் கூடத் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்ந்த வாழ்க்கையிலிருந்து தோன்றுகிற அற்புதமான வலிமை அவர்களுக்கு உண்டு. உலகத்தில் இதனை வேறு எங்குமே காண முடியாது. இதுபோன்ற அமைதி, இதுபோன்ற திருப்தி, இத்தகைய அன்பு இதுபோன்ற மெளனமாகவும் இடைவிடாமல் வேலை செய்துசெயல்படுவது, நேரம் வரும்பொழுது இதுபோன்று சிங்கத்தின் பலத்துடன் வேலை செய்வது – இத்தகைய காட்சியை உங்களால் வேறு எங்குதான் காண முடியும்?
நீங்கள் காற்றில் கலந்து மறைந்து போங்கள். இனி ஒருகாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுங்கள். உங்கள் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதும். நீங்கள் மறைந்து போகிற அந்தக் கணமே புத்தெழுச்சி பெற்ற பாரதத்தின் முதல் முழக்கத்தைக் கேட்பீர்கள். கோடிக் கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய “வாஹ் குரு கீ பதேஹ்” ‘குருதேவருக்கு ஜே’ என்ற முழக்கம் வானோங்கி எழும்.
ஆதாரம் : எழுமின் விழிமின்! – (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152)
swami vivekananda complete works volume 7
MEMOIRS OF EUROPEAN TRAVEL
ஏப்ரல் 16, 2018 at 4:46 பிப
ஆச்சாரிகள்தான் உண்மையான விஸ்வபிராமனர்கள், பிரமன பிரிவில் பெளருசேயம்,ஆருசேயம் என இருபிரிவில் ஆச்சாரிகள் பெளருசேயம் விஷ்வபிராமனர்கள், அவர்கள் வேதம் ஆகமம்,சிற்ப சாஸ்திரங்களின் உருவாக்கிய ரிஷி வழிவந்தவர்கள் ஆலயத்தை நிர்மானாம் செய்து கும்பாபிசேகம் வரை முழுமையாக செய்ய வல்லவர்கள் கருவிலே பிராமனர்கள் என வேதங்கள் கம்மாளர் ஆச்சாரிகளை கூறுகின்றன. மற்ற பிராமனர்கள் உபநயனம் செய்தால்தான் பிராமனர் ஆக முடியும். ஆச்சாரிகளுக்கு என்று வேதஆகம பாடசாலை பிரத்யேகமாக உள்ளது.
ஏப்ரல் 21, 2018 at 7:55 முப
சென்னையில் வசிப்போராயின் பிராமணர்களுக்கும் அவர்களின் மேட்டிமைத்தனத்திற்கும் எதிராக பதிவிட்ட அனைவருக்கும் ஒரு கேள்வி.சிந்திக்க தெரிந்தவர்கள் மட்டும் பதில் அளிக்கலாம்.இன்றைய கால கட்டத்தில் எல்லோருடைய வீடுகளிலும் AC, FRIDGE,CHIMNEY ,TV போன்ற சாதனங்கள் உள்ளன சமையல் அறையில் தண்ணீர் பைப்பும் உள்ளது. மின் சாதனங்களும் உள்ளன. என்னுடைய கேள்வி இந்த சாதனங்களில் பழுது ஏற்பட்டால் பிராமணர்கள் மட்டுமே என் வீட்டில் நுழைந்து ரிப்பேர் செய்யவேண்டும் என்று எந்த பிராமணனாவது சொல்கிறானா? இரண்டாவது ஹோட்டல்களில் சாப்பிடுவது இன்றைய நாகரீகமாக உள்ளது .அப்படி சாப்பிட போகிற எந்த பிராமணனாவது சமைப்பவன் என்ன ஜாதி என்றாவது கேட்கிறானா? வேறு வேலை இல்லாமல் இன்னமும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்களாகவா இருப்பது?
ஓகஸ்ட் 25, 2018 at 11:29 முப
கல், மரம், இரும்பு, வெண்கலம், தங்கம் இவற்றை வைத்து ஒரு படைப்பை உருவாக்குதலின் பொருட்டு இவர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாக்களாகிறார்கள். படைக்கும் தொழிலில் மனம் வாக்கு செய்கை தூய்மையுடன் இருக்கும் பொருட்டே அவர்கள் பூணூல் அணிகின்றனர். மேட்டிமைத்தனத்திற்காக இல்லை.
ஓகஸ்ட் 25, 2018 at 11:35 முப
“பாரதி போட்டுவிட்டாலும் சரி, இல்லை பரம்பரை பரம்பரையாக ஆசாரிகள் மாதிரி போட்டாலும் சரி, அவர்கள் பிராமணர்கள் மாதிரி உயர்” ஜாதியினர் இல்லை” – இங்கு யாரும் பிராமணர்களாக விரும்ப வில்லை. ஐந்து தொழில் புரியும் ஆச்சாரியர்கள் / ஆசாரியர்கள்-கல், மரம், இரும்பு, வெண்கலம், தங்கம் இவற்றை வைத்து ஒரு படைப்பை உருவாக்குதலின் பொருட்டு இவர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாக்களாகிறார்கள். படைக்கும் தொழிலில் மனம், வாக்கு, செயல் தூய்மையுடன் இருக்கும் பொருட்டே அவர்கள் பூணூல் அணிகின்றனர். மேட்டிமைத்தனத்திற்காக இல்லை.
செப்ரெம்பர் 4, 2018 at 11:01 முப
பூணூல் என்பதன் அர்த்தம் என்ன?
அணிவதன் பலன் என்ன
எதன் குறீயீடு போன்வற்றையும் விளக்கி சொல்லுங்கள்
ஆம் சில இனத்தினரை போல வள்ளுவன் என்ற இனத்தினரும் பூணூல் அணிகிறோம்.
விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை தங்கள் தரப்பு விளக்கமென்ன வென்றே கேட்கிறேன்