முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் மரணம் அடைந்தார். ஆர்வி என்ற பெயரில் புகழ் பெற்றவர் அவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்.

ஆர்வி தமிழ் நாட்டின் தொழில் துறையில் சாதித்தவர். சிவகாசி, கோயம்புத்தூர், திருப்பூர், ஹோசூர் போன்ற இடங்களில் தொழில் வளம் பெற அவர் ஒரு முக்கிய காரணம். அவர் காலத்து சிந்தனைகளின் படி அவர் அரசு சார்ந்த தொழில் நிறுவனகளை உருவாக்கினார். தமிழ் நாடு அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

அவர் மத்திய அமைச்சராக ஏதோ குப்பை கொட்டினார். பிரமாதமாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

ஜனாதிபதியாக அவர் ராஜீவ், வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என்று நான்கு பிரதமர்களைப் பார்த்தவர். ராஜீவிடம் அவர் எதிர்பார்த்த மெச்சூரிடி இல்லை என்று எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய My Presidential Years என்ற புத்தகத்தை தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது வாழ்வின் minutiae – ஜன்னல் திரைகளை மாற்றப்பட்டன, ரோஜா செடிகள் வைக்கப்பட்டன என்ற மாதிரி – பற்றி வெகு விபரமாக எழுதி இருப்பார். இதில் அடுத்தவர்களுக்கு என்ன சுவாரசியம் என்று அவர் யோசிக்கவே இல்லை.

என் மாமனார் ஏதோ ஒரு தேர்தலில் அவருக்காக வேலை பார்த்திருப்பதாக ஒரு முறை சொன்னார்.

Advertisements