டோண்டு சாரின் வலைப்பூவிலிருந்து:

நான் சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தபோது சாய்நாத் பிரசாத் என்னும் சிறுவன் ஒரு கேள்வி கேட்டானே பாருங்கள். எங்கள் நீதிநெறி வகுப்பில் ராமாயணக் கதையை சொல்லி வந்தார்கள். அதில் விஸ்வாமித்திரர் ராமரை தனது யாகத்தைக் காப்பதற்காக அழைத்துச் செல்லும் கட்டத்துக்கு சற்று முன்னால் கதை இருந்தது. ராமருக்கு 16 வயது முடிந்தது என ஆசிரியர் கூறினார். சாய்நாத் பிரசாத் எழுந்து நின்று பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு கீழ்க்கண்டவாறு கேட்டான்.

சாய்நாத்: சார், ராமரோட சீதை ஒரு வயது பெரியவங்கன்னு சொல்றாங்களே?
ஆசிரியர்: ஆமாம் அப்படியும் சிலர் கூறுவது உண்டு.
சா: அப்படியான்னா சீதை கல்யாணத்தின்போது அவங்களுக்கு 17 வயது?
ஆ: ஆமாம்
சா: கல்யாணத்துக்கு பிறகு 10 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்திருக்காங்க. அதுக்கப்புறம்தான் வனவாசம்.
ஆ: ஆமாம்
சா: அப்புறம் காட்டுல 13 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் ராவணன் வந்து சீதையை அபகரித்துச் சென்றான்.
ஆ: ஆமாம்.
சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்?

17+12+13 இல்லை, 17+10+13 என்று நீங்கள் சொன்னால் உன்னித்து படித்திருக்கிறீர்கள்! (தட்டச்சுப் பிழை என்று டோண்டு தகவல் தருகிறார்.)

தொடர்புடைய பதிவுகள்:
டோண்டுவின் ஒரிஜினல் பதிவு

Advertisements