அந்நாட்களில் (ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது) நண்பர்கள் விவாதங்கள் (விவாதனை என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டா? – ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரியவில்லையென்றால் உடனே ஆன்லைன் டிக்‌ஷ்னரியை ரெஃபெர் செய்துக்கொள்கிறேன். தமிழில் எப்படி சரி பார்ப்பது என்று தெரியவில்லை) சாண்டில்யனே சிறந்த சரித்திர நாவலாசிரியர் என்றும் பிற ஆசிரியர்களெல்லாம் அவருக்கு பிறகுத்தான் என்றும் அமையும். எம்ஜியார், சிவாஜி போல் இதிலும் ஒரு போட்டி உண்டு.  (அட்லீஸ்ட் எங்கள் வட்டத்திலாவது இருந்தது).  அந்தப் போட்டிக்கு காரணம் கோவி. மணிசேகரன் என்ற நாவலாசிரியர். அன்று எனக்கு சாண்டில்யன் எழுத்துக்கள் புரியாத்தாலோ என்ன்வோ நான் கோவி. மணிசேகரனனை ஆதரிக்கும் கட்சியிலிருப்பேன்.  🙂 வாக்கு வாதங்கள் மிகவும் கிண்டலாகவும், காட்டமாக இருக்கும்.  அதை நினத்துப் பார்த்தால் அந்த காலங்கள் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. எவரும் கோவி. மணிசேகரனை பற்றி பேசுவது போல் தெரியவில்லை. உண்மையில் எங்கள் வட்டத்தை தவிர அவர் அவ்வளவு பாப்புலர் இல்லையா? இல்லை தமிழ் இலக்கிய உலகம் அவரை புறக்கணித்து விட்டதா? அல்லது மறந்துவிட்டதா? இல்லை அவரை பற்றி பேசுவது என் கண்ணில் படவில்லையா?