கொல்லப்புடி மாருதி ராவ்

கொல்லப்புடி மாருதி ராவ்

கொல்லப்புடி மாருதி ராவ் – தெலுங்கு எழுத்தாளர், நடிகர் – படிக்க வேண்டிய தெலுங்கு புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு லிஸ்ட் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலாவின் தளத்தில் லிஸ்ட் இருக்கிறது.

சாதாரணமாக லிஸ்டுக்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த முறை படித்திருப்பது ரொம்ப கொஞ்சம், அதனால் லிஸ்ட் கிஸ்ட் எல்லாம் இல்லை. படித்திருக்கும் இரண்டு புத்தகங்கள் பற்றி கீழே:

குருஜாதா அப்பாராவ் எழுதிய கன்யா சுல்கம் – செகந்தராபாதில் வாழ்ந்தபோது கேள்விப்பட்ட ஒரே தெலுங்கு புத்தகம் இதுதான் கன்யா சுல்கம் ஒரு க்ளாசிக். இப்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும். என்னிடம் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறது, சான் ஹோசே, சன்னிவேல், ஃப்ரீமான்ட், நூவர்க், இன்னும் பக்கத்தில் இருக்கும் ஊர்க்காரர்கள் இரவல் வாங்கி படிக்கலாம்.

கொடவகண்டி குடும்பராவ் எழுதிய சதுவு தமிழ் மொழிபெயர்ப்பு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும். தமிழில் இதன் பெயர் படிப்பு. சாஹித்ய அகாடமி வெளியீடு. 1910-35 கால கட்டத்தில் ஒரு மத்திய தர குடும்பம், ஸ்கூல் படிப்பு, சுதந்திர போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது. பின்புலம் நன்றாக வந்திருக்கும், ஆனால் கதையில் என்ன பாயின்ட் என்று எனக்கு தெளிவாகவில்லை.

மற்ற இந்திய மொழி எழுத்தாளர்களை பற்றி நாம் அவ்வளவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அப்படியே படித்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமே தெரிந்து கொள்வது நம் துரதிருஷ்டம். இது போன்ற லிஸ்டுகள் கொஞ்சம் உதவுகின்றன, பாஸ்டன் பாலாவுக்கு அதற்காக நன்றி!

கொல்லப்புடி குறிப்பிடும் மற்ற புத்தகங்கள்
விஸ்வநாத சத்யநாராயணாவின் ஏகவீரா
புச்சி பாபுவின் சிவரகு மிதிலெதி
ரா.வி. சாஸ்திரியின் அல்பஜீவி
ஸ்ரீ ஸ்ரீயின் மகாபிரச்னம்
ஸ்ரீபாதா சுப்பிரமணிய சாஸ்திரியின் அனுபவாலு-ஞாபகாலு
கல்லகூரி நாரயனராவின் வரவிக்ரயம்
கொல்லப்புடி மாருதி ராவின் கல்லு, சாயங்காலாமாயிந்தி
வத்தேரா சண்டிதாசின் ஹிமஜ்வாலா
த்ரிபுரனேனி கோபிசந்தின் கதைகள்
தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் கெயிஷ்ந பக்ஷம்

Advertisements