Did you see this game? Did you see this game?

இந்த மாதிரி கேம்களாலதான் செஸ் மேல ஒரு பைத்தியமே வருது. ஆனந்த் இந்த மாதிரி விளையாடி ரொம்ப நாளாச்சு. இப்பல்லாம் அவர் அவ்வளவு ரிஸ்க் எடுக்க விரும்பறதில்லே. இப்பல்லாம் டோபோலோவ்தான் ரசிகர்களை கவர்கிற மாதிரி விளையாடுகிறார். எப்படி சொல்றது, கிராம்னிக் ராகுல் திராவிட் மாதிரி. ஆனந்த் இப்போதைய டெண்டுல்கர் மாதிரி – ஒரு காலத்தில எல்லா கேம்லயும் ஜெயிக்க முயற்சி செய்வார். இப்பல்லாம் அப்படி இல்லை. டோபோலோவ் அந்த காலத்து டெண்டுல்கர் மாதிரி விளையாடறார்.

நான் பெரிய பிளேயர் இல்லை. ஆனா ஹைதராபாத் நகர செஸ் சாம்பியன்ஷிப்புல இணை ஆறாவது இடம் வாங்கி இருக்கேன். எட்டு பேர் டை ஆறாவது இடத்துக்கு – இருபது வருஷத்துக்கு முன்னால, ஆனா இன்னும் பெருமை அடிச்சுக்கலாம். பி.டி.எஸ். கிரிநாத் – பின்னால நேஷனல் ஏன் லெவல்ல விளையாடி இருக்கார் – முதல் இடம்.

எனக்கு மேரன் ஓபனிங் எல்லாம் தெரியாது. நான் ஆன்னு பாக்க ஆரம்பிச்சது 18ஆவது மூவ்ல. கிராம்னிக் சும்மா ஒரு பிஷப்பை ஸாக்ரிஃபைஸ் பண்ணிட்டார். என் மர மண்டைக்கு ஒண்ணும் புரியலே. என்னடா கிராம்னிக் ஒரு பீஸை விட்டுட்டாரேன்னு யோசிச்சேன். என்னெல்லாமோ கால்குலேட் பண்ணி பாத்தேன், ஒண்ணும் பிடிபடலே. ஆனந்த் அந்த ஸாக்ரிஃபை ஸை ஏற்றுக்கொண்டதும் சரி அண்ணாத்தைக்கு இன்னிக்கு ஓசில ஒரு வின் போலன்னு நினச்சேன். க்ராம்னிக்கோட அடுத்த மூவ் மரண அடி. க்ராம்னிக்குக்கு இரண்டு பான் கிடைக்கப்போவுது. கிராம்னிக் நான் நினைச்சபடிதான் ஆடினார். When the dust settled down, Kramnik was indeed two pawns up. அதுவும் two connected, passed pawns on the queenside.

என்னடா ஆனந்த் இப்படி கோட்டை விட்டுட்டாரேன்னு ஒரே சோகம். ஆனந்தோ ஒரு திட்டத்தோடதான் ஆடிக்கிட்டு இருக்கார். Kramnik was two pawns up, but his king was exposed. So was Anand’s king, but Anand’s pieces were all trained on the exposed king of Kramnik. நமக்கு அதெல்லாம்தான புரியமாட்டேங்குது? ஆனந்த் அதை கால்குலேட் பண்ணி அவர் கிங்கை சூப்பரா மடக்கினார். அவரோட மிச்சம் இருந்த யானை மெதுவா ஜி ஃபைலுக்கு வந்தது. கமேண்டேட்டர் எல்லாம் ஆனந்துக்கு அட்வான்டேஜ் அப்படின்னு சொல்லறாங்க. எனக்கு இன்னும் என்ன அட்வாண்டேஜ்னு புரியல. 31ஆவது மூவ்லதான் கொஞ்சம் கொஞ்சம் க்ளிக் ஆச்சு. அது வரைக்கும் நான் க்ராம்னிக்தான் ஜெயிப்பார்னு நினச்சேன். அப்போதான் ஓரளவு ஆனந்தோட மனசில என்ன இருக்குன்னு புரிய ஆரம்பிச்சது. 33ஆவது மூவ்ல கிராம்னிக் blundered, ஆனந்த் missed a mate. ஆனா ஆனந்த் ஜெயிப்பது உறுதின்னு தோணிச்சு.

அப்புறம் கிராம்னிக் ஒரு swindle முயற்சி பண்ணி பாத்தார். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனா ஆனந்துக்கு இந்த மாதிரி பொசிஷன் எல்லாம் ஜுஜுபி.

கேம்னா இது கேம். இங்க பாருங்க, நல்லா விளக்கி இருப்பாங்க.

சின்ன வயசில ஆனந்த் ஸ்கூல் படிக்கும்போது அவர் சென்னையில சோழா ஹோட்டல் பக்கத்தில இருக்கும் தால் செஸ் க்ளப்பில செஸ் ஆடும்போது பார்த்திருக்கேன். அப்ப அவருக்கு ஒரு பனிரண்டு வயசு இருக்குமோ என்னவோ. ஆனால் அப்பவே அவரும் டி.எஸ். ரவி என்ற அவரை விட ஒரு சின்னப் பையனும் பெரிய லெவல்லே வருவாங்கன்னு எல்லாரும் சொல்வாங்க. ஆனந்த் சும்மா ஒரு skittle கேம் விளையாடினாலே அதை பாக்க கூட்டம் ஜேஜேன்னு நிக்கும். அன்னிக்கு நாங்க எல்லாம் நினச்ச மாதிரியே இன்னிக்கு அவர் ஆக இருப்பது பெரிய சந்தோஷங்க!

Advertisements