நீங்கள் ஹாரி பாட்டர் விசிறியா? Muggles என்றால் என்ன என்று உங்களுக்கு அப்போது தெரிந்திருக்கும். டிக்ஷனரி.காம் தளம் Muggles என்றால் “a person without magical powers” என்று சொல்கிறது. நானும் இது ஜே.கே.ரௌலிங் புதிதாக தோற்றுவித்த ஒரு வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு பழைய துப்பறியும் கதைகள் – குறிப்பாக 1890-1940 கால கட்டத்தில் எழுதப்பட்ட ஆங்கில துப்பறியும் கதைகள் மிகவும் பிடிக்கும். எர்நெஸ்ட் பிரம்மா எழுதிய மாக்ஸ் காரடோஸ் கதைகள் எனக்கும் மிகவும் பிடித்தமானவை. மாக்ஸ் காரடோஸ் ஒரு குருடர். ஆனால் அவருடைய மற்ற புலன்கள் நன்றாக வேலை செய்யும். நன்றாக காது கேட்கும், அவரால் தொட்டு தொட்டே பெரிய எழுத்துகளை படிக்க முடியும் இது போல.

நேற்று என்னிடத்தில் உள்ள ஒரு பழைய கதை தொகுதியை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் The Ghost at Massingham Mansions என்று ஒரு கதை. ஆளில்லாத ஒரு அபார்ட்மென்டில் தானாக விளக்கு எரிகிறது, தண்ணீர் பாத்ரூமில் ஓடுகிறது. யாராவது வீட்டுக்குள் நுழைந்தால் விளக்கு அணைந்துவிடுகிறது, தண்ணீர் நின்றுவிடுகிறது. அதிலிருந்து ஒரு பகுதியை அப்படியே கீழே தந்திருக்கிறேன். காரடோஸ் கூறுகிறார்:

When I was a boy, I used to be extremely fond of ghost stories, I remember, but even when reading them I always had the uneasy suspicion that when it came to the necessary detail of explaining the mystery I should be defrauded with some subterfuge as ‘by an ingenious arrangement of hidden wires that artful muggles have contrived’, etc.,…

முன்னால் படித்திருந்தாலும் இப்போதுதான் Muggles என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்படுவது கண்ணில் பட்டது. இந்த கதை 1914-க்கு முன்னால் வந்திருக்கிறது!

டிக்ஷனரி.காம் Muggles என்ற வார்த்தைக்கு சொல்லும் அர்த்தங்களை இங்கே காணலாம். இந்த வார்த்தைக்கு கஞ்சா என்று கூட ஒரு அர்த்தம் இருக்கிறதாம்!

Advertisements