ரொம்ப சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது. மாறுதலுக்காக கொஞ்சம் லைட்டான ஒரு போஸ்ட்.

காலேஜ் படிக்கும்போது எங்களுடன் நாகாலாந்தில் இருந்து ஒரு நண்பன் படித்துக் கொண்டிருந்தான். அவன் பேர் ஆல்வின் யூசுஃப் அலி கெவிசுஸா. டேய் நீ கிருஸ்தவனா முஸ்லிமா இப்படி குழப்பமா ஒரு பேர் வச்சிருக்கியே என்று கிண்டல் செய்வோம். (கிருஸ்தவன்). ஆறடி உயரம், மொட்டைத் தலை, ஆஜானுபாகுவாக செக்கசெவேல் என்று ஸ்டைலாக இருப்பான். ஒரு நாள் அவன் ரூமில் நாகாலாந்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தோம். அவன் ஒரு அங்கமி நாகா. அவனது தாய்மொழியின் பேரும் அங்கமி. மொத்தம் 17 dialects உள்ள மொழியாம். இவனுக்கு ஒரே குறை – எல்லாருக்கும் இவன் பேசும் அங்கமி புரியுமாம், ஆனால் மற்ற dialects எல்லாம் புரிந்து கொள்வது இவனுக்கு கஷ்டமாம்.

சரிடா எங்களுக்கு அங்கமியில் நாலு வார்த்தை சொல்லிக் கொடு என்று கேட்டோம். சரி என்று இவனும் ஆரம்பித்தான். இவனை சுற்றி ஐந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அம்மா என்று அங்கமியில் எப்படி சொல்வது என்பதிலிருந்து ஆரம்பித்தான்.

ஆல்வின்: mmm
நாங்கள் எல்லாரும் கோரசாக: mmm
ஆல்வின்: Not mmm, but mmm!
மீண்டும் கோரஸ்: mmm
ஆல்வின்: Guys, Not mmm! mmm!
கோரஸ்: mmm!
ஆல்வின்: Guys! Guys! Say mmm!
கோரஸ்: mmm!
ஆல்வின்: You fools! mmm!
கோரஸ்: போடா நீயுமாச்சு ம்ம்மும் ஆச்சு!

அத்துடன் எங்கள் அங்கமி கற்றுக் கொள்ளும் முயற்சி முடிந்தது!

P.S. இன்று கூட அவன் எங்களை சும்மா கலாய்த்தானா இல்லை எங்களுக்கு நிஜமாகவே ம்ம்ம் சொல்ல வரவில்லையா என்று தெரியாது.

Advertisements