இந்த பாட்டுக்கு கோனார் நோட்ஸ் தேவை என்று பக்ஸ் சொல்லி இருந்தான். அவன் போன்றவர்களுக்காக:

நாராய் நாராய் பாட்டு
வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக்கு மரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசைக்கு சென்ற பிறகு மீண்டும்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்
ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
நாராய் நாராய் செங்கால் நாராய்

Advertisements