அமார்த்ய சென் பொருளாதார நிபுணர். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றவர். பல வருஷங்களாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெரிய பதவியில் இருக்கிறார். சாதாரணமாக மேலை நாடுகளுக்கு செல்பவர்கள் இந்திய குடியுரிமையை உதறிவிடுவார்கள், ஆனால் இவர் இன்னும் இந்தியக் குடிமகன்தான்.

அவருடைய பெரிய தலைகாணி புஸ்தகம் Argumentative Indian . படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. 🙂

அவர் 1998-இல் கொடுத்த பேட்டி ஒன்றை அவுட்லுக்கில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் லைசன்ஸ் ராஜ் தளர்த்தப்பட்டால் மட்டும் போதாது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மக்கள் கூட்டமும் இருக்க வேண்டும், அதாவது அவர்களுக்கு அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவ வசதி, infrastructure எல்லாம் இருக்க வேண்டும், அப்போதுதான் market liberalization தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்கிறார்.

கடைசி கேள்வி இந்தியா அப்போது – பத்து வருஷங்களுக்கு முன் – வெடித்த அணுகுண்டு சோதனையைப் பற்றி. மிக லாஜிகலாக அதன் பாதகங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இந்த அணுகுண்டு சோதனை தவறான முடிவு என்று சொல்கிறார். அவர் சொல்லும் காரணங்கள்:

  1. இந்தியா வெடித்த அணுகுண்டு பாகிஸ்தானுக்கு தன் covert அணுகுண்டு டெக்னாலஜியை வெளிப்படையாக காண்பிக்க பெரும் உந்துதலாக அமைந்துவிட்டது. India created that opportunity for Pakistan for doing this without it being blamed as the initiator.
  2. As a result, India’s massive superiority in conventional weapons has been levelled to a large extent.
  3. இந்தியா ஏற்கனவே அணுகுண்டு சோதனை நடத்தியாகிவிட்டது. Pakistan has more to gain from its first explosion than India has from its second.
  4. இந்தியா சர்வ தேச அரங்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. காஷ்மீர், ஐ.நா. செக்யூரிடி கவுன்சில் நிரந்தர இடம், இந்தியா-பாகிஸ்தான் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுதல் போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு இருக்கும் ஆதரவு குறையும்.
  5. பாகிஸ்தானில் ராணுவத்தின் ரோல், தாக்கம் அதிகரிக்கும். இது சிவிலியன் அரசை பலவீனப்படுத்தும். இந்தியாவுக்கு இது நல்லதில்லை.
  6. பணச்செலவு

சென் சொல்வதில் செக்யூரிடி கவுன்சில் நிரந்தர இடம் எப்படி இருந்தாலும் கிடைத்திருக்கப் போவதில்லை. மற்ற நாடுகளின் சந்தேகப் பார்வை ஒரு short term setback மட்டும்தான். ஆனால் அதற்கு பிறகுதான் கார்கில், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபர் ஆதல் ஆகியவை நடந்தன.

என்ன லாபம் என்று சென் சொல்லவில்லை. Tangible லாபம் என்று பார்த்தால் நம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த experimental data. Intangible லாபம் மக்களிடையே இருந்த உற்சாகம்.

சென் ப்ராக்டிகலான காரணங்களை சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது. மேலை நாடுகள், குறிப்பாக அமேரிக்கா செய்வது நியாயம்தான். நான் மட்டும்தான் பொறுப்பானவன், மற்றவர்கள் அணு குண்டுகளை பொறுப்பாக பாதுகாக்க மாட்டார்கள் என்று சொல்ல அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லைதான். ஆனால் சர்வ தேச அரங்கில் நியாயம், அநியாயம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று சென் உணர்ந்திருக்கிறார்.

பின்குறிப்பு: இந்த பேட்டி வந்தபோது சென் நோபல் பரிசு வென்றிருக்கவில்லை.

Advertisements