ah1

“History is written by the winners”. 6 மில்லியன் யூதர்களோ, 50 மில்லியன் மரணங்களோ! யாருக்குத் தெரியும்! வெற்றிகண்டவர்கள் சொல்வது தான் உண்மையாகிவிடுகிறது. ஆனால் முன்னர் எழுதியது போல் ஹிட்லர் ஹிட் லிஸ்ட் நிச்சயமான ஒன்று. இவருடைய நாஜி இயக்கம்  மண்ணை மதித்தது. மனிதர்களை மிதித்தது. இவர்களிடம் யூதர்கள் மட்டும் அல்ல, கம்யூனிஸ்டுகள், பிற நாட்டவர்கள், ஜெர்மனியர்கள் என்று எல்லோரும் கொடுமையை அனுபவித்தார்கள். தங்கள் உயிரைக் கூட சந்தை சரக்கு போல் தான் பாவித்தார்கள். ஹிட்லர், ஈவா ப்ரான், ஜோசெஃப் கெப்பல்ஸ், மற்றும் அவரது மனைவி, இவர்கள் இறந்தது வேறு வழியில்லாமல் தான். ஆனால் கெப்பல்ஸின் குழந்தைகள்? அவர்களை எங்காவது அனுப்பியிருக்கலாமே? சொர்க்கம் தான் சிறந்த இடம் என்று நினைத்து விட்டார்கள் போலும். நாஜிக்கள் மற்றும் முசோலினியின் கொடுமைகளை Schilndler’s List, Life Is Beautiful (Italy) திரைப்படத்திலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

இவை ஒரு புறமிருக்க, நல்ல முறையில், உலகத்திற்கு ஹிட்லரின் பங்களிப்பு ஏதேனும் உள்ளதா? இவரது கால்த்தில் ஜெர்மனியின் சில நல்ல திட்டங்கள் உருவாகின என்று படித்திருக்கிறேன். 1921லிருந்து கீழே சரிந்த ஜெர்மனியின் பொருளாதாரம் 1933வரையில் சரிந்தே இருந்ததாகவும், பிரெசிடெண்ட் ஹிண்டென்பர்க் வேண்டா வெறுப்பாக ஹிட்லரரிடம்  பதவியை கொடுத்தப் பிறகே வேகமாக முன்னேறியதாகவும் தெரிகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம் பல விழுக்காடுகள் முன்னேற்றம் அடைந்ததாகவும், ஜெர்மனியின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. செல்லாக் காசாகிவிட்ட டட்ச் மார்க் செல்லும் காசானது ஹிடலர் ஆட்சியில் தான். வெர்செயில்ஸ் உடன்பாட்டை (முதலாம் உலகப் போர் முடிவில் ஜெர்மனிக்கு விதிக்கப்பட்ட கப்பல் கட்டுமாண வரையரைகள் அடங்கியது) கிழித்தெரிந்துவிட்டு போர் கப்பல்களையும் யூ போட்களையும் கட்டிதள்ளினார். லுஃப்ட்வாஃபே போர் விமானங்கள் பல மடங்கு பெருக்கப்பட்டது. இவரது ஆரம்பக் கால உள் நாட்டு வெற்றிகள் பலருக்கு கடுப்பை கிளப்பியது. அப்பொழுது தான் அமேரிககாவும் பிற மேலை நாடுகளும் க்ரேட் டிப்ரஷனில் வறுக்கப்பட்டு வத்தலாகி கொண்டிருந்தார்கள். ஹிட்லரின் வித்தைகள் புரியாமல் குழம்பினார்கள். அவருடைய போர் ஆயத்தங்கள் அனைத்தும் மிகவும் மறைமுகமாகவே நடந்தது இவர்கள் குழப்பத்திற்கு ஒரு காரணம்.

ஜெர்மனியின் ஆட்டோ-பான் ஹிட்லரால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கார்கள் ஜெர்மனியின் ஹைவேக்களில் ஒடுவதைவிட  போர் விமானங்கள் எந்த இடத்திலும் டேக் ஆஃப், டச் டவுன் செய்ய வசதிகள் இருக்கவேண்டும் என்ற ஹிட்லரின் கனவின் விளைவே இந்த ஆட்டோ-பான். பின்னாளில் இதுவே இவருக்கு வினையாகவும், ட்வைட் எய்சன்ஹவருக்கு வசதியாகவும் முடிந்தது. இதில் மயங்கிய எய்சன்ஹவர் அமேரிக்க ஜனாதிபதியான பிறகு அமேரிக்கா முழுவதும் ஹிட்லரின் பாணியில் ஃப்ரீவே முறையை கொண்டு வந்தார்.
”அச்சு”க்களின் (The Axes) உருப்பினர்களான முசோலினிக்கும் (இத்தாலி), சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவிற்கும் (ஜப்பான்) தனது தொழில்நுட்பங்களை தந்து, தாரளமாக பகிர்ந்துக் கொண்டார். இத்தாலியின் ஆட்டோ-ஸ்ட்ராட்டாவும் இந்த பகிர்வினால் உருவானது.

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் டாக்குமெண்ட் செய்யப்பட்டிருந்தது. நியூரம்பெர்க் ட்ரயலின் போது பல நாஜி கோப்புகளைப் பார்த்து வல்லுனர்கள் ஆச்சரியம் அடைந்ததாக தெரிகிறது. அதாவது நாஜிக்கள் எரித்தது போக மீதமிருந்த கோப்புகளைப் பார்த்தே இப்படி ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

ஹிட்லரின் பேன்-ஜெர்மனியா ஆசை (ambition) பற்றி எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பிரிட்டிஷ் 300 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் பொழுது ஜெர்மனி ஆசைப்படக் கூடாதா என்ன? ஆனால் நினைத்து நடக்காததால் வெறிப்பிடித்தவாறு நடந்துக்கொண்டது மன்னிக்கமுடியாதது.

மகாத்மா காந்தியின் ஒரு குணமாவது ஹிடலரிடம் இருந்ததா? சில இருந்தது. புலால் உண்ணாமை, மது அருந்தாமை, புகைக்காமை. ஒரு வித்தயாசமான குணம் – அளவுக்கு அதிகமாக கோபம் வந்துவிட்டால், கார்ப்பெட்டை கடிப்பாராம். வித்தியாசமான மனிதர்தான்.

Advertisements