பரிதிமால் கலைஞர்

பரிதிமால் கலைஞர்

இது தமிழம் இணைய தளத்தில் கிடைக்கிறது. நூறு பக்கங்கள் இருக்கலாம். சின்ன புத்தகம்தான். மாத நாவல் சைஸ்தான் இருக்கும். அந்த காலத்து புஸ்தகம் ஆயிற்றே என்று படித்துப் பார்த்தேன்.

தாவு தீர்ந்துவிட்டது. பரிதிமால் கலைஞர் பயன்படுத்துவது பண்டிதத் தமிழ். அதை புரிந்து கொள்ளவே கோனார் நோட்ஸ் வேண்டி இருக்கிறது. ஒரு முப்பது பக்கம் தாண்டிய பிறகுதான் ஒரு மாதிரி குன்சாக புரிகிறது. கதையில் சுவாரசியம் என்பது இல்லவே இல்லை.

இந்த கால கட்டத்தில்தான் பாரதியார் எழுதி இருக்க வேண்டும். அட பாரதியை விடுங்கள், வேதநாயகம் பிள்ளை கூட இதை விட சுலபமான தமிழில் இதை விட சுவாரசியமாக எழுதி இருக்கிறார். இத்தனைக்கும் பரிதிமால் கலைஞர் தமிழ் அறிஞர், முன்னோடி என்று புகழப்படுபவர். ஏன் இப்படி படுத்துகிறார்? பாரதிக்கு தமிழ் உலகம் பெரும் கடமைப்பட்டிருக்கிறது – இந்த மாதிரி பண்டிதத் தமிழிலிருந்து வெளியே வந்ததற்கு.

இவரை பற்றி தமிழ் விக்கிபீடியா.

Advertisements